’என்’ எழுத்து இகழேல்

’என்’ எழுத்து இகழேல்


திருமண பாடல் - அன்பே என் அன்பே....

Posted: 11 Jul 2010 07:11 AM PDT

மணமகன்: ஹாமித்
மணமகள்: சலூஜா

சல்ஜாமா ஹாமித்
உன்மடி சேர
லண்டனை விட்டு வந்தார்….

இனிய தினத்தில்
பொன்மலர் சூட
புதிய வாழ்வைத் தந்தார்……

கண்ணில் கனவுகள் சேரும் – உம்
நெஞ்சில் புதுகவி பாடும்.
அன்பில் மனம் இடம் மாறும்
இனி வாழ்வினில் தொடர்ந்திடும் மலர் மணம்….

சா…பா… தந்த நறுமலர் நீயே
தேன் தேன் சுவை ஊறிடும் தேனே!
இன்று வாழ்க்கையில் சேர்ந்திடுவீரே!
புகழ் நிறைந்திட இணைந்திடுவீரே!!

இருவருமே சேர்ந்திடவே
இனிமைகளும் கூடும்.
இறையருளும் வழிநெடுக
புது உறவைச் சேரும்!

பூ….பூ…. புது மஞ்சத்தினில் மணக்க,
வாழ் நாள் என்றும் இன்சுவைகள் தொடர,
அன்பு பொழிந்திட மகிழ்ந்திடுவீரே!
நல்ல சாதனைக்கு வழியமைப்பீரே!!

புது சுகத்தில் புவி மறக்க
இனி தொடரும் இனிமை
அந்தபுரத்தில் ஆட்சி அமைக்க,
தரும் சுவையோ புதுமை!

- சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

அன்பே என் அன்பே
உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…

கனவே கனவே
கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…

கண்களில் கடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…

நீ நீ ஒரு நதி அலை ஆனாய்
நான் நான் அதில் விழும் நிலையானேன்
உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ
உந்தன் கரைத் தொட்டு பிழைத்திடுவோனோ… ஓ…

அலையினிலே பிறக்கும் நதி
கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லம்
மெளனத்திலே கலக்கும்..

அன்பே என் அன்பே
உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே
கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்

கண்களில் கடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயித்திடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசலிப்பேன்….

எதை கொடுத்தோம்
எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைந்தோம்
எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு

அன்பே என் அன்பே
உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…

கனவே கனவே
கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…

கண்களில் கடும் வெயில் காலம்
உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழை காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…
ஓஹோ ஒஹோ ஒஹோ ஹோ…


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!