புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்
புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள் புருசன்மார்களிடம் பொண்டாட்டிகள் கேட்க விரும்பும் கேள்விகள்ன்னு இந்த போஸ்ட்டை போடுறேன் (அப்பாவி ஆண்கள்லாம் என்னை மன்னிச்சுடுங்க..). 1. கல்யாணம் நிச்சயமான புதுசுல பர்த்டே, லவ்வர்ஸ் டே, வுமன்ஸ் டேன்னு ஏதேதோ சாக்கு சொல்லி வீட்டுக்கு வருவீங்க. ஆனால், கல்யாணம் ஆகிட்டாலோ எங்க பர்த்டே கூட மறந்து போகுதே! நிஜமாவே எங்களைத்தான் பார்க்க வருவீங்களா? இல்லை மச்சினிச்சியை பார்க்க வந்தீங்களா? 2. மீட்டர் 25 ரூபாய்க்கு மேல துணி எடுத்து சட்டை போடாத கஞ்சூஸ் நீங்க, மாமனார் துணி எடுக்கும்போது மட்டும் பார்க் அவென்யூ சர்ட்டும், ரேமாண்ட் ஃபேண்டும் தவிர வேறேதும் போடாத மாதிரி சீன் போடுறிங்களே எப்படி? 3.உங்க வீட்டு விசேஷத்துக்கு மட்டும் ஒரு வாரத்துக்கு லீவ் கிடைக்குது. ஆனால், எங்க வீட்டு விசேசத்தன்னிக்கு மட்டும் ஆடிட்டர் வந்துடுறார், இண்டெர்வியூ, மீட்டிங்க் ஏதாவது வந்துதுடுதே அதெப்படிங்க? 4. உங்க வீட்டு விசேசத்துல வாசல்ல வாழைமரம் கட்டுறது முதற்கொண்டு , மிச்சம் மீதி மளிகை சாமான் வண்டில ஏத்தி வீட்டுக்கு கொண்டு வந்து இறக்கும் வரை மாடா வேலை செய்யும் நீங்...