குழந்தை பாடல் - ஆயர்பாடி மாளிகையில்...


Posted: 28 Dec 2009 06:33 AM PST
இல்லையொரு பிள்ளையென்று ஏங்கும் போது வந்துதித்த என் செல்லத்தங்கத்துக்கு, பன்னிரெண்டு வருடங்களுக்கு முன், நான் எழுதிய தாலாட்டு!

அன்பு எனும் மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
லாஃபிரா கண்ணே தூங்கிடுவாய் தாலேலோ - நீ
மனம் நிறைய களிப்புடனே மகிழ்ச்சியுடன் ஆடியபின்
தனை மறந்து தூங்கிடுவாய் தாலேலோ
தனை மறந்து தூங்கிடுவாய் தாலேலோ(அன்பு எனும்)


பூவிதழால் புன்னகைத்து தாய்மனதைக் கொள்ளைகொண்டு
பவுர்ணமியாய் ஒளிதருவாய் தாலேலோ - உந்தன்
மழலையிலே எனை மயக்க குறும்பினிலே நீ கலக்க
நிறைவுடனே உறங்கிடுவாய் ஆராரோ!
நிறைவுடனே உறங்கிடுவாய் ஆராரோ!(அன்பு எனும்)


இல்லையொரு பிள்ளையென ஏங்கும் போது வந்துதித்த
லாஃபிராகண்ணே கண்மலர்வாய் தாலேலோ - உன்
தேன்மொழியில் வாயொழுக தீந்தமிழில் பாட்டிசைக்க
திருமகளே தூங்கிடுவாய் ஆராரோ!
திருமகளே தூங்கிடுவாய் ஆராரோ! (அன்பு எனும்)


கையிரண்டில் அள்ளிக் கொண்டு கன்னத்திலே கன்னம் வைத்து
முத்தங்களை பொழிந்திடவே தாலேலோ - உன்
பொன்னழகை பார்ப்பதற்கும் பூமுகத்தை ரசிப்பதற்கும்
கண்ணிரண்டு போதவில்லை ஆராரோ!
கண்ணிரண்டு போதவில்லை ஆராரோ! (அன்பு எனும்)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
மாயக்கண்ணன்தூங்குகின்றான் தாலேலோ - அவன்
வாய் நிறைய மண்ணனை உண்டு மண்டலத்தை காட்டியப்பின்
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ
ஓய்வெடுத்து தூங்குகின்றான் ஆராரோ (ஆயர்பாடி)


பின்னலிட்ட கோபியரின் கன்னத்திலேகன்னமிட்டு
மன்னவன் போல் லீலை செய்தான் தாலேலோ - அந்த
மந்திரத்தில் அவளுரங்க மயக்கத்திலே இவனுரங்க
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ
மண்டலமே உரங்குதம்மா ஆராரோ (ஆயர்பாடி)


நாகபடம் மீதிலே அவன் நர்த்தனங்கள் ஆடியதில்
தாகமெல்லாம் தீர்த்துக் கொண்டான் தாலேலோ - அந்த
மோகநிலைக் கூட, ஒரு யோகநிலை போலிருக்கும்
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ
யாரவனை தூங்கவிட்டார் ஆராரோ (ஆயர்பாடி)


கண்ணனவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்
அன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவன்
பொன்னழகை பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும்
கன்னியரே கோபியரே வாரீரோ
கன்னியரே கோபியரே வாரீரோ (ஆயர்பாடி)


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!