சீரியல் தாய்



ஷேக் அப்துல்காதர்

சீரியல் தாய்

 

திரை மறைவில்
சுகப் பிரசவங்கள் போய்
இன்று...
கட்டுப் பணத்தோடு..
கட்டிலில் குறை பிரசவங்கள்

இவர்கள் இன்றைய யுகத்து
இயந்திரத் தாய்க்குலங்கள்

இவர்கள் குழந்தை வளர்ப்பதே
அலாதியானது...
கருப்பை திறந்து...
கண்கள் திறக்காத போதே
ஆயாக்களைத் தேடும்
அவசரத் தாய்க்குலங்கள்

தாய்ப்பால் போய்
தாதிப் பாலும் போய்
வேதிப் பாலும் சிலநேரம்
கள்ளிப்பாலும் புகட்டுகின்றனர்
 

ஆம்..!
இவர்கள் இன்றைய யுகத்து
இயந்திரத் தாய்க்குலங்கள்

இவர்கள் குழந்தை வளர்ப்பதே
அலாதியானது!...
"மெகா" சீரியல் முடிந்தும்
சோகமாய் இயங்கிக் கொண்டிருக்கும்
சமையலறை ஒருபுறமிருக்க

சக்கர நாற்காலியில்
நடை பயின்று
FM சப்தத்தில்
கண்ணயர்கின்றனர்!
இக்கால மழலைகள்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!