’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் |
Posted: 12 Sep 2010 09:46 PM PDT நிகழ்ந்த மாற்றமேதும் அறியாமல், தோழர்கள் வாளேந்தி உமர் வருவதைக் கேள்வியுற்றனர்! கிலேசமுற்றனர்! சவாலிட்ட வாலிபரை எண்ணி கலக்கமுற்றனர்!! தட்டப்பட்ட கதவின் கிட்டேவந்தனர் தோழர்கள்; நோக்கம் அறிந்தபின் தாக்குவோம்; ஆக்கம் கொண்டிடின் போற்றுவோம், என்று திறக்கின்றனர் கதவை! உள்ளே விட்டனர் இப்னு கத்தாபை!! பெருமானார், கத்தாப் மைந்தரை நோக்கி வீசினார் சில கேள்விகள், இஸ்லாத்தை வளரச் செய்ய, அவையெல்லாம் வேள்விகள்; "முறை மாறும் பாதையா? இறைக் கோபம் தேவையா? கல்லுருவைக் கடவுளாகத் தொழுவதை விடமாட்டீரோ?? அல்லாஹ்வை ஏகனாகத் தொழ வரமாட்டீரோ?" கனிவுடன் விளம்ப, தெளிவுடன் சொன்னார், கருத்ததில் கண்ணியம் ஏற்றிட்ட உமரவர்; "தேனையொத்த தீனை நான் ஏற்றுக் கொண்டேன் நாயகரே! வானைப் படைத்த ஏகனவன் தூதர் நீங்கள் தூயவரே!!" அகமும் முகமும் குளிர, கட்டியணைத்தார்! அல்லாஹு அக்பர் என்றே மும்முறை முழங்கினார்!! பெருமானார், முந்திய இரவு தொழுது, இறையை நோக்கி அழுது, கேட்ட தேவை நிறைவேறியது! நபித்துவம் பெற்ற ஆறாம் ஆண்டில், இஸ்லாம் உமரைக் கொண்டு மெருகேறியது!! செல்வமிக்க அதீ குடும்பத்தின் செல்வராம் உமர், உடலுறுதியுள்ளவர், ஊக்கம் நிறைந்தவர், அஞ்சா நெஞ்சத்தினர், நெறி தவறா நேர்மையாளர், ஆற்றலும் திறமையும் கொண்டவர்! ஆர்வமும் அக்கறையும் நிறைந்தவர்!! பணத்தால் வலியவராயினும் குணத்தால் பெருமதிப்புப் பெற்றவர்! ஆதலால், நபியவருக்குப் பின் இரண்டாம் கலிஃபாவாகி, பத்தாண்டு அரசோச்சினார்! இவர் ஆட்சியில், முன்னேற்றப் பாதையில் முஸ்லிம்கள் செல்ல, முக்கண்டத்திலும் இஸ்லாம் பரவியது! நேரிய ஆட்சியால், மெலிந்தோர் நலிந்தோரின் துயர் தீர்த்தார்! கிருத்துவன் ஒருவன் கட்டாரியால் தாக்க, 53ம் அகவையில் உயிர் நீத்தார்! உமர் தீனை ஏற்ற செய்தி, அனைவரையும் எட்டியது! அவரைச் சார்ந்த சமூகமோ அவரைத் திட்டியது! ஆயினும் இஸ்லாமியருக்கு சந்தோஷம் கிட்டியது! இதுகாறும், காஃபிர்கள் கை ஓங்கியிருக்க, முஸ்லிம்கள் காபா சென்று தொழ இயலவில்லை! இனி உமரவர் தீனுக்கு தூணாய் நிற்க, நபிகள்(ஸல்) புடைசூழ, காபா வந்து தொழுதார், இறையோனுக்கு, நன்றி கூறி அழுதார்!! அச்சம் நீங்கிய மற்றோரும் அணியணியாய் காபா வந்தனர், அணிவகுத்து நின்றனர், அழகாகத் தொழுதனர்!! புதிய வாசல் திறந்தது புத்துணர்வும் கிடைத்தது! உமரின் வரவு இஸ்லாத்துக்கு உத்வேகம் தந்தது! (தொடரும்) -சுமஜ்லா. |
You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
கருத்துகள்