இடுகைகள்

ஆகஸ்ட் 11, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் காதலென்னும் தனிசுகம் Posted: 09 Aug 2012 01:54 PM PDT ஆசையெல்லாம் ஒன்றாகிப் பெண் வடிவம் எடுத்துவர நேசமெல்லாம் நிறைவாகி கண் இமையில் கனவு தர பாசவெள்ளம் கரைதொட்டு கண்மாயைத் தகர்த்துவிட தாசனுந்தன் தாள்பணியப் பேரின்பப் பரவசமே! கண்பார்க்கும் காட்சியெல்லாம் உன்னுருவாய் நான் பார்க்க பெண் இங்கே பேதையென மதிமயங்கித் தள்ளாட கன்னத்தின் செஞ்சிவப்பு நாணத்தின் மறு உருவாய் அன்பன் உந்தன் கைசேர முகம் காட்டும் நவரசமே! சாந்தி கொண்ட மனம் உந்தன் வருகைக்கு வழிபார்க்க பாந்தமாக அலங்கரித்து பதி மனதை எதிர்நோக்க ஏந்திழையாள் எண்ணம் போல என்னருகே நீயும்வர காந்தமென ஒட்டிக் கொள்ள காதலென்றும் தனிசுகமே! பார்த்த விழி பூத்திடாமல் பாதையில் நீ இணைந்திருக்க சேர்த்து வெச்ச ஆசையெல்லாம் செங்கரும்பாய் இனிமை தர ஆத்தங்கரை மேட்டினிலே ஆலமர நிழலினிலே பூத்திருக்கும் பூவைப்போல பூவை மனம் விரிந்திடுமே!!! - சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To...