சந்தோஷம் தந்த சந்திப்பு
சந்தோஷம் தந்த சந்திப்பு Posted: 20 Dec 2009 09:06 AM PST மனம் முழுக்க எதிர்பார்ப்பு! ஏதோ ஒரு சிறு தயக்கம்!! எந்த இடம்...எந்த இடம்...? கண்கள் தேடியபடி நோக்க, தூரத்தில் சிரித்தது பேனர். சர்ரென்று என் ஸ்கூட்டியை கொண்டு நிறுத்தி, பார்த்தால், ஏகப்பட்ட பேர், டீ குடித்தபடி நின்றிருந்தனர். ஆஹா...இத்துணை பேரா? நம்மை தெரிந்து கொள்வார்களா? என்ன மாதிரி வரவேற்பு இருக்கும்??? திக் திக் என்று மனம் அடித்துக் கொண்டது. அதோடு, பெண்கள் யாரையும் காணோம்...கம்பெனிக்கு ஆள் இல்லாமல், நாம் மட்டும் மாட்டிக் கொண்டோமோ? நல்லவேளை என் பர்தாவை வைத்தே அடையாளம் கண்டு விட்டனர். படியேறினால், எல்லாரும் பேட்ஜ் குத்திக் கொண்டு...!மணி அப்போது 4.15. உள்ளே போனால், அங்கு பதிவர் ரம்யாவும், முருக.கவியும் அமர்ந்திருந்தனர். ஆஹா, இரண்டு பெண் வலைஞர்களாவது வந்திருக்கிறார்களே...சந்தோஷமாக அவர்கள் அருகில் போய் அமர்ந்தேன். சரியாக 4.30க்கு பங்ஷன் துவங்கியது. கதிர், வலைச்சரம் சீனா, பழமைபேசி, தமிழ்மணம் காசி, செந்தில், அகநாழிகை வாசுதேவன், பரிசல்காரன், வால்பையன், தண்டோரா, ஆரூரான், க.பாலாசி, கோடீஸ்வரன், வானம்பாடி, நாகா, ஜெர்ரி ஈசானந்த...