’என்’ எழுத்து இகழேல்

’என்’ எழுத்து இகழேல்


உங்கள் எழுத்துக்குப் பணம் வேண்டுமா?

Posted: 16 Jun 2012 07:08 AM PDT

கடைசியாக பதிவிட்டு ஒரு வருடம் கடந்துவிட்டது. பலப்பல மின்னஞ்சல்கள் பதிவிடக்கோரி. குறிப்பாக நிஜாம் அண்ணனுக்கு என் நன்றிகள். என் இனிய வாசகர்களை நான் இழந்துவிட்டது வருத்தம் தான். பலரும் நான் ஆசிரியைப் பணியில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் இருப்பது எழுத்துத் துறையில் தான். அதுவும் இணையத்தில் தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். தமிழில் அல்ல ஆங்கிலத்தில்.


இசையில் ரசனையுள்ளவர்கள் இசையமைப்பாளர்களாகும் போது கரும்பு தின்ன கூலி கிடைப்பது போல மனமகிழ்வுடன் பணமும் கிடைக்குமே அதுபோல இப்போது என் பணி, என் மூச்சு, என் பொழுதுபோக்கு, ஏன் என் வாழ்க்கையே எழுதுவது என்று ஆகிவிட்டது. அதுவும், சாமானிய இந்தியர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு வருமானத்துடன்…. ஆர்வமுள்ள யாவரும் பணம் சம்பாதிக்கலாம் இத்துறையில். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்ற துறை இது. திறமை மட்டும் இருந்தால் போதும், திறம்பட செயல்புரியலாம்.


நான் ஒரு ஃப்ரீலான்சராகத் தான் என் எழுத்துப் பணியைத் துவக்கினேன். SEO என்று சொல்லக்கூடிய துறையில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. தற்போது, கடந்த ஒரு வருடமாக கேலக்ஷி இன்போமீடியா நிறுவனத்தின் வெப்சைட்டான http://www.veethi.com/ ல் பணிபுரிகிறேன். அந்த சைட்டில் இருக்கும் எழுத்தில் கிட்ட்த்தட்ட 90% என்னுடையது என்று சொல்வேன். நல்ல கௌரவமான பொறுப்பில் இருக்கிறேன். நிறைய உழைப்பு ஆனால் வீட்டில் இருந்தபடியே!


அந்த சைட்டில் எழுத்தார்வம் உள்ள யாவருக்கும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். உங்கள் படைப்புகள் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். உங்கள் எழுத்துக்குப் பணம் தருகிறார்கள். ஃபோரமில் எழுதுவது, கட்டுரை எழுதுவது, போட்டோ அப்லோட் செய்வது, பிசினஸ் ரிவியூ எழுதுவது, புது உறுப்பினர்களைச் சேர்ப்பது என அனைத்துக்கும் ரிவார்டு பாயிண்டுகள் உண்டு. உறுப்பினராக சேர்ந்தவுடன் 20 ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்கும். ஒரு பாயிண்டின் மதிப்பு ருபாய் ஐந்து. குறிப்பிட்ட பாயிண்ட் சேர்ந்தவுடன் செக் அனுப்பி விடுவார்கள். பணத்துக்கு நான் கியாரண்டி! ரிவார்டு பாயிண்ட் பற்றிய விபரங்களுக்கு: http://www.veethi.com/reward_points.php  

அத்தளத்தில் உள்ள பல பிரிவுகளில் சில:


தற்போது நான் Travel Guide பிரிவில் பணிபுரிகிறேன். அதோடு வேறு சில பொறுப்புகளும் உண்டு. Articles பிரிவில் என்னுடைய எழுத்துக்களைப் பார்க்கலாம். வீதி.காமில் என்னுடைய புரொஃபல்: http://www.veethi.com/profile.html?user_id=2519  


என்னுடைய பதிவுகளில் எனக்குப் பிடித்தவை:



மேலும் விவரங்கள் தேவைப்பட்டால், என்னை மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். என் சக பதிவுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்! பலரும் பயனடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் கேட்பது என்னவென்றால், இத்தளத்தைப் பற்றி, ரிவார்டு பாயிண்டுகள் பற்றி உங்கள் பிளாகிலும் பதிவிட வேண்டும். எழுதுங்கள்! எழுதுங்கள்!! எழுதிக்கொண்டே இருங்கள்!!!


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!