’என்’ எழுத்து இகழேல்

’என்’ எழுத்து இகழேல்


வெப் ஹோஸ்ட்டில் வோர்டுபிரஸ் இன்ஸ்டால் செய்வது எப்படி?

Posted: 18 Aug 2012 10:53 AM PDT


தற்சமயம் உங்களிடம் இருக்கும் வெப்சைட்டில் ப்ளாகை இணைக்க வேண்டும் என்றாலோ அல்லது வோர்டுபிரஸில் உங்கள் சைட் இயங்க வேண்டும் என்றாலோ நீங்கள் வோர்டுபிரஸை உங்கள் வெப் ஹோஸ்ட்டில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

இதற்கு என்ன தேவை:

1. வெப் சர்வர் (Web Server)
2. File Zilla போன்ற FTP Client
3. டெக்ஸ்ட் எடிட்டர்

செய்முறை


1. முதலில் நீங்கள் வோர்டுபிரஸ் லேட்டஸ்ட் எடிசனை இங்கே இருந்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பிறகு அதை UNZIP செய்து வைத்துக் கொள்ளுங்கள்.


2. FileZilla இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள். இது இல்லாதவர்கள் இங்கே டவுன்லோடு செய்து கொள்ளலாம். இதற்கு உங்கள் டொமைன் பெயர், யூசர் பெயர், பாஸ்வோர்டு ஆகியவை கொடுக்க வேண்டும். அதை உங்கள் வெப் ஹோஸ்ட்டிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.


3. அடுத்து நீங்கள் ஒரு MySQL டேட்டாபேஸ் உங்கள் வெப் ஹோஸ்ட்டில் உருவாக்க வேண்டும். இது ஒன்றும் கஷ்டமான காரியம் அல்ல. உங்கள் வெப் ஹோஸ்ட் கண்ட்ரோல் பேனலில் அதற்கான லின்க் இருக்கும். அவ்வாறு உருவாக்கும் போது உங்கள் டேட்டாபேஸுக்கு பெயர், பாஸ்வோர்டு மற்றும் யூசர்நேம் கொடுக்க வேண்டும். அதை குறித்துக் கொள்ளுங்கள். இங்கே ஹோஸ்ட் நேம் பொதுவாக localhost என்று இருக்கும். வேறுபட்டிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.


4. இப்பொழுது நீங்கள் UNZIP செய்த வோர்டுபிரஸ் ஃபைலில், wp-config-sample என்று ஒரு ஃபைல் இருக்கும். இதை Notepad ல் திறந்து கீழ்கண்ட வரிகளைத் தேடுங்கள்.

// ** MySQL settings - You can get this info from your web host ** //

/** The name of the database for WordPress */
define('DB_NAME', 'putyourdbnamehere');

/** MySQL database username */
define('DB_USER', 'usernamehere');

/** MySQL database password */
define('DB_PASSWORD', 'yourpasswordhere');

/** MySQL hostname */
define('DB_HOST', 'localhost');

இங்கே நீங்கள் உருவாக்கிய டேட்டாபேஸ் பெயர், பாஸ்வோர்டு, யூசர்நேம் ஆகியவற்றைக் கொடுத்து விடுங்கள். உதாரணமாக நீங்கள் உருவாக்கிய டேட்டாபேஸ் பெயர் veethi என்றால் கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்.

/** The name of the database for WordPress */
define('DB_NAME', '
veethi');


5. இப்பொழுது உங்கள் FileZilla வைத் திறந்து உங்கள் ஹோஸ்ட் சர்வருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதற்கு உங்கள் டொமைன் பெயர், அதற்கான யூசர் நேம், பாஸ்வோர்டு கொடுக்க வேண்டும்.


6. இப்பொழுது ஏற்கனவே வைத்திருக்கும் வோர்டுபிரஸ் ஃபைல்களை இங்கே போட வேண்டும். அதை ரூட் டைரக்டரியில் போடுவதா அல்லது ஒரு சப் டைரக்டரியில் போடுவதா என்று முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக www.veethi.com என்பது root directory. அதுவே www.veethi.com/articles என்பது sub directory ஆகும்.


7. இப்பொழுது பிரவுஸரில், நீங்கள் root directory ல் போட்டிருந்தால், http://www.veethi.com/wp-admin/install.php என்று டைப் செய்யுங்கள் அல்லது sub directory உருவாக்கி அதில் போட்டிருந்தால், http://www.veethi.com/wp-admin/articles/install.php என்று டைப் செய்யுங்கள். இங்கு www.veethi.com என்று இருப்பதற்கு பதிலாக உங்கள் டொமைன் பெயர் கொடுக்க மறக்காதீர்கள்.


8. இவ்வாறு கொடுத்து விட்டால், பிறகு மற்ற விஷயங்களை வோர்டுபிரஸ் பார்த்துக் கொள்ளும். Enter தட்டிய உடன் ஸ்கிரீனில் சொல்லும்படி செய்தால் வேலை முடிந்தது. இப்போது, உங்கள் யூசர்நேம், பாஸ்வோர்டு கொடுத்து வோர்டுபிரஸில் லாக் இன் செய்து நீங்கள் அப்டேட் செய்ய வேண்டியது தான். ஆக, சுலபமாக ஒரு வெப்சைட் உருவாக்கி விட்டீர்கள்.

- சுமஜ்லா


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!