இடுகைகள்

செப்டம்பர் 24, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா?

உங்கள் மொபைல் போன் திருடு போய்விட்டதா? அல்லது கவனக் குறைவாகத் தொலைத்துவிட்டீர்களா? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். நீங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net . இதில் உங்களது பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண் ஆகிய தகவல்களை தர வேண்டும். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்ப...

ஆற்று மணலில்

சாபம் அசிங்கமாக இருப்பதாய்ச் சொல்லி ஆற்றங்கரையிலிருந்து ... அப்புறப்படுத்தினார்கள் எங்கள் வீடுகளை. அழகூட்டுவதாய்ச் சொல்லி அங்கேயே கட்டிக்கொண்டார்கள் அவர்களின் மாடிகளை. கடலுக்குப் போய்விடும் கவலை வேண்டாமெனச் சொல்லி கழிவுகளைக் கொட்டினார்கள். குளிர்பான ஆலைக்கு வேண்டுமென குழாய் பதித்து நீரை உறிஞ்சினார்கள். அப்போதெல்லாம் ஆற்று மணலில் அழுது புரண்டபடி 'மாரியாத்தா கேட்பாள்’ என மண்ணை வாரித் தூற்றுவாள் அம்மா. இன்று அவள் வாரித் தூற்றிய மண்ணையும் வாரிக்கொண்டு போகிறார்கள் லாரிகளில். என்ன செய்வார்கள் இனி... அம்மாவும் மாரியாத்தாவும்! - கண்மணி ராசா

ரீபைண்ட் ஆயில்( Refined oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison )

ரீபைண்ட் ஆயில்( Refined oil) - மெல்லக்கொல்லும் நஞ்சு( slow poison ) ரீபைண்ட் ஆயில் பயன்படுத்தாதிங்க! நோயை விலை கொடுத்து வாங்காதிங்க ! நாமெல்லாம் நினைக்கிறது போல ரீபைண்ட் ஆயில்னா சுத்திகரிக்க பட்ட எண்ணெய் மட்டும் இல்லங்க சுத்தமா உயிர் சத்துகளே இல்லாத எண்ணெய். ரீபைண்ட் ஆயில் எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? மில்லில் இருந்து பெறப்பட்ட எண்ணெய்யில் காஸ்டிக் சோடாவை சேர்த்து கொதிக்க வைத்து முதலில் அதிலிருந்து சோப்பு எடுக்கிறார்கள். பிறகு அதிகம் இருக்கும் காஸ்டிக் அமிலத்தின் மூலம் அகற்றி நீயூட்ரலைஸ் செய்து அதில் இருக்கும் வாசனையை அறவே நீக்கிவிடுகிறார்கள். பிறகு அதை சால்வெண்ட் எக்ஸ்ட்ராக்சன் மூலம் பிரித்து எடுக்கிறார்கள். இதை எல்லாம் நேரில் பார்த்தால் நம்மில் பலருக்கு சாப்பிடவே பிடிக்காது. திரைமறைவில் நடக்கும் இந்த வேலைகள் எல்லாம் மக்களுக்கு தெரியாத காரணத்தால் " சுத்தம் செய்யப்பட்ட எண்ணெய் " என்று நினைத்து ரீஃபைண்ட் ஆயிலை உபயோகித்து கொண்டு இருக்கிறார்கள். உண்மையில் ரீஃபைண்ட் ஆயில் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். சமையலுக்கு இதை பயன்படுத்தும் போது சூடு தாங்காம...