இடுகைகள்

ஆகஸ்ட், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் மழை விட்டாலும் கருப்பு இடி விடவில்லை. Posted: 21 Aug 2010 02:03 PM PDT ஆள் அரவமற்ற சாலையில் டூவீலர் சீறிப் பறந்தது. "என்னங்க" "என்ன?" "என்ன இவ்ளோ ஸ்பீடா போறீங்க.....90 கி.மீ. ஸ்பீடாமீட்டர் காட்டுது...கொஞ்சம் மெதுவா போங்களேன்" "இல்ல கொஞ்சம் ஸ்பீடா போனா இருட்டறக்குள்ள போயரலாம்" வேகமாகப் பறந்த வண்டி ஒரு வளைவில் ஒரு லாரியை ஓவர்டேக் செய்ய, படக் படக் இதயத்தோடு உட்கார்ந்திருந்தேன். உடலில் பயங்கர அசதி...அதிகாலையில் கிளம்பி 100 கி.மீ.தூரம் டூவீலரில் பயணித்து, மேட்டுப்பாளையம் ப்ளாக் தண்டர் போய் ஜஸ்ட் லைக் தட்! ஒரே ஆட்டம் தான். உள்ளே போனவுடன் ஒரு சின்ன வளைவுக்குள் நாம் நுழைந்தால், நாம் அப்படியே தான் நிற்கிறோம், ஆனால் நம்மைச் சுற்றி அப்படியே வானவில்லின் வர்ணங்கள் ஜாலம் செய்ய, கண்ணையும் கருத்தையும் கவர்வதோடு, உலகமே நம்மைச் சுற்றுவது போல உணரச்செய்யும் விளையாட்டு. அடுத்து த்ரில்லேரியம். வானத்தில் நுழைந்து மேகத்தில் புகுந்து, அண்டசராசரியெல்லம் தாண்டி வெட்டவெளியில் வேற்று கிரங்களுக்கிடையே பயணித்து, கிரகங்களும் நட்சத்...