’என்’ எழுத்து இகழேல்

’என்’ எழுத்து இகழேல்


உங்கள் தளம் காப்பியடிக்கப்படுகிறதே என்று வருத்தமா?

Posted: 01 Mar 2011 08:01 AM PST

பலரும் தங்கள் தளத்தின் இடுகைகளை அடுத்தவர் காப்பியடிக்கிறார்கள் என்று என்னிடம் வருத்தத்துடன் கூறுவார்கள். அதைத் தடுக்க ஒரு சில வழிகளை ஒரு சில கையாண்டாலும் காப்பியடிப்பது என்னவோ தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போலத்தான் இதுவும்.

ஆனால், காப்பியடிக்கப்படும் தளத்துக்கு சில நன்மைகள் உண்டு. அதே போல காப்பியடித்ததை வெளியிடும் தளத்துக்கு சில தீங்குகளும் உண்டு. இதை உணர்ந்து கொண்டால், 'ஐயோ என் சமையல் குறிப்பை காப்பியடிச்சிட்டாங்க', 'ஐயோ என் படத்தைக் காப்பியடிச்சிட்டாங்க' என்று யாரும் வருத்தப்பட மாட்டார்கள். இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் வலையுலகம் எவ்வாரு இயங்குகிறது என்று சற்று அடிப்படையில் இருந்து பார்த்தால் தான் புரியும்.
பொதுவாக இன்று உலகமே நெட் மூலமாகத் தான் இயங்குகின்றது என்று எளிதில் கூறிவிடலாம். அதுவும் மேலை நாடுகளில் ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் காரைப் பார்க் செய்வதற்கே அலையோ அலை என்று அலைய வேண்டும். அதற்குக் கட்டணமும் செலுத்த வேண்டும். அதனால் ஒரு டிசர்ட் வாங்க வேண்டும் என்றாலோ, உணவுப் பொருட்கள் வாங்க வேண்டுமென்றாலோ அவர்கள் நாடுவது இணையத்தைத் தான்.

ஒருவர் நம் இணையதளத்தை அடைய வேண்டுமென்றால் அவர் மூன்று வழிகளில் அடையலாம். ஒன்று நேரடியாக நம் தள முகவரியை பிரவுசரில் கொடுத்து வருவது. இது நாம் சில முக்கியமான தளங்களுக்கு மட்டுமே இவ்வாறு செய்வோம். ஏனென்றால் லட்சக் கணக்கான இணைய தளங்கள் இருக்கும் போது நமக்குத் தேவையான எல்லா தளங்களையும் நினைவில் கொள்வது என்பது சாத்தியமில்லாத விஷயம். நாம் நேரடியாக உள்ளீடு செய்து போகும் தளங்கள் எல்லாம் முக்கியத்துவம் வாய்ந்த பேஸ்புக், கூகுள், ஜிமெயில், டுவிட்டர் போன்ற தளங்கள் தான்.

இரண்டாவது முறை கூகுள் போன்ற தேடல் பொறிகளில் தேடி அதன் மூலம் வேண்டும் தளத்தை அடைவது. நம் தேவையை கூகுளில் உள்ளிட்டால் அது லட்சக்கணக்கான தளங்களைக் காட்டும். அதில் முதல் சில இடங்களைப் பிடிக்கும் தளங்களை நாம் பொதுவாக தேர்வு செய்வோம். இதன் மூலம் நம் தேவையை அடைந்து கொள்வது இரண்டாவது முறை.

மூன்றாவது முறை இன்னொரு தளத்தில் இருக்கும் சுட்டியின் மூலம் அடைவது. அதாவது, இப்போது நான் www.google.com என்று கொடுத்தால் இதை நீங்கள் க்ளிக் செய்து கூகுளை அடையலாம். அது போல என் வலைப்பூவுக்கான சுட்டியை நண்பர்கள் பலரும் அவர்களுடைய வலைப்பூக்களில் கொடுத்திருக்கிறார்கள். இது நம்முடைய போஸ்ட்டின் நடுவிலும் இருக்கலாம், அல்லது சைடு பார் அல்லது ஹெடர் அல்லது ஃபூட்டர் பகுதியிலும் இருக்கலாம். இதுவே நாம் சுட்டி என்கிறோம். இது மூன்றாவது முறையில் ஒரு தளத்தை அடையும் வழிமுறையாகும்.

இப்போது, எந்த முறையில் நம் தளத்தை வாசகர்கள் அதிகமாக அடைகிறார்கள் என்று பார்த்தால் அது தேடல் பொறிகள் மூலமாகத் தான். திரட்டிகளும் குட்டித் தேடல் பொறிகள் தான். ஆக இந்த வகையாக நமக்குக் கிடைக்கும் கூட்டத்தை, டிராஃபிக்கை ஆர்கானிக் டிராஃபிக் என்பார்கள்.

அதிகமான அளவில் ஆர்கானிக் டிராஃபிக் பெற வேண்டும் என்பது தான் ஒவ்வொரு தளத்தின் நோக்கமாக இருக்கிறது. அதற்கு ஒவ்வொரு தளமும் பல விதத்தில் முயற்சி செய்கிறது. ஆஃப்லைன் பிசினஸுக்கு பெருக்கும் வழிகளாக விளம்பரம் பயன்படுகிறது. ஆனால் ஆன்லைன் பிசினஸுக்கு பெருக்கும் வழிகள் வேறு மாதிரியானவை. இந்த வழிகளை சர்ச் இஞ்சின் ஆப்டிமைசேஷன் சுருக்கமாக SEO, தமிழில் சொன்னால் தேடல் பொறி உகப்பாக்கம் என்று சொல்லலாம்.
தேடல் பொறி உகப்பாக்கம் பற்றி சற்று விரிவாகப் பார்த்தால் தான் காப்பியடிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகளை விளங்கிக் கொள்ள முடியும். அதை அடுத்த பதிவில் காணலாம்.

-சுமஜ்லா.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!