’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் |
Posted: 13 Mar 2010 07:37 PM PST அருமைத் தோழர்கள் அண்ணலார் மேல் பெருமதிப்பு கொண்டிருந்தனர். அவர்பொருட்டு, தம்முயிரையும் ஆசையுடன் தரத்துடித்தனர். அத்தகைய தோழரொருவர் அர்க்கம்; என்றும் நாடினார் சொர்க்கம்! சபா குன்றின் மேலிருந்த தம் மாளிகையை நபிகளுக்கு செய்தார் தத்தம்! அவர் பதினெட்டு வயது மக்ஜூமி கோத்திரத்தாரே! அதே கோத்திரத்து அபூஜஹலும் தறிகெட்டு மதிகெட்டு ஆத்திரத்தால் கொக்கரித்தானே!! அர்க்கமின் மாளிகையில் சொர்க்கத்தைத் தேடி சர்க்குண மார்க்கத்தின் தொழுகை நடந்தது; இறையை நோக்கி, அழுகை புரிந்தது! தாருஸ்ஸலாம் என்று அது பேரும் பெற்றது! சாந்தி மாளிகையில், சாந்தம் தவழ்ந்தது!! கொக்கரித்த அபூஜஹல், தாருல் நத்வாவில் கூடினான்! கட்டிளங்காளையர் பலரைக் கூட்டினான்! நபிகளுக்கு எதிராக ஒரு வேள்வியை மூட்டினான்!! விலை வைத்தான் நபிகள் தலைக்கு! உலை வைத்தான் முஸ்லிம்கள் நிம்மதிக்கு!! நூறு ஒட்டகை தருவேனென்று தத்தம் செய்தான். பேரும் புகழும் தமக்கே என்று சத்தம் செய்தான். உமர் இப்னு கத்தாப் என்னும் முப்பத்திமூன்று வயது இளவல் ஒருவர் அப்பக்கம் வந்தார்; காட்டிய ஆசையில் தம் கருத்தை இழந்தார் - தாம் அக்காரியத்தை செய்து முடிப்பதாக திருவாய் மலர்ந்தார்! பளபளக்கும் வாளுடன் கனல்தெறிக்கும் கண்ணுடன் மனம் முழுக்க வெறியுடன் மதிகெட்ட மனத்துடன் தீரத்துடன் நடக்கிறார் ஈர இதயர் இல்லம் நோக்கி!! மக்களின் உள்ளங்கள் மறைந்திருப்பதை அறியாது! சொற்களின் வேகங்கள் இறையாணையைத் தெரியாது!! வழியில் ஸஅத் பின் அபீவக்காஸ் என்னும் வாலிபர் அவரை வழிமறித்தார்! கோபத்தைத் தூண்டும் சில மொழியுரைத்தார்!! "கையில் வாளேந்தி, கடுகி நடக்கும் காரணமென்ன காளையரே?" "முஹமதை ஒழித்துக் கட்டி சகமதில் புகழைப்பெற சபதம் பூண்டிருக்கிறேன் நண்பரே!" "சொல்வது சரிதான் நான் புகல்வதை சற்றுக் கேளும்! உள்வீடு பூசித்தான் வெளிவீடு பூச வேண்டும்! உம் தங்கையும் மைத்துனரும் புதுமார்க்கத்தில் இணைந்துள்ளனர்! அவர்களையன்றோ முதலில் திருத்த வேண்டும்??? பிறகல்லவா உம்பார்வை முஹமதை நோக்கித் திரும்ப வேண்டும்???" உமரவரை வழிமறித்தார், நயம்படவே இடித்துரைத்தார்! -சுமஜ்லா. (வளரும்) |
You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
கருத்துகள்