பெண்கள் புடவை
புடவை ஒரு பர்பெச்சுவல் கிப்ட். பெண்கள் என்ன படித்திருந்தாலும், எந்தப் பதவியில் இருந்தாலும், (முப்பதுக்கு மேல்) என்ன வயசாக இருந்தாலும் அவர்களிடம் எத்தனை புடவைகள் இருந்தாலும்…அவர்களுக்கு ஒரு புடவை பரிசளிக்கிற போது குழந்தை மாதிரி சந்தோஷப் படுகிறார்கள்.
சேலத்தின் பிரபல ஜவுளிக்கடை ஒன்றுக்கு நேற்று போயிருந்தோம்.
எதைப் பார்த்தாலும் “ப்ச்.. இது ஏற்கனவே இருக்கு” என்று ஒதுக்கிக் கொண்டிருந்தாள் என் மனைவி. பக்கத்தில் ஒரு பெண்கள் கூட்டம் உற்சாகமாக புடவைகளை தேர்ந்தெடுத்து குவித்துக் கொண்டிருந்தது.
“அங்கே பாரு. அவங்க ஆட்டிட்யூட்லேயே உப்பு-புளி-மொளகா மாதிரி மாசா மாசம் புடவை வாங்கற கூட்டம்ன்னு தெரியுது. அவங்க செலக்ட் பண்ண எந்தக் கஷ்டமும் படவில்லை.”
“அவ்வளவு வாங்கறப்ப ரிப்பெடிஷன் இருந்தா பரவாயில்லே.”
கஸ்டமரின் கஷ்டத்தைப் புரிந்து கொண்ட ஒரு சீனியர் ஊழியர் விடுவிடுவென்று வந்தார். அந்தக் கவுண்டரில் இருந்த பையனிடம்,
“என்னடா, கிளி ஜோஸ்யத்திலே கிளி சீட்டு எடுக்குற மாதிரி ஒண்ணொண்ணா காட்டிகிட்டு இருக்கே.. ”
என்று ஒரு பத்துப் பனிரெண்டு புடவைகளை எடுத்து ரம்மி ஆட்டத்தில் டிக்ளேர் செய்வது போல போட்டார். தொடர்ந்து என்னைப் பார்த்து
“இவன் பரவாயில்லைங்க, போன மாசம் அழகா இருக்குதேன்னு திருச்சூர் பொண்ணு ஒண்ணை இந்தக் கவுண்டர்லே வேலைக்கு போட்டிருந்தோம். வர்றவங்க இது என்ன புடவைன்னு கேட்டா போலி காட்டன்னு சொல்லி பயமுறுத்திகிட்டு இருந்திச்சு.” என்றார்.
மேலே பாலி காட்டன் புடவைகள் என்று போர்டு போட்டிருந்தார்கள்.
“ஏங்க, பெங்கால் காட்டன் இருக்கா?”
“அதோ ஹாங்கர்லே இருக்கு பாருங்க..அதெல்லாம் பெங்கால் காட்டன்தான்”
“ஹாங்கர் மட்டும்தானா?”
“ஹாங்கர் பிளாஸ்டிக்குங்க.. புடவைதான் பெங்கால் காட்டன்”
பெண்களே எனக்கொரு சந்தேகம்.
ஒவ்வொரு தரம் புடவை வாங்கும்போதும் புதுப் புது தினுசாகத்தான் வாங்குகிறீர்களா அல்லது சைக்கிள் ரிப்பீட் ஆகிற கால அவகாசம்தான் அதிகமானதா?
இந்த ஜெனரேஷன் பெண்களுக்குப் புடவையே கட்டத் தெரியவில்லை. அவர்களுக்கு என்ன கிப்ட் வாங்குவது?

கருத்துகள்