குழந்தை பாடல் - அமைதியான நதியினிலே

Posted: 28 Feb 2010 04:13 AM PST
அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!
அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும்
காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும்
கவலையின்றி களித்திடுவாய் கண்ணே! ஹோய்...ஹோய்...
அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

லாஃபிராமா கண்மணியை ......
லாஃபிராமா கண்மணியை
தாலாட்டும் தென்றலது
லாஃபிராமா கண்மணியை
தாலாட்டும் தென்றலது
அன்புடனே பாடிவரும்
இன்பத்துடன் மேவிவரும்!
அன்புடனே பாடிவரும்
இன்பத்துடன் மேவிவரும்!

அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

எங்களன்பு குலக்கொடியே
இறையோனின் அருட்கொடையே
எங்களன்பு குலக்கொடியே
இறையோனின் அருட்கொடையே
பாசத்திலே ஏது எல்லை
கனிந்தமனம் வீழ்வதில்லை!
பாசத்திலே ஏது எல்லை
கனிந்தமனம் வீழ்வதில்லை!

அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!
அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

பெற்றவர்கள் மகிழ்ந்திடவே
பிறந்து வந்த பொன்மயிலே
பெற்றவர்கள் மகிழ்ந்திடவே
பிறந்து வந்த பொன்மயிலே
காலம் என்னும் வெள்ளத்திலே
பாடி வரும் பூங்குயிலே
காலம் என்னும் வெள்ளத்திலே
பாடி வரும் பூங்குயிலே

அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

முத்தத்தினை பொழிந்துவிட
புன்சிரிப்பில் மயங்கிவிடும்
முத்தத்தினை பொழிந்துவிட
புன்சிரிப்பில் மயங்கிவிடும்
அன்புமொழி பேசிவிட்டால்
சிந்தை நிலை மாறிவிடும்.
அன்புமொழி பேசிவிட்டால்
சிந்தை நிலை மாறிவிடும்.

அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!
அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும்
காலையிலும் மாலையிலும் நிலவுவரும் இரவினிலும்
கவலையின்றி களித்திடுவாய் கண்ணே! ஹோய்...ஹோய்...
அமைதியாக உறங்கிடுவாய் கண்ணே - என்றும்
அறிவுடனே திகழ்ந்திடுவாய் பெண்ணே!

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஹோய் ஹோய்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

தென்னை இளங்கீற்றினிலே ஏ... ஏ..
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை இளங்கீற்றினிலே தாலாட்டும் தென்றலது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது
தென்னை தனை சாய்த்து விடும் புயலாக வரும்பொழுது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை
காற்றடித்தால் சாய்வதில்லை கனிந்த மனம் வீழ்வதில்லை

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் (ஓ..)
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணலிலே காலெடுத்து நடந்து வந்த பெண்மை இது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது
நாணம் எனும் தென்றலிலே தொட்டில் கட்டும் மென்மையிது

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அந்தியில் மயங்கி விழும் காலையில் தெளிந்து விடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்
அன்பு மொழி கேட்டுவிட்டால் துன்பநிலை மாறிவிடும்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
காற்றினிலும் மழையினிலும் கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் ஓ..ஓ..
அமைதியான நதியினிலே ஓடும் ஓடம்
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!