’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் |
வரும்......வருது.......வந்திருச்சு......... Posted: 09 Sep 2010 08:47 AM PDT எதப் பத்தி நான் சொல்றேனு யோசிக்கிறீங்களா??? இரண்டு விஷயங்கள்.......... முதலாவது ஈதுப் பெருநாள்! இரண்டாவது "நீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம்" என்ற என்னுடைய புத்தகம்!! அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனம் நிறைந்த ஈதுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்! இல்லத்தில் பிரியாணி மணமும்........ கைகளில் மருதாணி மணமும்........ சிரிக்கும் கண்களும்...... இனிக்கும் புன்னகையும்........ சுட்டிகளின் கலக்கலும்........ சுந்தர மொழிகளுமாக....... தூரத்து உறவுகள் ஊர் தேடி உவகை புரிய....... தொலைபேசி மணியொலியில் தொலைத்த இன்பங்கள் தேடி வர....... ஊரோடும் உறவோடும் உள்ளார்ந்த சிரிப்போடும் நாயனவன் நாட்டத்தினால் நல்ல செய்தி நாடி வர........ ஈத் முபாரக்! ஈத் முபாரக்!! வறியவர்க்கும்.... உரியவர்க்கும்.... நண்பருக்கும்..... பகைவருக்கும்..... நல்லவர்க்கும்..... தீயவர்க்கும்..... சின்னவர்க்கும்.... பெரியவர்க்கும்..... மனங்கனிந்த ஈத் முபாரக்!!! இரண்டாவது விஷயம்........ரொம்ப நாளாக எதிர்பார்த்த வலைப்பூ பற்றிய என் புத்தகம் வெளி வந்து விட்டது! 96 பக்கங்கள், புத்தகத்தின் கடைசியில் பதிவு செய்த அனனத்து நண்பர்களின் வலைப்பூ முகவரிகளுடன் வெளியாகி உள்ளது! பார்க்க பக்கம்: http://sumazla.blogspot.com/2009/08/blog-post_30.html ஒரு சிறு வருத்தம் என்னவென்றால் இந்த புத்தகம் எழுதியதற்கும் வெளியானதற்கும் இடைப்பட்ட காலத்தில் ப்ளாகரில் நிறைய மாற்றங்கள்! அடுத்த எடிசனில் தான் அவற்றை அப்டேட் செய்ய வேண்டும். ஆயினும் ரூ.60 விலையுள்ள இப்புத்தகத்தின் தகவல்கள் புதியவர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும். புத்தகத்தின் அட்டைப் படம்: முதன்முதலாக நான் எழுதி வெளிவந்திருக்கும் புத்தகம் இது. பிழைகள் இருந்தால்.......மின்னஞ்சல் அனுப்பினால்.......இன்ஷா அல்லாஹ்.......அடுத்த பதிப்பில் சரி செய்து கொள்ள ஏதுவாக இருக்கும். -சுமஜ்லா. |
You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
கருத்துகள்