சீரியல் தாய்
ஷேக் அப்துல்காதர்
சீரியல் தாய்
திரை மறைவில் சுகப் பிரசவங்கள் போய் இன்று ... கட்டுப் பணத்தோடு.. கட்டிலில் குறை பிரசவங்கள் இவர்கள் இன்றைய யுகத்து இயந்திரத் தாய்க்குலங்கள் இவர்கள் குழந்தை வளர்ப்பதே அலாதியானது... கருப்பை திறந்து. . . கண்கள் திறக்காத போதே ஆயாக்களைத் தேடும் அவசரத் தாய்க்குலங்கள் தாய்ப்பால் போய் தாதிப் பாலும் போய் வேதிப் பாலும் சிலநேரம் கள்ளிப்பாலும் புகட்டுகின்றனர் ஆம்..! இவர்கள் இன்றைய யுகத்து இயந்திரத் தாய்க்குலங்கள் இவர்கள் குழந்தை வளர்ப்பதே அலாதியானது!... " மெகா" சீரியல் முடிந்தும் சோகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் சமையலறை ஒருபுறமிருக்க சக்கர நாற்காலியில் நடை பயின்று FM சப்தத்தில் கண்ணயர்கின்றனர்! இக்கால மழலைகள்.