’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் |
Posted: 14 Aug 2012 03:23 PM PDT "மம்மி உங்க டேப்லட் கொடுங்க மம்மி… நான் கேம்ஸ் விளையாடணும்" "தர மாட்டேன் போடா…" "டாடி எனக்கொரு டேப்லட் வேணும் டாடி……. ப்ளீஸ் டாடி" என் மகன் என்னுடைய டேப்லெட்டில் கொஞ்சம் நாள் விளையாடிக் கொண்டிருந்தான். ஆனால் அதில் மெமரி போதாததால் எல்லா கேமையும் தூக்கிவிட்டேன். இன்னும் கொஞ்சம் மெமரி கூடுதலாக இருந்திருந்தால் நல்லா இருக்குமே என்று இப்போது நினைக்கிறேன். என்னுடையது ஸ்மார்ட் ஃபோன் டேப்லட். வாங்கியவுடன் தான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டேன். அதை இங்கே தருகிறேன். ஆகாஷ் டேப்லட் வருகைக்குப் பிறகு இந்தியாவில் இணைய பயன்பாடு அதிகரிக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு. இன்று ரூ.4000 முதலே டேப்லட் கிடைக்கிறது. ஆனால் எவ்வித வசதிகள் தேவை என்று நாம் முடிவு செய்தபின் வாங்குவது நல்லது. டேப்லட் வாங்கும் முன் எனக்குள் சில கேள்விகள் இருந்தன. அவை, 1. டேப்லட்டில் ஃபோன் பேச முடியுமா? 2. அதில் விண்டோஸில் செய்யும் எல்லாம் செய்ய முடியுமா? 3. MS WORD டாகுமெண்ட் பயன்படுத்த முடியுமா? 4. பென் டிரைவ் உபயோகிக்க முடியுமா? 5. தேவையான அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்ய முடியுமா? 6. தமிழ் எழுத்து தெரியுமா? தமிழ் டைப் செய்ய முடியுமா? 7. ஜிடாக்கில் வாய்ஸ் கால் பேச முடியுமா? வீடியோ கால் சாத்தியமா? 8. அதில் பேட்டரி எவ்வளவு நேரம் நிற்கும்? 9. எல்லா வீடியோ ஃபார்மட்டும் தெரியுமா? 10. எக்ஸ்டர்னல் கீ போர்டு பயன்படுத்த முடியுமா? 11. டேப்லெட்டில் இருப்பதை கணினிக்கு எப்படி அனுப்புவது? இதில் பல கேள்விகளுக்கு விடை தெரியாமலே வாங்கி விட்டேன். பொதுவாக டேப்லெட்டில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஃபோன் பேசும் வசதியுடன் கிடைப்பது. இன்னொன்று ஃபோன் பேச முடியாது. சிம் கார்டு ஸ்லாட்டுடன் இருந்தால் கண்டிப்பாக போன் பேசலாம். இந்தியாவில் கிடைப்பவை அதிகமாக 7 இன்ச் ஸ்கிரீன் கொண்டிருக்கும். எல்லா டேப்லெட்டும் டச் ஸ்க்ரீன் தான். அதில் ரெசிஸ்டிவ் டச் மற்றும் கெபாசிடேடிவ் டச் என்று இரண்டு உண்டு. முதல் வகை சிறு குச்சியால் தொட்டு பயன்படுத்த வேண்டும். இரண்டாவது சும்மா பூ மாதிரி லேசா தொட்டாலே போதும். இது கொஞ்சம் விலை கூடுதல். டேப்லெட் ஆண்டிராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதற்கும் விண்டோஸுக்கும் பல வேறுபாடுகள் உண்டு. நான் விண்டோஸில் .exe ஃபைல்கள் போல இதில் .apk ஃபைல்கள். கூகுள் ப்ளே (Google Play) தளத்தில் பல உபயோகமானவை இலவசமாகக் கிடைக்கின்றன. விண்டோஸ் விஸ்டா, விண்டோஸ் 7 போல இதிலும், Android 2.2 (froyo), Android 2.3 (gingerbread), Android 3.1 (honeycomb) மற்றும் Android 4 (ice cream sandwich) என்று பல வெர்ஷன் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உள்ளது. பொதுவாக இந்தியாவில் விலை மலிவாகக் கிடைப்பது 2.2 அல்லது 2.3 கொண்டிருக்கும். இவற்றில் வீடியோ கால்கள் பேச முடியாது. ஜிடாக்கில் சாட் பண்ணலாம், பேச முடியாது. ஆனால் SKYPE ல் பேசலாம். TANGO என்ற மென்பொருள் மூலமாக இதில் வீடியோ சாட்டிங்கும் பண்ண முடியும் தற்போது. ஃபோன் பேச முடியுமா என்றால், சிம் ஸ்லாட் உள்ளதில் பேசலாம். ஆனால் பலவற்றில் Loudspeaker மட்டுமே உண்டு. ஆக Bluetooth ஹெட்செட் காதில் மாட்டிக் கொண்டால் சுலபமாக அடுத்தவருக்குக் கேட்காதபடி பேசலாம். ஆனால் அதற்கு நம் டேப்லெட்டில் Bluetooth வசதி வேண்டும். அல்லது ஒயருடன் கூடிய ஹெட்ஃபோன் மைக் வேண்டும். விலை மலிவு டேப்லட்டில் பொதுவாக புளூடூத் வசதி இருக்காது. டேப்லெட்டுக்கென்று மினி கீபோர்டு விற்பனையாகின்றன. அதை USB போர்ட் மூலம் உபயோகப்படுத்தலாம். ஆனால் எல்லா டேப்லெட்டிலும் USB வசதி இருக்காது. USB Host Mode Enable செய்திருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். அதாவது உங்கள் டேப்லெட்டில் இருந்து கணினியின் USB க்கு கனெக்ட் செய்யலாம். அதன் மூலம் இதன் தகவல்களை கணினிக்கும், அதிலிருந்து இதற்கும் அனுப்பலாம். அதற்கு mini USB போர்ட் மட்டும் டேப்லெட்டில் இருக்கும். இதைக் கொண்டு பென் டிரைவோ அல்லது வேறு USB பொருள்களோ உபயோகிக்க முடியாது. சாதாரணமாக ரெசிஸ்டிவ் டச் உள்ளவற்றிற்கே எக்ஸ்டெர்னல் கீபோர்டு பயன்படுத்துவார்கள். ஆக விலை மலிவான டேப்லெட்டில் தான் USB வசதி பொதுவாக தரப்பட்டிருக்கிறது. 2G வசதி மட்டும் கொண்டவை விலை குறைவு. 3G உடன் வருபவை சற்று அதிக விலை. டேப்லெட்டின் எடை சுமார் 350 – 400 கிராம் இருக்கும். எல்லா வீடியோ ஃபார்மட்டும் சப்போர்ட் செய்யாது ஆனால் அதற்கென உள்ள மென்பொருளை பதிந்து விட்டால் பிரச்சினை தீர்ந்து விடும். ஆண்டிராய்டுக்கு என்று ஆயிரக்கணக்கான கேம்ஸ் உள்ளன. ஜிபிஸ், ப்ளூடூத், 2 ஜி, 3 ஜி, ஜிபிஆரெஸ், வை-ஃபை, ஃபிரண்ட் கேமரா, பேக் கேமரா ஆகியவை டேப்லெட்டில் உள்ள வேறு சில வசதிகள். என்னுடையதில் இவை எல்லாமே உண்டு. டேப்லெட்டின் இண்டெர்னல் மெமரி, எக்ஸ்டெர்னல் மெமரி, ROM மற்றும் RAM என்று நான்கு உண்டு. இண்டெர்னல் மெமரி என்பது அதன் உள்ளே இன்பில்ட்டாக (inbuilt) ஆக இருக்கும் மெமரி கார்டு போன்றது. இதில் நாம் வேண்டுவதை பதியலாம். என்னுடையதில் இது 8 ஜிபி ஆகும். எக்ஸ்டெர்னல் மெமரி என்பது மெமரி கார்டின் மெமரி. என் டேப்லெட் 32 ஜிபி வரை சப்போர்ட் செய்யும். RAM என்பது அதன் வேகத்தை நிர்ணயிக்கிறது. இது பொதுவாக 256 எம்பி, 512 எம்பி மற்றும் 1 ஜிபி அளவுகளில் தற்சமயம் கிடைக்கிறது. ROM என்பது தான் நாம் இன்ஸ்டால் செய்யும் மென்பொருள்களின் சிஸ்டம் ஃபைல்கள் சேமிக்கும் இடமாகும். இதில் தான் எனக்கு பற்றாக்குறை. என்னுடைய RAM 512 எம்பி, ROM 256 எம்பி. ஒவ்வொரு Appம் (மென்பொருளும்) மிகக் குறைவாகவே இடம் எடுக்கிறது ஆனாலும் தேவையானவற்றையெல்லாம் போடும் போது இடப்பற்றாக்குறை. பொதுவாக எனக்கு ஒரு நாள் முழுவதும் பேட்டரி நிற்கிறது. தமிழ் எழுத்து தட்டச்ச சில வழிகள் உண்டு. அதே போல ஒபேரா மினி மூலம் தமிழ் எழுத்துக்கள் படிக்கலாம். ஆண்டிராய்டு 4 என்றால் இந்த சிரமம் இல்லை. டேப்லெட்டின் மூளைக்குள் கைவைப்பதை ரூட் (ROOT) செய்வது என்கிறோம். இதற்கென பிரத்தியோக மென்பொருள்கள் உண்டு. தெரியாமல் இவ்வேளைகள் செய்தால் போச்சு! நான் தமிழ் பாண்ட் இன்ஸ்டால் செய்ய வேண்டி ரூட் செய்து இரண்டு முறை வாரண்ட்டிக்கு போயிட்டு வந்தது. என் ஸ்மார்ட் ஃபோன் டேப்லட்டை முடிந்தவரை குடைந்து, அதை இம்சைப்படுத்தி நிறைய கற்றுக் கொண்டு, அதை செயலிழக்க வைத்து வாரண்டிக்கு அனுப்பியதால் இது ஏதடா பேஜார் என்று இப்போது பொம்மை மாதிரி வைத்துக் கொண்டிருக்கிறேன். இப்போ சொல்லுங்க, இதை என் மகனுக்கு தரலாமா? மேலும் சில விவரங்கள் இங்கே: http://www.veethi.com/articles/proliferation_of_tablets_in_india_-_read...-article-604.htm - சுமஜ்லா |
You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
கருத்துகள்