இடுகைகள்

ஜனவரி, 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரபு சீமையிலே.... - 14

படம்
அரபு சீமையிலே.... - 14 Posted: 30 Jan 2010 10:23 AM PST இறையின் நினைவில் குறையா அருளில் குன்றா நம்பிக்கை நன்றாய் கொண்டு, பெருமகன் முஹமது சீராய் மணந்து, அருந்தவம் கிடந்தார் ஹீரா குகையில்! புனித ரமலான் மாதத்தில் இனியதொரு பிறையன்று, இறங்கியதே இறை செய்தி! உறங்கியதே தீய சக்தி!! இருளின் ஊடே ஒளியாய் தோன்றி, அருளின் வடிவாய் நின்றார் ஜிப்ரீல்! ஏகனின் தூதர் வாகையை சூட, வல்லவன் செய்தியை நல்லவரிடம் சேர்த்து, வானவர் கோமான் ஆணைகள் போட, "ஓதுவீராக!" என்றவரிடத்தில், ஓதத்தெரியாதென, மருண்டார் நபிகள்! மும்முறை சொல்ல, முயற்சிகள் வெல்ல, செம்மறை திருமறை செழிப்பாய் இறங்க, கண்மணி முஹமது(ஸல்) நன்மணி நாயகர் தூதை ஏற்று தூயவராக, போதம் தாங்கி மனையிடம் ஏக, மறைபொருளாலே மனமெல்லாம் அஞ்சி, மனைத்துணை கதீஜா அருகில் துஞ்ச, ஆறுதல் சொல்ல, தேறுதல் கொண்டார்! ஆறுமாதம் சென்று வேறொரு இறைசெய்திவர மாறுதல் ஏற்று மாட்சிமை உரைத்தார்!! இறுதிநபி தானென்ற உறுதி உள்ளத்தில் நிறைத்தார்!! நாயகத்திருமேனியின் சிறிய தந்தை புதல்வர் ஆறு வயது சிறுவன் அலியார், அண்ணலாருடன் இணைந்து இறைவணக்...

தமிழ் குடும்பத்துக்கு நன்றி!

படம்
தமிழ் குடும்பத்துக்கு நன்றி! Posted: 24 Jan 2010 03:16 AM PST எதிர்பாராத சில விஷயங்கள் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விடுகிறது. தமிழ் குடும்பத்தின் அன்பளிப்பும் அது போலத் தான். திறமையுள்ள யாவரையும் ஊக்கப்படுத்தி, அவர்களின் படைப்புகளை வெளியிட்டு வரும் தமிழ்குடும்பம்.காம் இணைய தளம், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, அத்தளத்தில் நல்ல முறையில் பங்கெடுத்து தம் ஆக்கங்களைப் பதிந்த ஒரு சிலரைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கியது. அதில், சாயபு வீட்டு சரித்திரம் என்னும் உண்மை சம்பவத் தொடரை 30 பாகங்களாக எழுதி நிறைவு செய்திருந்த என்னையும் பரிசு வழங்கத் தேர்ந்தெடுத்து இருந்தார்கள். அதற்கு முதலாவதாக தமிழ்குடும்பத்துக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பரிசாக வழங்க, ருபாய் 500 மதிப்புள்ள புத்தகங்களைத் உடுமலை.காம் என்னும் புத்தக விற்பனைத் தளத்தில் தேர்ந்தெடுத்து அனுப்புமாறு மின்னஞ்சல் அனுப்பு இருந்தார்கள். அத்தளத்தில் கிட்டத்தட்ட, அனைத்து எழுத்தாளர்களின் ஆக்கங்களும் இருந்தன. எதைத் தேர்ந்தெடுப்பது என்று சற்றே குழம்பினாலும், நான் முதலில் தேடியது, பழம்பெரும் பெண் எழுத்தாளர் லட்சுமி எழுதிய பெண்...

எதிர்கால வாழ்விலே...

படம்
எதிர்கால வாழ்விலே... Posted: 11 Jan 2010 08:43 AM PST பள்ளி இறுதி நாட்களில் எழுதியது! காலங்கள் கைவிட்டு நழுவிவிடும் கோலங்கள் உருமாறி மறந்து விடும்! நம்பாடம் இஃதோடு மறைந்து விடும், தம்வீடு போதுமென்ற நினைப்பு வரும்! பாடங்கள் மனதினின்று அகன்று, பல வேடங்கள் கண்டு மனம் மயங்கி நிற்கும்! தாகத்தில் உணர்விழந்து அறிவு மங்கி, வேகங்கள் விளையாட்டு ஆரம்பிக்கும்! சோகங்கள் கைகொட்டி சிரிக்கும் போது, மோகங்கள் விலகிநின்று முதிர்ச்சிதரும்! உண்மைகள் எழுந்து வந்து பேசும் பின்பு, கண்ணிமைகள் கனவினின்று மீண்டு வரும்! நிழலையும் நிஜத்தையும் பகுத்தறிந்தால், விழலிலே விழாத விதையாகலாம்! பண்பாடும் என்மனதின் கேள்வியிது, அந்நாளில் இந்நாட்கள் மறந்திடுமோ?! -சுமஜ்லா. ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி!

குழந்தை பாடல் - இன்னிசை பாடி வரும்...

படம்
குழந்தை பாடல் - இன்னிசை பாடி வரும்... Posted: 09 Jan 2010 05:37 PM PST இரண்டரை ஆண்டுகளுக்கு முன், என் தம்பிமகன் தைசீர் அஹமது பிறந்த போது, நான் பாடிய தாலாட்டு! அன்புடன் ஆட்சி செய்ய ஒரு கண்மணி வந்ததடா... பாசத்தைக் குழைத்தெடுத்து ஒரு பைங்கிளி பூத்ததடா... உன்முகத்தைப் பார்க்கையில், உள்ளம் கொள்ளை போகுதே - தேனின் சுவையைப் போலவே கண்ணன் குரலும் இனிக்குதே... அத்தை பாடிடும் ஒரு பாடல் தான் அதைப் பாடப் பாட பிஞ்சு மனது குளிர்ந்திடுமே! (அன்புடன்) கண்ணுக்கு கண்ணாக நீ பிறந்து வந்தாயே! முகத்தோடு முகம் சேர்த்து, கனிமுத்தம் தந்தேனே! பூஞ்சிட்டை பார்த்திட, மனம் பரவசமானதே! தம்பியின் முகத்திலே அட, பெருமை பொங்குதே!! தொட்டில் நானும் ஆட்டுகிறேன், ஆரீ ராரி ராரோ! விழிகள் மூடி கனவுடனே, நீயும் தூங்கிடுவாய்!! அத்தை பாடல் கேட்டு தாளம்போடு இளமகனே!! (அன்புடன்) சந்தன சிலை போல, இளவரசன் கண்டேனே! உயிருக்கு உயிராக, உனைக் கொஞ்சி ரசித்தேனே!! பெற்றவர் வாழ்க்கையில் தனி அர்த்தம் சேர்ந்தது! உன்முகம் ரசிப்பதே புது வேலை ஆனது!! செல்லக் கண்ணன் தூங்கிடவே, ஆரீ ராரி ராரோ!! மெல்ல மெல்ல பாடு...

நானும் சில நற்’குடி’காரர்களும்

படம்
நானும் சில நற்’குடி’காரர்களும் Posted: 02 Jan 2010 08:15 AM PST " நன்னனா நன்னானா நன்னானா நன்னானா யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!" வாய் ஆவென்று பிளக்க, சாதம் உள்ளே தானாய் இறங்குகிறது! அவனுடைய பாஷையை, 'சோறு தான் திங்கறீயா? பிடிச்சிட்டு போகட்டுமா? யேவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!' என்பதாக மொழி பெயர்க்கிறார் அம்மா! யார் அவன்? ஏன் அந்த ஆளைக் கண்டு பதுங்குகிறோம், நானும் தம்பியும்! அந்த அவன் குடிகார முனியப்பன்...! எப்பவும் கத்திக் கொண்டே தான் போவான். அவன் போடும் கூப்பாட்டின் கடைசியில் ஒரு யேவ்வ்வ்வ்வ் என்று ஏப்பம் விடுவது போல சைரன் கொடுப்பான்! அது அவனுடைய டிரேட் மார்க்! அதிலிருந்து, குடிகாரர்களைக் கண்டால் எனக்கு ரொம்பவும் பயம். அம்மாமார்கள் பிள்ளைகளுக்கு சாதம் ஊட்ட, இப்படி எதையாவது காண்பித்து பயப்படுத்துகிறார்கள். இன்னொரு பூச்சாண்டி எங்களை பயத்தில் ஆழ்த்துவாள்! அவள் பெயர் பீக்குட்டி. ஒரிஜினல் பெயர் பீவிக் குட்டியாம்! பூர்வீகம் கேரளா என்று கேள்வி! அவளுடைய வயிறு மிகவும் பெரியதாக இருக்கும். அவள் யாரையும் நம்பமாட்டாளாம்...ஏதோ மனநோயாம்...அதனால் அவளுடைய பண்டபாத்திரங்கள் எல்லாம் வயிற்ற...