சாது மிரண்டால்...


Posted: 27 Dec 2009 07:08 AM PST
பத்து பேர் சேர்ந்து
கூக்குரலிட்டால்,
பஞ்சு நஞ்சாகிடுமா?
வெத்து வேட்டுக்களின்
வித்தையிங்கு
நஞ்சை விஞ்சிவிடுமா??

இனமானம் காக்க
தூக்கிய கூஜா
நொருங்கிப் போகுது பாவம்!
கூஜாவின் கழுத்தையும்
மாதவர் இடுப்பாக
காமத்தின் கண்பார்க்கும் சோகம்!!

உம்மின ஆண்கூட
குடிக்க மாட்டார்களா???
என்று கேள்வி எழுப்பி,
தம்வீட்டு பெண்களும்
குடிப்பார்கள் என்று
பறைசாற்றி, தம்மை,
நற்'குடி'யாகக் காட்டிக் கொண்ட
தகர டப்பாக்கள்!

கருப்பென்று கருவிழியை
பிடுங்கி எறிந்து விட்டு,
கருப்பென்று தலைமுடி
மீசையும் மழித்துவிட்டு,
பரிதாபக் கோலத்தில்
தன்மானக் காவலர்கள்!!

மதிமயக்கும் பானத்தைக்
குடித்தாட்டம் போட்டு,
விஷம் தோய்த்த பானத்தை
விதிமேலே தொடுத்து,
மயங்கியொரு போதையிலே
முயங்கியாடும் கும்மாளம்!

பசுபோட்ட சாணத்தை
தலைமேலே ஏற்றி,
பெண்ணினத்தின் நாணத்தை
காலாலே நசுக்கி,
சுயவிளம்பரம் தேடிக்கொள்ளும்
கயவர்களின் பட்டாளம்!!

மூடிவைத்த பதார்த்தத்தில்
வாசம் வராதென்று,
திறந்து வைத்து,
தேடிவரும் ஈசலுக்கும்,
நாடிவரும் எறும்புக்கும்
இரையாக்கும் கூட்டம்!

கதவுபோட்டால் உதவாதென்று,
கதவில்லாமல் வீடுகட்டி,
கன்னமிடும் கயவருக்கு,
அன்னமிடும் பெண்டீரை
தாமாகத் தாரைவார்த்து
ஏனிந்த ஆட்டம்?!!

தொண்டைவரளக் கத்தி நாங்கள்
தொண்டு செய்வோமென்று,
மண்டையை அடகுவைத்துவிட்டு,
சுண்டைக்காய் கூட்டமொன்று,
துண்டு விரிக்குது அங்கே!!

சிண்டைப் பிய்த்துக் கொண்டு,
சிந்திக்கும் வாசகரெல்லாம்,
சண்டை யாதென்று
அறியாமல் குழம்பி,
அண்டைஅயலாரிடம் கேட்டறிந்து,
வேடிக்கை பார்ப்பது இங்கே!!!

-சுமஜ்லா.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!