குழந்தை பாடல் - தங்கத்திலே ஒரு...


<><><><><><>

’என்’ எழுத்து இகழேல்


Posted: 13 Sep 2009 07:21 AM PDT


உள்ளத்திலே ஒரு கவலையில்லாமல்
உறங்கிடு ஆரிராரோ! - கண்ணே
செல்லத்துடன் உன்னை கொஞ்சிடுவோமே!
ஆரோ ஆரிராரோ! ஆரோ ஆரிராரோ!

பாசத்தின் முன்னே மரகதங்கூட
மதிப்பு தெரிவதுண்டோ?
பாசத்தின் முன்னே மரகதங்கூட
மதிப்பு தெரிவதுண்டோ?
நேசத்தின் செயலால் ஒன்றுபட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?!
மாற்றம் காண்பதுண்டோ?!

(உள்ளத்திலே)

கால்களினாலே வெண்மதிபோலே
தவழ்ந்து வர வேண்டும்!
கால்களினாலே வெண்மதிபோலே
தவழ்ந்து வர வேண்டும்!
உந்தன் புன்சிரிப்பாலே மலர்களைப் போலே
காட்சி தரவேண்டும்!
காட்சி தர வேண்டும்!

(உள்ளத்திலே)

கானக்குயில் போல மழலை மொழி பேசி
என்றும் உறவாடுவாய்!
கானக்குயில் போல மழலை மொழி பேசி
என்றும் உறவாடுவாய்!
உயர் பாசம் பெரிதென்று வாழும் நல்வாழ்வில்
அன்பு வழி கூறுவாய்!
அன்பு வழி கூறுவாய்!

(உள்ளத்திலே)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ?
சிந்தையும் செயலும் ஒன்றுபட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ?
மாற்றம் காண்பதுண்டோ?

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?

கால்களில்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா?
கால்களில்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா? - இரு
கைகளில்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா?
காதல் தரவில்லையா?

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?

காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன்
காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன் உயர்
மானம் பெரிதென்று வாழும் குலமாதர்
வாழ்வின் சுவை கூறுவேன்
வாழ்வின் சுவை கூறுவேன்

தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!