எழுதி வைக்க நேரமில்லையே!


Posted: 01 May 2010 04:21 AM PDT

வானத்திலே நிலவிருக்கு,
கவியூறும் சுவை எனக்கு,
எழுதி வைக்க நேரமில்லையே!!

தோட்டத்திலே மலரிருக்கு,
எழுதப்படா கவியிருக்கு,
பதிந்து வைக்க காலமில்லையே!!

மொட்டைமாடி தனிமையிலே,
வெட்டவெளி நோக்கையிலே,
வேகமாக நினைவு நகருதே!!

வட்டமாக புத்தகங்கள்,
திட்டமாக இடம்பிடிக்க,
காண அதைக் கனவு கலையுதே!!

பதிவுலகம் வர ஆசை,
பதில் கூறும் மனவோசை,
படிப்பு என்னை தடுத்து நிறுத்துதே!!

இணையத்தில் 'லாக்'(log) ஆனால்,
படிப்பிங்கு 'லாக்' (lock) ஆகும்,
கடிவாளம் பிடித்து இழுக்குதே!!

தேர்வு தரும் சுமையெனக்கு,
படித்துக் களைத்த இமையிருக்கு,
வேறெதிலும் நாட்டமில்லையே!!

படிப்பென்னும் துணை நமக்கு,
எதிர் காலம் அதிலிருக்கு,
அதனால், மன வாட்டமில்லையே!!

நண்பர்களுக்கு,

தற்சமயம் எனக்கு தேர்வு நெருங்கி வருவதால், (மே 27 தொடங்குகிறது) வலைப்பக்கம் தலைவைக்க முடியவில்லை....அதோடு, இப்போ, மாதிரித் தேர்வுகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன....அதில் நல்ல மதிப்பெண் பெற்று (முதல் இடம்) வருகிறேன். அதற்காக நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. அதனால், பல பின்னூட்டங்கள், சந்தேகங்களுக்கு பதில் தர முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

நான் நல்ல முறையில் தேர்வெழுதி, நல்ல மதிப்பெண் பெற வேண்டிக் கொள்ளுங்கள்...! அதோடு, நல்ல வேலையும் CBSE ஸ்கூலில் கிடைத்துள்ளது! ஜூன் மாதம் தேர்வுக்குப் பின் போக வேண்டும். தேர்வு முடிந்த பின், மீண்டும் பழைய வேகத்துடன் பதிவுலகிற்கு வருவேன்....! அது வரைக்கும் பை...பை...!!

-சுமஜ்லா.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!