இடுகைகள்

பிப்ரவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரபு சீமையிலே... - 16

படம்
அரபு சீமையிலே... - 16 Posted: 27 Feb 2010 10:22 AM PST துன்மார்க்கம் தோற்க சன்மார்க்கம் தழைத்தது! கண்ணான நபிதந்த பொன்மார்க்கம் அழைத்தது!! முஸ்லிம்கள் எண்ணிக்கை பெருத்தது கண்டு வருத்தமிகக் கொண்டனர் குறைஷிகள்! முஹம்மதை(ஸல்) திருத்தவேண்டும் என்று நாடினர்! உத்பாவின் கருத்தை யாவரும் வேண்டினர்!! ஆசை காட்டலாம் – என்ற யோசனை சொன்னார் அவர்! அதன்படி, ஓசையின்றி மெல்ல சென்றார்- இறை தாசனவர் சந்நிதிக்கு!! "உயர்குடி பிறப்பே! – நமது பெயர்கெட நீரும், புதுமார்க்கம் தரவே – யாம் துயர்மிகக் கொள்கிறோம் - இதை அயர்வுடன் சொல்கிறோம்!! பொருள் வேண்டுமா? – சீமான் என்னும் பெயர் வேண்டுமா??? அருளோடு பதவி வேண்டுமா? இல்லை வேறேதேனும் உதவி வேண்டுமா??? அழகழகாய் பெண் வேண்டுமா? இல்லை மலையளவு பொன் வேண்டுமா??? உமக்கு மூளை பிசகலா? – அல்லது, பூத கணங்களின் சதியா?? வீண்பூசல் வேண்டாம்! உம்மாசை சொல்வீர் – அதை நிறைவேற்றச் செய்வோம்!!! கண்மணியாம் நபியும் புன்முறுவல் பூத்தார்! தண்மறையின் போதனையை தானோதச் செய்தார்!! தன்வழியில் அவர்சேர அன்பாக அழைத்தார்!!! இன்னதென புரியாமல் உத்பாவும் வி...

கண்ணில் தெரியும் கனவு

படம்
கண்ணில் தெரியும் கனவு Posted: 20 Feb 2010 10:40 AM PST வானவில்லே, இன்ப வானவில்லே! ....வரும் காலம் தோறும் கானம் நூறு, ....பாடும் ராகம் போடும் தாளம் ....கேட்கும் இந்த மண்ணிலே! ....அந்த சரணம் அங்கு விண்ணிலே!! நானுமங்கே, இன்று நானுமங்கே! ....கோலம் பாதி கோணம் மாறி, ....கூட்டை விட்டு வானில் தாவி, ....விண்ணில் வரைந்த கோலமே! ....என் எண்ணம் அதனுள் வாழுமே!! வான எல்லை, அங்கு வரைந்த வில்லே! ....கூத்தடிக்க கூட சேர்ந்து ....பாட்டிசைக்க பருவம் பார்த்து, ....நெஞ்சை அள்ளும் தோற்றமே! ....என் எண்ணம் அதனுள் வாழுமே!! கன்னித் தாமரை, கண்ணுக்கேன் திரை ....கூறும் உருவம் மாறும் பருவம் ....நீரில் அமுதம் தேடும் குமுதம் ....எண்ணம் மிதக்கும் கனவிலே! ....அது நீந்திச் செல்லும் நிலவிலே!! -சுமஜ்லா. ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!

அரபு சீமையிலே... - 15

படம்
அரபு சீமையிலே... - 15 Posted: 09 Feb 2010 05:14 AM PST இஸ்லாத்தைத் தான் ஏற்காத போதும், இன்முக சிறுதந்தை அபூதாலிப் அவர்கள், முரணாய் பேசிய மக்களிடமிருந்து, அரணாய் காத்தார் நபிகள் தன்னை!! அபூலஹப் மக்கள் உத்பா, உதைபா, நபியின் புதல்விகள் ருகையா, உம்மு குல்தூம் இவர்களை மணமுடித்திருக்க, தீனின் மீது கொண்ட வெறுப்பால் ஆணையிட்டார் மணவிலக்களிக்க!! எண்ணரும் துன்பங்கள் எல்லையின்றி தொடர்ந்தாலும், கண்ணென நபிகள் காத்தார் தீனை!! அண்ணல்நபிகளுக்களித்து வந்த கொடுமை அளவில்லாமல் பெருக, அடித்தும் படித்தும் துடித்திட வைத்தும், உடலுக்கு நோவினையும் மனதுக்கு வேதனையும் வரையின்றி தந்தனர்! குறையின்றி ஈந்தனர்!! இந்நாள் மதினா, அந்நாள் யத்ரிபு மக்கள் சிலரும் மக்கா ஏகி தக்கசன்மார்க்கத்தை தலையால் ஏற்றனர்!! எதிர்ப்பு அதிகப்பட தீன் வளர்ந்தது! ஏளனம் செய்யசெய்ய, பாரெங்கும் பரவுது!! அபூ ஜஹல் என்னும் அறிவீனத்தந்தை அளப்பரும் கொடுமைகள் பலப்பல செய்தான்! அண்ணல் பெருமானுக்கு ஆதரவு ஒரு புறம் ஆல்போல தழைக்க, எதிர்ப்பெனும் விருட்சமும் வேகமாய் வளர்ந்தது! இஸ்லாத்தை தழுவி, முஸ்லிமாக மா...

குழந்தை பாடல் - கண்ணே கலைமானே

படம்
குழந்தை பாடல் - கண்ணே கலைமானே Posted: 06 Feb 2010 09:05 AM PST கண்ணே கண்மணியே கண்ணுறங்கு லாஃபிரா பொன்மயிலே! ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்... ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம் ஆரிராரோ ஓ ஆரிரோ! பாசம் கொண்டோம் பண்பினை வளர்த்தோம் பைங்கிளி உனை நாம் கருத்தினில் நிறைத்தோம்! நீயொரு பிள்ளைகனி - லாஃபிரா பாத்திமா செல்லகிளி வசந்தங்கள் வாழ்த்தும் நேரமிது வாழ்வினில் சேரும் காலமது! கண்ணே கண்மணியே கண்ணுறங்கு லாஃபிரா பொன்மயிலே! ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்... ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம் ஆரிராரோ ஓ ஆரிரோ! வாழும் வாழ்வில் வளங்கள் காண்பாய் வாழ்த்தும் பாடலில், மகிழ்ச்சியில் திளைப்பாய் உணர்வில் உயிராய் நீ - என்றென்றும் உள்ளத்தில் நிறைந்திடுவாய்! கண்ணே உன் முகத்தில் கவிதைகளே! காண்கின்ற கண்கள் ஒரு கோடியே!! கண்ணே கண்மணியே கண்ணுறங்கு லாஃபிரா பொன்மயிலே! ஆசையுடன் உன்னை நாம் பார்க்கிறோம்... ஆண்டவனை இறைஞ்சி கேட்கிறோம் ஆரிராரோ ஓ ஆரிரோ! -சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: கண்ணே கலைமானே.. கன்னி மயிலென கண்டேன் உனை நானே.. அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன் ஆண்டவனே இதைத் தான் கேட்கிறேன் ...