Posted: 20 Nov 2009 06:16 AM PST
காலேஜ் அப்டேட்ஸ் எல்லாம் கொடுத்து ரொம்ப நாட்களாகி விட்டது.
எங்க க்ளாஸில் ரெகுலராக வருபவர்கள் மொத்தம் 70 பேர். நான் முதல் பெஞ்ச்!
காலேஜில் கேண்டீன் கிடையாது. கண்டிப்பாக லன்ச் கொண்டு போக வேண்டும். எதாவது ஒரு நாள் என்றால், பணம் கொடுத்து ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டுக் கொள்ளலாம்.
லேடீஸ் காலேஜ் என்றாலும், லெக்சரர்ஸ் ஜென்ஸும் இருக்கிறார்கள். முக்கால்வாசி பேர் சின்ன பசங்க. மேடமும் கூட நிறைய பேர் யூத் தான்.
காலையில், வீட்டில் இருந்து 8.45க்கு கிளம்பினால், 9.25க்கு காலேஜ் போய் சேர்வேன். 17 கி.மீ. 9.45க்கு பெல்!
லஞ்ச் டைம் 1.10 முதல் 1.50 வரை! மாலை 4.50க்கு காலேஜ் முடியும். நான் ஸ்பெஷல் பர்மிஷனில் 3.30 மணிக்கே கிளம்பி விடுவேன்.
ஒரு பத்து பேர் மட்டும் என்னுடைய வயதுக்காரர்கள். மீதி எல்லாரும் 21-25 வயதுக்குட்பட்ட ஜூனியர்ஸ். சோ எல்லாரும் என்னை அக்கா என்று தான் கூப்பிடுவார்கள்.
லெக்சரர்ஸ் கூட, என்னை 'மேடம்', 'மேடம்' என்று கூப்பிட்டு வந்தார்கள். நான் அப்படி கூப்பிட வேண்டாம், 'சுஹைனா' என்றே கூப்பிடுங்கள் என்று சொன்ன பிறகு மாற்றிக் கொண்டார்கள்.
நிறைய அசைன்மெண்ட் தருகிறார்கள். ஏதாவது சொன்னால், இண்டர்னல் மார்க்ஸ் என்று சொல்லி பயம் காட்டுவார்கள். நான் எல்லாம் முதல் ஆளாக முடித்து விடுவதால் பிரச்சினை இல்லை.
அடிக்கடி டெஸ்ட் வேற! இறைவன் கிருபையால், இது வரை வைத்த எல்லா டெஸ்ட்டிலும், நான் தான் வகுப்பில் முதல் மதிப்பெண். இதனால், கொஞ்சம் போட்டியும் பொறாமையும் உருவானதைத் தான் தவிர்க்க முடியவில்லை...இவள் நம்மை விட அதிகம் தெரிந்திருக்கிறாள் என்று லெக்சரர்களே சில சமயம் ஃபீல் பண்ணுவது தான் கஷ்டமாக இருக்கிறது. அதனால், இப்போதெல்லாம் கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொள்கிறேன்.
பக்ரீத்தை முன்னிட்டு போன செவ்வாய் கிழமை எல்லா ஸ்டாஃப்ஸுக்கும் பிரியாணி செய்து, காலேஜ் கொண்டு சென்று, மதிய விருந்து கொடுத்தேன்.
இதுவரை 5 ரெக்கார்டுகள் முடித்திருக்கிறேன். மொத்தம் 20 ரெக்கார்டுகள். அதெல்லாம் டீச்சிங் ப்ராக்டிஸ் போது தான் முடிக்கணும். அதாவது, 40 நாட்கள் ஏதாவது ஒரு கவர்ன்மெண்ட் பள்ளியில் நம்மை ப்ராக்டிஸ் செய்ய அனுப்புவார்கள். அப்போது, நிறைய சார்ட், மாடல் எல்லாம் செய்யணும். டெஸ்ட்டுக்கு படிக்க வேண்டியது இல்லை என்றாலும், இந்த வேலை நிறைய இருக்கும். அதோடு, நாம் வகுப்பில் எடுக்கும் பாடத்துக்கு ஏற்ப லெசன் ப்ளான் ரெக்கார்டு எழுதணும்.
எல்லாரும் எனக்கு ஃபிரண்ட்ஸ் தான். ஆனால், டியர் ஃபிரண்ட் என்று யாரும் இது வரை இல்லை. ஆப்ஷன் க்ளாஸ் என்று ஒரு பீரியட் வரும். அதாவது, மேத்ஸ், சைன்ஸ், இங்கிலீஷ் இப்படி என்ன மேஜரோ, அதற்கேற்ப பிரிந்து க்ளாஸ் அட்டெண்ட் செய்வோம். என்னுடையது இங்கிலீஷ் மேஜர். அதற்கு 12 பேர் இருப்பார்கள்.
ஒரே டெஸ்ட், அசைன்மெண்ட் என்று போர் அடித்தது. அதனால், சில்ட்ரன்ஸ் டே வை முன்னிட்டு ஒரு கல்சுரல் ப்ரோக்ராம் வைக்கலாம் என்று கேட்டோம். அனுமதி கிடைக்க வில்லை. எல்லாருக்கும் ஏமாற்றம். சரி, அவரவர் திறமையை தனித்தனியாக வெளிப்படுத்து ஒரு சின்ன ப்ரோக்ராம் செய்யலாம் என்று மேனேஜ்மெண்ட் சார், அவர் வகுப்பில் அனுமதி தர, அவசர அவசரமாக ஏற்பாடு செய்தோம்.
நான் காலேஜில் நடக்கும் விஷயங்களை வைத்து, ஒரு சின்ன ஸ்கிட் ரெடி செய்தேன். அதில் நான் தான் புலிகேசி. மேலே ஒரு ஜிகுஜிகு ஷால் போர்த்தி, தலையில் ஒரு தலைப்பாகை வைத்து ஐந்து நிமிடத்தில் புலிகேசி ரெடியாகி விட்டார். சொல்ல சொல்ல கேட்காமல், மீசை வேறு வரைந்து விட்டார்கள்...அந்த ஸ்கிட் கீழே தருகிறேன்.
/////இம்சை அரசன் 23-ம் புலிகேசி 30-ம் புலிகேசி ஆன கதை
அரசர் 23ம் புலிகேசி அரசவைக்கு வந்து கொண்டிருக்கிறார். சேவகன் கட்டியம் கூறுகிறான்.
ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் புலிகேசி பராக் பராக்
புலிகேசி: ,அடேய் நிறுத்து நிறுத்து என்ன சொன்னாய் மறுபடியும் சொல் பார்ப்போம்
சேவகன்: (நடுங்கியபடியே) மன்னா சரியாகத்தானே சொன்னேன்.சென்ற முறை தவறாக சொன்னதற்கு இண்டர்னல் மார்க்ஸ் குறைப்பேன் என்றீர்கள். அதற்குப் பின் தினமும் 25 முறை அசைன்மெண்ட் எழுதி படித்து விட்டுத்தான் வேலைக்கே வருகிறேன் மன்னா...
புலிகேசி:அடேய் என்னையா எதிர்த்துப் பேசுகிறாய்? இன்னொரு முறை சொல்!
சேவகன்: ராஜாதி ராஜ ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர ராஜகுல திலக ராஜ பராக்கிரம 23 ம் புலிகேசி பராக் பராக்
புலிகேசி: நிறுத்து இனி 23 புலிகேசி என்பதை 30 என மாத்திச்சொல்லு தெரிகிறதா? அப்படியே தினமும் 30 முறை அசைன்மெண்ட் எழுதிவா தெரிகிறதா?
சேவகன்:சரி மன்னா.. (மன்னர் சென்று விடுகிறார். சேவகன் தனக்குள்) ஒரு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடையாது. இந்த அரசவையில் எப்போது நம்மை வேலையை விட்டு தூக்குவார்கள் என்றும் புரியாது. ஆனால்.....
அமைச்சர்: என்ன உமக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறீர் சேவகரே?
சேவகன்: பிறகு என்ன அமைச்சரே! ஒரு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமில்லை! லைஃப் ரொம்ப போரடிக்குது! எப்போது பார்த்தாலும் மன்னர் அசைன்மெண்ட் எழுத சொல்கிறார். மன்னர் இடும் அராஜக சட்டங்களுக்கு பணிந்து பணிந்து....அதுவும் 30ம் புலிகேசி என்று இனி 30 முறை எழுதி வர வேண்டுமாம்....விரல்கள் எல்லாம் வீங்கி விட்டன. விழிகள் எல்லாம் சோர்ந்து விட்டன.
அமைச்சர்: என்னது 30ம் புலிகேசியா? 23ம் புலிகேசி தானே?! இதுவரை 23 சிம்மாசனங்களை உடைத்ததால் தான் 23ம் புலிகேசி என்று அழைக்கிறார்கள்.... எப்போது இவர் 30ம் புலிகேசி ஆனார்?
புலிகேசி: அமைச்சரே!
அமைச்சர்: மன்னா...என்னா...
தாங்கள் 23 தானே எப்போது எனக்குத் தெரியாமல் 30 ஆக மாறினீர்கள்?
புலிகேசி: நீ கேட்ட உடனே சொல்ல வேண்டுமா? நான் மன்னனா நீயா?
அமைச்சர்: சரி சரி கோபப் படாதீர்கள்
(இருவரும் அரசபைக்கு வருகிறார்கள்.)
அமைச்சர்: திடீரென்று ஏன் சபை கூட்டுகிறீர்கள் மன்னா? இது உங்கள் ஓய்வுக்காலம் அல்லவா? ராணிகளுடன் நீங்கள் டூயட் பாட வேண்டிய நேரமாயிற்றே???? எதிரி நாட்டான் யாரும் படையெடுத்து வருகிறார்களா?
புலிகேசி: அமைச்சா நான் சில முக்கிய தீர்மானங்கள் போட இருக்கிறேன் அதற்குத்தான் இந்த அவசர கூட்டம்
நம் சபையில் எத்தனை அமைச்சர்கள்?
அமைச்சர்:தலைமை அமைச்சனான என்னையும் சேர்த்து 36 பேர் மன்னா
புலிகேசி:உடனே 6 பேரை பதவி நீக்கம் செய்து 30 ஆக மாற்றும்...
அமைச்சர்: மன்னா ஏன்…
புலிகேசி: ஒரு துறைக்கு ஒரு அமைச்சர் போதும்...
அமைச்சர்: மன்னா....நம் அரசாங்கத்தில் மொத்தம் 33 துறைகள்....அதோடு, திடீரென்று போகச்சொன்னால், எங்கே போவார்கள்????
புலிகேசி: சரி, அவர்கள் வேறு வேலை தேடிக் கொள்ள, 30 நாட்கள் அவகாசம் கொடுத்து விடு! எப்போதும் ஓரிரு துறைக்கு அமைச்சர்கள் இருக்கவே கூடாது...இதெல்லாம் நம் அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள்...
அமைச்சர்: மன்னா, அமைச்சர்கள் இல்லாவிட்டால், மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்....
புலிகேசி: கேள்வி கேட்காதே. அதிகமாக பேசினால் எனக்கு பிடிக்காது.... ஆனால்.... வரியை மட்டும் பாக்கியில்லாமல் வசூலித்து விடு!
அமைச்சர்: மன்னா...நாம் இதுவரை 50 பொற்காசுகள் வரி வசூலித்து வந்தோம்...அதையும் 30 பொற்காசுகள் என்று மாற்றி விடலாமா?
புலிகேசி: வேண்டாம்...வேண்டாம்...அதை 60 ஆக மாற்றி, இரு தவணைகளில் முப்பது முப்பதாக செலுத்த சொல்லுங்கள்...
அது சரி மாதத்திற்கு எத்தனை நாட்கள்?
அமைச்சர்: சில 31 ,30,28 இப்படி
புலிகேசி: சரி எல்லாவற்றையும் 30 ஆக்கு.
அதோடு மாதத்துக்கு எத்துணை முறை அரசவை உறுப்பினர்களின் அறிவை சோதித்தோம்?
அமைச்சர்: வாரம் இரு முறை பரிச்சை வைத்துக் கொண்டிருந்தோம் மன்னா...
புலிகேசி: இனி எல்லாம் 30 ஆக மட்டுமே இருக்க வேண்டும்.இனி மாதம் 30 நாளும் பரிச்சை வைக்க ஏற்பாடு செய்! அதோடு இண்டர்னர் மார்க்ஸ் 20ஐ முப்பது ஆக மாற்றி விடு!
(அங்கத்தினர் மயங்கி விழுகிறார்கள்)
அமைச்சர்: ஆமாம் இந்த இலக்கியங்கள் எப்படி? ,இன்னா நாற்பது,இனியவை நாற்பது …..
புலிகேசி: நிறுத்து இனி அவை இன்னா 30,இனியவை 30 ஆக வழங்கப்படும்.
ஆமா இந்த திருக்குறள்?
அமைச்சர்:133 அதிகாரம் மன்னா
புலிகேசி:அதையும்…
அமைச்சர்:மன்னா வேண்டாம் அது தெய்வப் பொதுமறை அதில் கை வைக்காதீர்கள்.
அதிகாரத்துக்கு 10 வீதம் 1330 உள்ளது (30 ஐ அழுத்திச் சொல்ல)
புலிகேசி:சரி சரி இருந்து விட்டு போகட்டும்
(சபையின் மத்தியிலிருந்து ஒரு குரல் வருகிறது'அரசே உம்ம அந்தப்புரத்தில் ராணிகள் எத்தனை பேர்')
புலிகேசி: ஆஹா..ஆஹா நல்ல நேரத்தில் கேட்டாயடா எந்தங்கமே என் முன்னால் வா மகனே (வருகிறார்)
அமைச்சரே இந்த பண்டிதனுக்கு 30 பொற்காசுகள் சன்மானம் கொடு.அப்படியே ராணிகள் எண்ணிக்கையை சொல்லு;;
அமைச்சர்: 26 மன்னா
புலிகேசி: உடனடியாக இன்னும் நால்வருக்கு ஏற்பாடு செய்யும்.அப்புறம் நம் பற்களின் எண்ணிக்கை.....
அமைச்சர்: 32 மன்னா...ஆனால், தாங்கள் போரில் புறமுதுகிட்டு ஓடி வரும் போது, கல் தடுக்கி விழுந்து 2 பற்கள் உடைந்து விட்டன.
புலிகேசி: அப்படியா ரொம்பவும் நல்லது...இனி, அனைத்து குடிமக்களுக்கு 30 பற்கள் தான் இருக்க வேண்டும். அதிகமாக இருப்பதை தட்டி விட ஏற்பாடு செய்!
(அவையினர் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றனர். 'என்ன ரொம்பவும் அராஜகமாக இருக்கிறதே????' 'பல்லைக் காட்டாமல் பேசுங்கள்...தட்டி விட போகிறார்கள்....)
சேவகன்: என்ன எல்லாரும் கண்டிப்பாக பேசித்தான் ஆக வேண்டுமா? சற்று அமைதியாக இருங்கள்.
புலிகேசி: அப்புறம்....இந்த மீசைக்கார பாரதி எழுதிய 'முப்பது கோடி முகமுடையாள்' பாடலை நமது தேசிய கீதமாக்கி விடுங்கள்.
அமைச்சர்: சரி மன்னா....இப்போது தான் புரிகிறது, நீங்கள் 30ம் புலிகேசி ஆக எவ்வளவு சிரமப்பட்டு சிந்திக்கிறீர்கள் என்று!
புலிகேசி: ஹூம் இப்போது 30 மட்டும்தான்... இது மீண்டும் 50 ஆகக் கூட மாறும்.
(மன்னர் சென்று விடுகிறார்.)
அமைச்சர்: அய்யோ...அய்யோ.... இவர் இதுவரை 23 சிம்மாசனங்களை உடைத்ததால், தான் மக்கள் 23ம் புலிகேசி என்றார்கள்.... இனி இன்னமும் ஏழு சிம்மாசனங்களை தயாரிக்க சொல்ல வேண்டும்.
.- சுமஜ்லா.////
எல்லாம் செம்ம காமடி! அப்புறம் நான் ஓரிரு கவிதைகள் வாசித்து அப்ளாஸ் வாங்கினேன். எல்லாரும் அவரவர் தங்கள் திறமையை வெளிப்படுத்தினார்கள்.
டெஸ்ட், அசைன்மெண்ட் என்னும் ஹீட் குறைந்து மனதுக்கு இதமாக இருந்தது! அடுத்த புதன் முதல் டீச்சிங் ப்ராக்டிஸ் என்கிறார்கள். சி.ஓ. ஆர்டர் தந்து விட்டால், போய் விடுவோம். இல்லாவிட்டால், இன்னமும் ஒரு பதினைந்து நாட்கள் ஆகும்! அப்படி போக வில்லை என்றால், யூனிட் டெஸ்ட் ஆரம்பித்து விடும்.
வகுப்புக்கு நான் தான் லீடராக இருந்தேன். பிறகு என்னால், முடியவில்லை என்று (ஓய்வு நேரத்தில் படிக்க முடிவதில்லை) வேறு ஆள் போட சொல்லி விட்டேன். எல்லாம் ஜாலியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், ஒரு சிலர் மட்டும்(லெக்சரர் உட்பட) தம்மிடம் உள்ள தாழ்வு மனப்பான்மையின் காரணமாக, என் திறமையின் மேல் பொறாமை கொண்டு என்னை துச்சமாக மதிப்பதைத் தான் என்னால் ஜீரணிக்க முடிவதில்லை! உலகத்தை புரிந்து கொள்ள, இது ஒரு வாய்ப்பு எனக்கு! அந்த மன உளைச்சல் காரணமாகவும், எம்.ஏ.எக்ஸாம்ஸுக்கு(டிசம்பரில் எக்ஸாம்) படிப்பதற்காகவும் தான் மூன்று நாட்கள் லீவு போட்டிருக்கிறேன்.
கடைசியாக, எங்கள் மேடம் சொன்னது, "சுஹைனா...உங்களுக்கு வகுப்பு தோழிகளை விட இண்டர்நெட் ஃப்ரெண்ட்ஸ் தான் ரொம்ப பிடிக்கிறது..." இதை அவர் ஒரு குறையாத் தான் சொன்னார். 'ஆமாம்...அதில் என்ன தவறிருக்கிறது? அது தன்னலம் பாராத நட்பு!' என்றேன். சரி தானே?!
-சுமஜ்லா.
|
Posted: 19 Nov 2009 08:13 PM PST
பிஞ்சு பருவத்திலே
பெற்றோரை இழந்து விட – தன்
நெஞ்சில் தாங்கி வளர்த்தார்,
பாட்டன் அப்துல் முத்தலிப்!
தாயற்ற பிள்ளையை
தான் வளர்த்து வந்தாலும் – தான்
நோயுற்ற காரணத்தால்
அபூதாலிபிடம் ஒப்படைத்தார்!
சிறப்பாய் தன் பேரரை
உவப்பாய் ஒப்படைக்க,
இறப்பென்னும் இயற்கை
இதமாகத் தழுவியது!
பெற்ற பிள்ளையினும் மேலாய்
பேணி வளர்த்தார்!
உற்ற துணையாம் பாத்திமாவும்
கணவர் வழியில் நடந்தார்!!
ஆயிற்று அகவை பன்னிரெண்டு!
பெரிய தந்தைக்கு துணையாய் நின்று,
வணிகம் புரிந்திட்டார் சிரியா சென்று!!
சென்றடைந்த நகரம் புஸ்ரா,
அங்கிருந்த திரித்துவர் பஹீரா,
பாதிரியாரும் சொன்னார்,
ஏதறியா இளவலுக்கு
எதிர்காலச் சிறப்புண்டு!
சூதரியா சிறுவரை நீர்,
சூதனமாய் அழைத்துச் செல்வீர்!
தூதரிவர் என்ற உண்மை,
தெள்ளியதாய் தெரிகிறது,
யூதர்களும் கண்டு கொண்டால்,
உயிருக்கு ஆபத்து!
ஆதரவாய் அழைத்துக் கொண்டு
இக்கணமே ஊர் செல்வீர்!!
சொன்ன மொழி கேட்டவுடன்,
சுருக்காக திரும்பி விட்டார்.
இன்னதென அளவிலாத
அபரிமித லாபம் பெற்றார்!!
ஏந்தல் நபி தன் வாலிபத்தில்,
பாந்தமாய் விளங்கினார், வாணிபத்தில்!!
பணமில்லாதிருப்பினும், நல்ல
குணமிருந்தது!
தனமில்லாதிருப்பினும், சிறந்த
மனமிருந்தது!!
பாடுகள் பார்த்தார் –
பெரிய தந்தையின்
ஆடுகள் மேய்த்தார்!
காடுகள் தன்னில்,
ஆடுகள் மேய - நபியோ
தேடுதல் செய்தார் – உண்மையை
நாடியே நின்றார்!!
வீண் விளையாட்டை
நாடவில்லை மனம் – எனினும்
வீர விளையாட்டில்
ஈடுபட்டார் தினம்!
நேர்மை கொண்டார் – மனதில்
ஓர்மை கொண்டார் – மதியில்,
கூர்மை கொண்டார்!!
அமானிதத்தில் அக்கறை
வாழ்வினிலே சத்தியம்
வாக்கினிலே வாய்மை
ஒழுக்கத்திலே தூய்மை!
நாளும் கொண்டார் – இறை
நாட்டம் கொண்டார் – உயர்
தேட்டம் கொண்டார்!!
கல்லாதவராயினும் – அவர்தன்
நேர்மைக்குப் பரிசாய்
அல்-அமீன் – 'நேர்மையாளர்'
என்றழைக்கப்பட்டார்!
சொல்லெதுவோ செயலதுவாய்
வாழ்ந்து நின்றார்!
நல்லவிதமாய் அமானிதத்தை
பேணிக் காத்தார்!!
சத்தியம் அழிந்து
அக்கிரமம் தழைத்த,
அன்றைய மக்கா நகரினிலே…
பத்தரை மாற்றுப்
பசும் பொன்னாக,
எத்தகை தீதும்
இத்துணை சூதும்,
அண்டிட தன்னை
வழி தரவில்லை!
மண்டிய கெடுதலில்
மதி செல்லவில்லை!!
வாழ்க்கையிலே தூய்மை
வாக்கினிலே வாய்மை – என
வாழ்ந்து காட்டி வழியமைத்தார்,
வையம் போற்றும் எங்கள் நபி!!
(வளரும்)
பி.கு.:நபிகள்(ஸல்) அவர்கள் பெயர் வரும் இடங்களில் ஸலவாத் ஓதிக் கொள்ளுங்கள்.
-சுமஜ்லா.
|
Posted: 19 Nov 2009 08:08 PM PST
///"மதில்சுவர்கள் ஒரு காரணத்திற்காகவே இருக்கின்றன. நம்மை வெளியில் நிறுத்துவதற்காக அவை இல்லை. நாம் எவ்வளவு தீவிரமாக (எப்படியெல்லாம்) சிலவற்றை பெற விரும்புகின்றோம் என்பதைக் காட்டுவதற்கான வாய்ப்பினை வழங்கவே அவை இருக்கின்றன. சில நேரங்களில், ஊடுருவ இயலாத சுவர்கள் சதைகளால் ஆனவை." ///
///"The Brick walls are there for a reason.... They are not to keep up us out. The brick walls are there to give us a chance to show how badly we want something"
The following line has to be added in middle of thier kavithai
" Sometimes the most impenetrable walls are made of flesh"///
தோழி தந்த மேற்கண்ட வாசகத்துக்காக எழுதிய கவிதை!
முதலில் ஒரு தமிழ் கவிதை, அப்புறம் ஆங்கில வார்த்தை விளக்கத்துக்கு ஒரு ஆங்கில கவிதை!
மதில் சுவரெல்லாம் தடைசுவரல்ல...
வேதனை வருவது தாண்டிடவே
சோதனை வருவது சாதனைக்கே!
பாதையில் குறுக்கிடும் தடைக்கல்லும்
மோதிட தூளாய் சிதறிடுமே!
மதில் சுவரென்பது மறைப்பல்ல,
பதில் தெரியாத புதிரல்ல,
அதில் தாண்டுவதென்பது நிர்பந்தம்,
இதில் யாருக்கு என்ன சந்தேகம்?!
நடக்காதிருக்கும் வரை தானே,
அட, ஆசை என்றது பெயர் கொள்ளும்;
தடங்கல் தாண்டும் உத்வேகம்,
உடன் ஜெயத்தை நமக்கு தந்திடுமே!
தேவையின் தன்மையை உணர்த்திடவே
சேவை செய்யும் மதில் சுவர்கள்,
பாவை யென் தோழி தயவினிலே
யாவையும் தெளிவாய் சொல்லிடுதே!
சுவருக்கு பின்னே சுகந்தங்களே,
கலர் கலரான கனவுகளே,
தாண்டும் ஆசையை நமக்குள்ளே
விதைத்தது அந்த நினைவுகளே!
கற்பனைக் குதிரையில் நாமேறி
கற்சுவர் தன்னை தாண்டிடலாம்;
தாண்டிட இயலாவிட்டாலோ,
குடைந்தொரு ஓட்டை போட்டிடலாம்!
ஆனால் மானிட மனச்சுவரோ
தானாய் திறந்தால் தானுண்டு!
வீணாய் எத்தணை தடைச்சுவர்கள்
போனால் முட்டும் தசைச்சுவர்கள்!
இறுகிப் போன இதயத்திலே
உதிரத் துளியும் காய்ந்திடுமோ?
கறுகிப் போன கனவுகளால்
கனியும் இப்போ கசந்திடுமோ?!
Now, to give justice to capture the originality, I sketch the portrait in English also!
Beyond the Brick walls.
End of a desert, some brick walls stand
...On the other side, our cherishing dreams,
Ill-worn heart, after long desert sand -
...Dreams should come true, so it gleams!
Walls are not there to stop our progress,
...Nor are they to frustrate us -
But to make us understand the need for success,
...just as we welcome the cheering nimbus!
Why should I write, why should I?
...It gives me happiness, fame and name;
Samething in crossing the brickwalls high-
...Just for the need of winning the game.
We never fully know how badly we need
...the love, the wisdom or some kind message!
Until it sprouts out breaking the seed
...Smashing the wall and crossing the passage!
Sometime the impenetrable walls are made of flesh,
...Pleading and begging truly has no impact;
No knife or hammer can knock out that mesh
...Beyond that bloods are drained in fact!
- சுமஜ்லா
|
கருத்துகள்