சந்தோஷம் தந்த சந்திப்பு


Posted: 20 Dec 2009 09:06 AM PST
மனம் முழுக்க எதிர்பார்ப்பு! ஏதோ ஒரு சிறு தயக்கம்!!

எந்த இடம்...எந்த இடம்...? கண்கள் தேடியபடி நோக்க, தூரத்தில் சிரித்தது பேனர். சர்ரென்று என் ஸ்கூட்டியை கொண்டு நிறுத்தி, பார்த்தால், ஏகப்பட்ட பேர், டீ குடித்தபடி நின்றிருந்தனர். ஆஹா...இத்துணை பேரா? நம்மை தெரிந்து கொள்வார்களா? என்ன மாதிரி வரவேற்பு இருக்கும்??? திக் திக் என்று மனம் அடித்துக் கொண்டது. அதோடு, பெண்கள் யாரையும் காணோம்...கம்பெனிக்கு ஆள் இல்லாமல், நாம் மட்டும் மாட்டிக் கொண்டோமோ?

நல்லவேளை என் பர்தாவை வைத்தே அடையாளம் கண்டு விட்டனர். படியேறினால், எல்லாரும் பேட்ஜ் குத்திக் கொண்டு...!மணி அப்போது 4.15.
உள்ளே போனால், அங்கு பதிவர் ரம்யாவும், முருக.கவியும் அமர்ந்திருந்தனர். ஆஹா, இரண்டு பெண் வலைஞர்களாவது வந்திருக்கிறார்களே...சந்தோஷமாக அவர்கள் அருகில் போய் அமர்ந்தேன்.


சரியாக 4.30க்கு பங்ஷன் துவங்கியது. கதிர், வலைச்சரம் சீனா, பழமைபேசி, தமிழ்மணம் காசி, செந்தில், அகநாழிகை வாசுதேவன், பரிசல்காரன், வால்பையன், தண்டோரா, ஆரூரான், க.பாலாசி, கோடீஸ்வரன், வானம்பாடி, நாகா, ஜெர்ரி ஈசானந்தா, கேபிள் சங்கர், பட்டர்ப்ளை சூர்யா, லதானந்த், நாமக்கல் சிபி, வெயிலான், தேவராஜ் விட்டலன், எம்.எம்.அப்துல்லாஹ் இன்னும் பெயர் விடுபட்ட நிறைய பதிவர்கள் வந்திருந்தனர்.

கிட்டத்தட்ட ஹால் நிரம்பி விட்டது. சிறிது நேரத்தில், என் கணவரும் மகன் லாமினுடன் வந்து, நல்லதொரு பார்வையாளராக கடைசியில் அமர்ந்து கொண்டார்.

ஆரூரான் தலைமை தாங்கி நடத்தித் தர, ஈரோட்டைச் சேர்ந்த முருக.கவி என்னும் பெண்பதிவரின் தமிழ் வாழ்த்துடன் தொடங்கியது. ஒரு சிலரை ஸ்டேஜுக்கு அழைத்தனர். நானும் அழைக்கப்பட்டேன். ஆளுக்கு ஐந்து நிமிடங்கள் பேச அழைத்தனர். என்னிடம் ப்ளாக் தொழில் நுட்பம் பற்றி பேசச் சொன்னார்கள்.

நான் சொல்ல நினைத்ததை ஐந்து நிமிடத்தில் சொல்ல முடியவில்லை. ஆனாலும், ஒரு சில கருத்துக்களை மட்டும் முன்வைத்து பேசினேன். அடுத்தடுத்து ஒரு சிலர் பேசியதும், 'ஈரோடு தமிழ் வலைப்பதிவர் குழுமம்' தொடங்கப்பட்டது. அதற்கான பேனர் ஸ்டேஜில் ஒட்டப்பட்டது.
அதன்பின், கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு தலைமை தாங்க, ஒரு நான்கு ஐந்து பேர் அழைக்கப்பட்டனர்(பெயர் மறந்து போச்சு...எதுக்கைய்யா வம்பு? அதான் நாலைந்து பேருன்னு பொத்தாம்பொதுவா போட்டுட்டேன்)
அனானி கமெண்ட்ஸ் பற்றியே ஒரு அரைமணி நேரம் விவாதம் நடந்தது. அடுத்தது, ப்ளாகில் கருத்து சுதந்திரம் பற்றி பேசினார்கள், பிறகு விளம்பரங்கள் மூலம் பணம் ஈட்டுவது(ஆட்சென்ஸ்) இன்னும் சில விஷயங்கள் அலசப்பட்டன.

இறுதியாக, கதிர் அவர்கள், இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதன் பின்னணி பற்றி அருமையாக சொன்னார். அதோடு, பின் நடக்க இருக்கும் விருந்துக்கும் அழைப்பு விடுத்தார்.

முடிந்தபின், எல்லாரும் ஒருவருக்கொருவர் அளவளாவி மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டோம். எல்லோர் முகத்திலும், சிரிப்பு, வியப்பு, ஆச்சரியம், கலவையான உணர்வுக் குவியல்கள்.
சைவ, மற்றும் அசைவ உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர். இட்லி, தோசை, சிக்கன் ப்ரை, சிக்கன் கிரேவி, ப்ரைட் ரைஸ், சில்லி கோபி, ஆம்லெட், புரோட்டா, தயிர் சேமியா, காளான் கிரேவி, பாயாசம், பழம், பீடா என்று பிரமாதமான பஃபே டின்னர்.

ஒருவருக்கொருவர் போன் நம்பர் பரிமாறிக் கொண்டு, பிரியா விடை பெற்று பிரிந்தோம். என்றென்றும் மனதில் நிற்கும்படியான ஒரு அருமையான சந்தோஷம் தந்த சந்திப்பு இது!

சில ஹைலைட்ஸ்:

* நிறைய பதிவர்கள் நான் நினைத்ததை விட ரொம்பவும் சின்னப் பசங்களாக இருந்தார்கள். அதில் முக்கியமானவர்கள், பரிசல்காரன், பழமைபேசி ஆகியோர்.

* வாலு, மப்பில் வந்து எடக்குமடக்காக கேள்விகள் கேட்டு, அதகளம் செய்து, தன் இமேஜைக் குறைத்துக் கொண்டார்.

* எல்லா ப்ளாகரும், அவரவர் பெயருடன் ப்ளாக் பெயரையும் சொல்லி அறிமுகம் செய்து கொண்டனர்.

* அறிமுகத்தின் போது, என் பையன், மைக் வாங்கி, 'என் பெயர் லாமின் முஹமது. என் ப்ளாக் பெயர் சுட்டீஸ் டாட் ப்ளாக்ஸ்பாட் டாட் காம்' என்று மழலையில் கூறி அப்ளாஸ் வாங்கிக் கொண்டான்.

* ஈரோடு பதிவர் குழுமத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று பரிசல்காரன் கேள்வியை முன்வைத்தார்.

* 'நான் மார்க்கெட்டிங் ஃபீல்டுல இருக்கேன். ப்ளாக் படிக்கறது தான் எங்க வேலையே!, அதுக்காதத்தான் எங்களுக்கு சம்பளம் தர்ராங்க' இப்படி சொன்னார் ஒருவர்.

* நான் பர்தாவுடன் சென்றேன். கடைசிவரை பர்தாவுடனே இருந்தேன். என்னை வீடியோவிலோ, போட்டோவிலோ கவர் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்

* அமீரகத்து நண்பர்கள் இருவர், என்னிடம் பேசியபோது, அங்கு என்னுடைய ப்ளாக் நன்கு ரீச் ஆகி இருப்பதாக சொன்னார். சந்தோஷமாக இருந்தது.

* என் மகன் சுற்றி சுற்றி வந்து, ஒருவர் விடாமல் போட்டோவில் சுட்டுத் தள்ளி விட்டான். இங்கு இருப்பது எல்லாம் அவன் எடுத்த போட்டோக்கள் தான்.

* நிகழ்ச்சியின் இறுதியில், ஈரோடு மாவட்ட வரலாறு என்னும் நூல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

* 'வேர்களைத் தேடி' குணசீலன், நல்லதொரு நண்பர். பதிவு ரொம்ப மெச்சூர்டாக இருந்தாலும், சின்னப் பையன் தான். சந்தித்தது மகிழ்ச்சி!

* அகநாழிகை. வாசுதேவன் அவர்களின் அகநாழிகை என்னும் பத்திரிக்கை (விலை ருபாய் 30) வாங்கினேன்.

* பதிவர் தேவராஜ் விட்டலன் அவர்கள், தான் எழுதிய கவிதை நூல், 'கைக்குட்டை கனவுகள்' என்னும் நூலை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்.

* ஈரோடு கதிர் அவர்களின் மனைவியும், குட்டி மகளும் வந்திருந்தார்கள். அவர் மனைவி ரொம்ப நல்ல டைப்!

*போனதும் அனைவருக்கும் பேட்ஜ் வழங்கினார்கள். அதை சந்தோஷமாக எல்லாரும் குத்திக் கொண்டோம்.

* தமிழ்மணம் விளம்பரம் ஸ்பான்சர் செய்ததால், தமிழ்மணத்தின் பேனர் வைத்திருந்தனர்.

* தமிழ்வெளி திரட்டியைச் சேர்ந்தவர், இது போன்ற சந்திப்புகள் பற்றி தகவல் தந்தால், தாமும் பங்கெடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.

* ப்ளாக் தொழில்நுட்பம் பற்றி பேசும் போது, ஜலீலாக்காவுடைய ப்ளாகை ஒருங்கிணைத்து ஒரே ப்ளாகாக மாற்றித் தந்தது பற்றி குறிப்பிட்டேன்.

* அனானி கமெண்ட்ஸை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் தனக்கு இல்லை என்று பரிசல்காரன் குறிப்பிட்டார். நானும் அதே கருத்தை முன்வைத்தேன்.

* ஒரு சில 'வாலு'த்தனமான அதிகப்பிரசங்கிக் கேள்விகளும், தன்னை எல்லாரும் கவனிக்க வேண்டும் என்று சற்று ஓவராக 'வாலா'ட்டியவர்களும் தவிர ரொம்ப அமைதியாக, டீசண்ட்டாக சந்திப்பு நடந்தது.

* லதானந்த், என்னிடம் பாராட்டுக்களைத் தெரிவித்ததோடு, என் கணவரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டார்.

* எனக்குத் தெரியாத வேறு சிலரும், என்னைத் தெரிந்து வந்து பேசியபோது, சற்று பெருமையாகக் கூட இருந்தது.

* தீவிபத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ரம்யா, அனைவரிடமும் அன்பாக பேசினார். அவர் சாஃப்ட்வேர் ஃபீல்டில் வேலை பார்க்கிறார்.

* கதிரின் நண்பர் ஒருவர் வீடியோ கவரேஜ் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகத் தெரிவித்தார்.

* நல்லதொரு சந்திப்பு! மனம் முழுக்க இனிப்பு! சுவையான விருந்து! திட்டமிட்ட ஏற்பாடுகள்! விழாக் குழுவினரையும், இதற்கு முதன்முதலாக விதை போட்ட கதிரையும் மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.

பி.கு. என் மகனின் அனுபவங்களை அவனுடைய ப்ளாகில் படிச்சிக்கோங்க: http://sutties.blogspot.com/2009/12/blog-post.html

-சுமஜ்லா.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!