’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 25 Posted: 01 Nov 2010 10:10 AM PDT பத்தாண்டு முடிந்தது நபித்துவம் பெற்று புத்தாண்டுக்கு முந்தய துல்ஹஜ் வந்தது ஹஜ்ஜுக்குக் கூடிய மக்களில் பசுந்தானியம் விளையும் பழத்தோட்டங்களும் கனிந்த பேரிச்சையும் தெளிந்த நீரோடையும் நிறைந்த யத்ரிப் நகரத்து யாத்ரிகர்கள் குழுமினர். மினாவுக்கு அருகில் அவர்தம் கூடாரம் – சென்று நபிகளார் செய்தார் பிரச்சாரம். நல்லொழுக்க மக்கள் பலர் முன்னொழுகி வந்ததனால் மார்க்கமருகி போனது, தீர்க்கதரிசி ஏற்றது! பூசல் பிணக்கு ஒழிந்திட வாசலாக அமைந்தது! நாசவேலை குறைந்திட நாளும் பொழுதும் பிறந்தது!! அவ்ஸ், கஸ்ரஜ் என்று கோத்திரம் இரண்டு! கோத்திரத்துக்குள்ளே சாத்திரம் நூறு!! – அதனால் ஆத்திரம் பலமடங்கு! சாத்தியம் உணர்ந்து நபிகள்(ஸல்) சாதகமாக்க, வேற்றுமை மறந்து வெற்றியும் கிடைத்தது! அஸ்அத், அவ்பு, ரபீஆ, குத்பா, உத்பா, ஜாபிர் என அறுவரும் இஸ்லாத்தை பெறுவராய், எடுத்துவைத்த தூதுவத்தை நபிகளாரின் மாதவத்தார், சிரமேற்றுக் கொண்டார்கள்; பெருவாழ்வு கண்டார்கள்! அடியொற்றி பலரும் இ...