இடுகைகள்

செப்டம்பர் 11, 2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாயபு வீட்டு சரித்திரம் - 22

படம்
’என்’ எழுத்து இகழேல் <><><><><> சாயபு வீட்டு சரித்திரம் - 22 Posted: 10 Sep 2009 11:15 AM PDT (உலவும் மனிதர்களின் உண்மை கதை) "சின்னஞ்சிறிய வயதினிலே, மின்னல் போல புன்னகைகள்! கன்னல் சாறின் இனிமைபோல், எண்ணத்தூண்டும் பருவங்கள்!!" காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. வேகமாக சுழல்கிறது. நல்லது நடக்க வேண்டிய நேரத்தில் தானாக நல்லது நடக்கிறது. கெட்டது நடக்க வேண்டிய நேரத்தில், கெட்டது சொல்லாமல் வருகிறது. மர்ஜியா, ஆபிதா, பாஜிலா மூன்று பேரும் நல்ல விதமாகவே வளர்ந்தார்கள். தாய் இல்லாத குறை தெரியாமல், பாத்திமா ஒரு நல்ல தாயாக பிள்ளைகளை கண்ணுக்குள் போற்றி வளர்த்தார். எல்லாரும் ஓரளவுக்கு வளர்ந்து விட்டார்கள். சைதாவின் மகள் சுஹைனாவும், மர்ஜியாவும் ரொம்பவும் நெருக்கமான தோழிகள். இருவருக்கும் ஏகப்பட்ட வயது வித்தியாசம் இருந்தாலும், நல்ல நட்புக்கு வயது ஒரு தடையில்லையே! மூவரும் குணத்தால், தங்க கட்டிகள் என்று தான் சொல்ல வேண்டும். அதிலும், மர்ஜியா எப்பவும், வாயில் சிரிப்பு தான் அவங்கம்மாவைப் போலவே... ஆப்பிக்கு எப்போதும் படிப்பு, படிப்பு தான்... ப...