ஈத் முபாரக்


<><><><><><>

’என்’ எழுத்து இகழேல்


Posted: 19 Sep 2009 09:38 AM PDT


ஈத் முபாரக் என்று நாவினிக்க சொல்லும் இவ்வேளையில், ஆயிரக்கணக்கான சகோதரர்கள், இந்த இனிய நாளில், தம் ஊரை, உறவை பிரிந்து, அயல்நாட்டில் தனிமையில் பெருநாள் கொண்டாடுகிறார்கள். அவர்களுடைய உள்ளத்தில் ஊமையாய் எழும் தவிப்புகள் என்னவென்று அவர்களைப் போன்று அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். அவர்களுக்கு இந்த கவிதை மொழிபெயர்ப்பை காணிக்கையாக்குகிறேன்.

A Lover's Call XXVII
காதல் கூக்குரல்! - 27

Where are you, my beloved? Are you in that little
Paradise, watering the flowers who look upon you
As infants look upon the breast of their mothers?

அன்பே நீ எங்கே இருக்கிறாய்?
பண்பாய் பச்சை குழந்தைகள் தமது
தாயின் முலையை பார்ப்பது போல,
ஓயாமல் உன்னை பார்க்கும் அந்த
சுவனத்தின் அழகிய புஷ்பங்களுக்கு
கவனமாய் நீரை ஊற்றுகிறாயா??


Or are you in your chamber where the shrine of
Virtue has been placed in your honor, and upon
Which you offer my heart and soul as sacrifice?

இல்லை, என் இதயத்தையும்
தொல்லைதந்த ஆத்மாவையும்
நற்பலியிட்ட நான்மணிக்கூடம்,
எம்மான்குணத்தின் கருவறைஉறையும்
சிம்மாசனத்தில் சிங்காரமா நீ?


Or amongst the books, seeking human knowledge,
While you are replete with heavenly wisdom?

வானுலகத்தின் வியனறிவெல்லாம்
ஊணுடன்கலந்து உயிருடன் செறிக்க,
பூவுலகத்தின் மானுட அறிவை
புத்தகம் தன்னில் தேடுகி றாயா?


Oh companion of my soul, where are you? Are you
Praying in the temple? Or calling Nature in the
Field, haven of your dreams?

ஓ! என் ஆத்மாவின் உற்றதுணையே!
நீ எங்கே இருக்கிறாய் சொல்!!
கர்ப்பகிரகத்து கதவை தட்டிக்கொண்டா?
இல்லை,
உன் கனவுக்குவியலின் கொட்டறையான
இயற்கையை இதமாய் அழைத்துக் கொண்டா??


Are you in the huts of the poor, consoling the
Broken-hearted with the sweetness of your soul, and
Filling their hands with your bounty?

உடைந்து உதிர்ந்த உள்ளங்களை
துடைத்து துப்புரவாய் இணைத்து,
கனிவாலே கவலைகளை கரைத்து
ஏழைக்குடில்களை,
உன் பொக்கிஷத்தால் நிரப்பிக் கொண்டிருக்கிறாயா?


You are God's spirit everywhere;
You are stronger than the ages.

அறுதியாய் இறையொளி பரப்புகிறாய்,
உறுதியாய் காலத்தை வென்றுவிட்டாய்!


Do you have memory of the day we met, when the halo of
You spirit surrounded us, and the Angels of Love
Floated about, singing the praise of the soul's deed?

உள்ளத்தின் எழுச்சி ஒளியாய் பரவ,
வெள்ளமென காதல் தேவதைகள் யாவும்,
நற்செயல் புரியும் இதயத்தின் புகழை
சொற்சுவையோடு பாடலாய் இசைக்க,
இருவரின் சந்திப்பு நிகழ்ந்திட்ட அந்த
சிறப்புறு பொழுது நினைவிருக்கிறதா?


Do you recollect our sitting in the shade of the
Branches, sheltering ourselves from Humanity, as the ribs
Protect the divine secret of the heart from injury?

உள்ளத்து தெய்வீகரகசியம் தன்னில்
மெல்லிய கீறலும் விழாமல் காக்கும்,
விலாவின் எலும்புச் சட்டம் போல,
உலாவரும் மனிதபார்வையில் தப்ப,
மரத்தின் கிளையின் நிழலில் இருவரும்
ஒளித்தே காதல் மொழிகள் பேசிய,
நினைவில் புதைந்த நித்திய கணங்கள்
மனதின் கண்ணில் மறுபடியும் வருதா?


Remember you the trails and forest we walked, with hands
Joined, and our heads leaning against each other, as if
We were hiding ourselves within ourselves?

ஒருவருள் ஒருவர் ஒளிந்தபடியே
ஒருமித்து கரங்கள் ஒன்றாய் கோர்க்க,
சிரசுகள் இரண்டும் உரசிடும் வகையில்
சரமாய் காலடிதடங்கள் தோன்ற,
காட்டிலும் மேட்டிலும் காதல் புரிந்த
வாட்டிடும் அந்த நினைவுகள் வருதா?


Recall you the hour I bade you farewell,
And the Maritime kiss you placed on my lips?
That kiss taught me that joining of lips in Love
Reveals heavenly secrets which the tongue cannot utter!

சொல்லில் உரைத்திட இயலா அமுதம்,
சுவனத்து ரகசியம் உணர்ந்திட்ட தருணம்
உதடதன் சுவையை காதலாய் சுவைத்திட,
கரையில் முத்தம் பதித்திட்ட இதழும்
பிரியாவிடையை தந்திட்ட பொழுதும்,
உரக்க உரைக்குமே உந்தன் காதலை!!


That kiss was introduction to a great sigh,
Like the Almighty's breath that turned earth into man.

மண்ணை மனிதனாய் மாட்சிமைகொண்டு
மாற்றிட்ட படைத்தவன் சுவாசம் போல,
வெப்ப மூச்சின் வெளிப்பாடாக,
அறிமுகமானது உந்தன் முத்தம்!


That sigh led my way into the spiritual world,
Announcing the glory of my soul; and there
It shall perpetuate until again we meet.

ஆத்ம புகழை அறிவித்தபடியே,
ஆன்மீக உலகில் நுழைவித்த மூச்சு,
அடுத்த நமது சந்திப்பு வரையும்
நித்தியமாக என்னுள் நிறையும்!!


I remember when you kissed me and kissed me,
With tears coursing your cheeks, and you said,
"Earthly bodies must often separate for earthly purpose,
And must live apart impelled by worldly intent.
"But the spirit remains joined safely in the hands of
Love, until death arrives and takes joined souls to God.

"உலகவாசிகள் உலக காரியங்களுக்காக
விலகி இருப்பதில் தவறொன்றுமில்லை;
எனினும்,
ஆத்மாக்கள் இரண்டும் ஒன்றாய் இணைந்து,
மரணத்தின் சுவையை சுவைக்கும் வரையில்,
ஆவியில் கலந்து, காதலின் கரங்களில்
மேவியே இருவரும் இணைந்திருப்போமே!"
என்றாய் கன்னத்தில் கண்ணீர் வழிய!
முத்தச்சரங்கள் முகத்தில் கோர்க்க!
நினைவுகள் என்றும் நித்தியமாக,
நினைத்திருப்பேனே சத்தியமாக!!


"Go, my beloved; Love has chosen you her delegate;
Over her, for she is Beauty who offers to her follower
The cup of the sweetness of life.
As for my own empty arms, your love shall remain my
Comforting groom; you memory, my Eternal wedding."

காதலெனும் அழகி, தன்சேவகர்களுக்கு
சாதலில்லாத இனிமைகள் தருவாள்!
போ! என் உயிரின் உயிரே!
காதலின் பிரதிநிதியாக போய் வா!!
வெற்றுக்கரங்களில் உன் காதல்,
உற்றமணாளனாய் நிறைந்திருக்கும்!!
நிரந்தரமான திருமணமாக,
உன் நினைவலைகள் உறைந்திருக்கும்!!


Where are you now, my other self? Are you awake in
The silence of the night? Let the clean breeze convey
To you my heart's every beat and affection.

எங்கே இருக்கிறாய், என் மறுபாதியே?
இரவின் தனிமையில் விழித்திருக்கிறாயா?
என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பையும்
கலங்கமில்லாத காதல் அன்பையும்
சுகந்த தென்றல் காற்று
சுகமாய் உன்னிடம் சேர்க்கட்டும்!!


Are you fondling my face in your memory? That image
Is no longer my own, for Sorrow has dropped his
Shadow on my happy countenance of the past.

கனவில் என்முகம் வருடுகிறாயா?
இனியும் அவ்வுருவம் எனதல்ல...
கடந்த காலத்து வதனத்தின் மேலே
தடம் பதித்து விட்டது சோகத்தின் நிழல்!


Sobs have withered my eyes which reflected your beauty
And dried my lips which you sweetened with kisses.

உன்னழகை நிழலாக பிரதிபலித்த
என்விழி சிந்திய ஒளியெல்லாம்
விம்மலால் மங்கி மறைந்ததுவே!
உன்முத்தத்தின் இனிமையை இழந்ததனாலே,
இதழின் ஈரம் குறைந்ததுவே!!


Where are you, my beloved? Do you hear my weeping
From beyond the ocean? Do you understand my need?
Do you know the greatness of my patience?

அன்பே எங்கிருக்கிறாய்?
கடலைத்தாண்டி என் கதறல் கேட்கிறதா?
என் தேவையும் உனக்கு தெரிகிறதா?
பொறுமையின் அருமை புரிகிறதா?


Is there any spirit in the air capable of conveying
To you the breath of this dying youth? Is there any
Secret communication between angels that will carry to
You my complaint?

இறந்து கொண்டிருக்கும் என் இளமையின் மூச்சை
பரந்த வெளிதன்னில் பரவிட செய்ய,
உந்தன் இருப்பிடம் கொண்டு சேர்க்க,
எந்த வளிவெளிக்கு சக்தியுண்டு?!
என் முறையீட்டு குரலை முழுவதும் உணர்த்த,
தேவர்கள் தூது ஏதேனும் உளதா?


Where are you, my beautiful star? The obscurity of life
Has cast me upon its bosom; sorrow has conquered me.

எங்கே இருக்கிறாய்? என் அழகு தாரகையே!
வாழ்வின் இருள் என்னை தின்று விட்டதே!
சோகம் என்னை வென்று விட்டதே!!


Sail your smile into the air; it will reach and enliven me!
Breathe your fragrance into the air; it will sustain me!

காற்றில் உந்தன் புன்சிரிப்பை
மிதக்கச்செய்வாய் எம் அன்பே!
என்னை அதுவும் அடைவதனால்,
புத்துயிர் தன்னை தந்திடுமே!!
காற்றில் உந்தன் வாசனையை
மூச்சாய் வெளியே விட்டிடுவாய்!
தேடியே என்னிடம் சேர்வதனால்,
வாடிய நானும் உயிர் பெறுவேன்!


Where are you, me beloved?
Oh, how great is Love!
And how little am I!
Khalil Gibran

எங்கே இருக்கிறாய் என் அன்பே!
காதல் எத்துணை வலியது!
ஆனால்,
என் உளமோ எத்துணை மெலியது?!

-கலீல் கிப்ரான்
மொழிபெயர்ப்பு : சுமஜ்லா.

ஈத் முபாரக்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!