மது ஏன் குடிக்க கூடாது......?
மது ஏன் குடிக்க கூடாது......? இனியாவது குடிப்பீர்களா..? மது குடித்தவுடன் அதில் இருக்கும் ஆல்கஹால் ரத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. மற்ற உணவைப் போல இதை ஜீரணம் செய்ய வேண்டியது இல்லை. எளிதில் ரத்தத்தால் உறிஞ்சப்படும் ஆல்கஹால் தண்ணீரிலும், கொழுப்பிலும் கரையும் தன்மை கொண்டது. இதனால் விரைந்து உடல் உறுப்புகளுக்கு செல்கிறது. அதிலும் அதிக ரத்த நாளங்கள் மற்றும் அதிக நீர்தன்மை கொண்ட மூளைக்கு அதிக அளவு ஆல்கஹால் செல்கிறது. இது போல் கல்லீரலுக்கு செல்லும் ஆல்கஹால் டி ஹைட்ரோஜீனேஸ் என்ற என்சைமை ... சுரக்கிறது. இது ஆல்கஹாலை அசிட்டால்டிஹைட் ஆக மாற்றுகிறது. இது விஷத்தன்மை மிக்கது. இது உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது. இது மற்றொரு என்சை மான அசிட்டால்டிஹைட் டிஹைட்ரோஜீனேசை தூண்டுகிறது. இது விஷத்தன்மை கொண்ட அசிட்டால்டிஹைடை அசிட்டேட் அல்லது அசிட்டிக் ஆசிட் ஆக மாற்றி உடலில் இருந்து வெளியேற்றுகிறது. இந்த என்சைம் சுரப்பு குறைவாக இருப்பவர்களின் உடலை விட்டு ஆல்கஹால் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு வன்முறை நடவடிக்கை அதிகரிக்கும். வாந்தியை கட்டுப்படுத்தும் மூளை பகுதி பாதி...