’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் |
திருமண பாடல் - அனல் மேலே பனித்துளி... Posted: 10 Jul 2010 12:02 PM PDT மணமகள்: சலூஜா மணமகன்: ஹாமித் மணநாள்: 23.05.2010 சலுஜாமா பைங்கிளி இணை ஹாமித் துணையினி சிரித்தாடும் மலர்கொடி சாய்ந்தாலே அவன்மடி இதழ் இரண்டும் கவிமொழி கனவோடு இவள்விழி மணம் வீசும் மலர் இனி…. புது வாழ்க்கை இந்நாளிலே, மணம் இனிக்க வருகிறதே! ஒரு தேவ குமாரனை நினைத்திதயம் உருகியதே!! புதுகவிதைகள் படித்திடுமே, கனவினிலே, கனவினிலே, அவனிருவிழி உனையிழுக்க மகிழ்ந்து நின்றாய் நனவினிலே, பொழியட்டுமே காதல் மழை அது தான் இனி எந்நாளும் சுவை சுவை!! கொம்புத் தேனாய் உன் வாழ்வினி இனித்திடுமே கனிந்திடுமே! மஞ்சம் நோக்கி உன்காலடி தயங்கிடுமே, தவித்திடுமே!! இரு மணங்களும் இணைந்திடவே பெருகிடுமே காதலலையே, புது உறவினி மலர்ந்திடவே பனி பொழியும் முதல் முறையே, மலர்கணைகள் மலர் தொடுக்க, பூஞ் சோலையில் உலாவி மகிழ்ந்திட!! - சுமஜ்லா. ஒரிஜினல் பாடல் இதோ: அனல் மேலே பனித்துளி அலைபாயும் ஒரு கிளி மரம் தேடும் மழைத்துளி இவை தானே இவள் இனி இமை இரண்டும் தனித்தனி உறக்கங்கள் உறைபனி எதற்காக தடை இனி (அனல் மேலே..) எந்த காற்றின் அலாவலில் மலர் இதழ்கள் விரிந்திடுமோ எந்த தேவ வினாடியில் மன அறைகள் திறந்திடுமோ ஒரு சிறு வலி இருந்ததவே இதயத்திலே இதயத்திலே உனதிருவிழி தடவியதால் அமிழ்ந்துவிட்டேன் மயக்கத்திலே உதிரட்டுமே உடலின் திரை அதுதான் இன் நிலாவின் கறை கறை (அனல் மேலே..) சந்தித்தோமே கனாக்களில் சிலமுறையா பலமுறையா அந்திவானில் உலாவினோம் அது உனக்கு நினைவில்லையா இரு கரைகளை உடைத்திடவே பெருகிடுமா கடலலையே இரு இரு உயிர் தத்தளிக்கையில் வழி சொல்லுமா கலங்கரையே உயரலைகள் எனை அடிக்க கரை சேர்வதும் கனாவில் நிகழ்ந்திட (அனல் மேலே..) |
You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
கருத்துகள்