’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் |
படிக்காமலே மதிப்பெண் பெற உதவும் கல்விமுறை Posted: 02 Feb 2013 11:23 AM PST மகன் லாமின் முன்பு மெட்ரிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பக்கம் பக்கமாக fair noteல் எழுத வேண்டும். பொதுவாகவே எழுதுவதென்றால் அவனுக்கு அவ்வளவு கஷ்டம். எழுதி முடிக்கவில்லை என்ற காரணத்துக்காக பள்ளி நேரம் முடிந்த பிறகும் பள்ளியில் இருத்திக் கொள்வார்கள். பல நேரங்களில் பசியோடு வாடிப் போய் கிடக்கும் பிள்ளையை நாங்கள் 7 மணிக்கு போய் அழைத்து வருவோம். அவனுடைய ஃபேர் நோட்டில் நானும் சில நேரம் எழுதிக் கொடுத்திருக்கிறேன். மார்க்கும் சுமாராகத் தான் வாங்குவான். முடிவில் இது ஒத்துவராது என்று வேறு பள்ளிக்கு மாற்றி விட்டோம். இப்போது படிக்கும் பள்ளியில் சிபிஎஸ்இ சிலபஸ் ஃபாலோ பண்ணுகிறார்கள். இந்த சிலபஸ் கஷ்டம், புரிந்து படித்தால் தான் முடியும் என்று எல்லாரும் பயமுறுத்தினார்கள். இருந்தாலும் பார்க்கலாமே என்று கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் சேர்த்தோம். இப்போது லாமின் 4த் படிக்கிறான். வகுப்பில் முதல் இரண்டு இடத்துக்குள் வருகிறான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஒரு நாளும் அவன் வீட்டில் படிப்பதே இல்லை, நானும் படி என்று சொல்வதில்லை. வீட்டுக்கு வந்ததும் சிறிது நேரம் டி.வி. பார்த்துவிட்டு ஹிந்தி டியூசனுக்கு போய் விடுவான். வந்ததும் கொஞ்சம் நேரம் ஹோம் வொர்க் செய்வான். அவ்வளவு தான். பரிட்சை அப்போ கூட படிக்க மாட்டான். ஹோம் வொர்க் எல்லாம் அறிவுக்கு வேலை தருவதாக இருக்கும். அதாவது ஒர்க் ஷீட் தான். பதிலை அவர்களாகத் தான் தேடி பாடத்தில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும். Rote memorization எல்லாம் கிடையாது. பல நேரங்களில் அவன் நெட்டில் தேடி கண்டுபிடித்துக் கொள்வான். சில நேரங்களில் மட்டும் நான் உதவி செய்வேன். விடையை எப்போதும் சொல்லித் தர மாட்டேன். ஆனால், எப்படி கண்டுபிடிப்பது என்று சில நேரம் க்ளூ மட்டும் கொடுத்து அவனையே கண்டுபிடிக்க வைப்பேன். நான் படித்த பி.எட் இதற்காகவாவது உதவுகிறது. இப்போது மதிப்பெண் லட்டு மாதிரி வாங்குகிறான். கணக்கில், சயின்ஸில், கம்ப்யூட்டர் சயின்ஸில் மற்றும் சோஷியலில் எப்போதும் வகுப்பில் முதல் தான். பெரும்பாலும் செண்டம் வாங்கி விடுகிறான். ஆனால், தமிழும் ஆங்கிலமும் மட்டும் கொஞ்சம் உதைக்கும். ஸ்பெல்லிங் தகராறினால் மதிப்பெண் குறைந்து விடுகிறது. ஆனாலும், நான் அதையும் படி படி என்று சொல்வதில்லை, மாறாக தமிழ் நியூஸ் ஆன்லைனில் வாசிக்க சொல்வேன், ஆங்கில நியூஸ் பேப்பர் ஸ்டூடண்ட் எடிஷன் ஸ்கூலில் தினமும் கொடுக்கிறார்கள், அதை வாசிக்கச் சொல்வேன். ஒரு நல்ல கல்வி LSRW Skills வளர்ப்பதாக இருக்க வேண்டும். அதாவது, listening, speaking, reading and writing. நான் பெரும்பாலும் என் பிள்ளைகளிடம் ஆங்கிலத்திலேயே பேசுவதால் (அவர்கள் பழக வேண்டும் என்று) அவர்களுடைய ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்ற வகுப்பு தோழர்களுடையதை விட மேலாகவே இருக்கிறது. வீட்டில் படிக்காமலே எப்படி மார்க் வாங்குகிறான் என்பது தான் எனக்கு ஆச்சரியம். டீச்சரிடம் 'வீட்டில் இவன் படிப்பதே இல்லை, எப்படி மார்க் வாங்குகிறான், வகுப்பில் மற்ற அனைவரும் சராசரியா?' என்று கேட்டேன். இக்கேள்வி அவரை கோபப்படுத்தி இருக்க வேண்டும். அவர் என்னிடம் கேட்கிறார், 'எதற்கு வீட்டில் படிக்க வேண்டும்? ஹோம் வொர்க் மட்டும் செய்தால் போதும், அதான் இங்கேயே எல்லாம் புரியவைத்து விடுகிறோமே என்று'. எனக்கு ஆச்சரியம் ஒரு புறம். இத்தகைய எஜுகேஷன் சிஸ்டம் என் மகனுக்கு வாய்த்திருக்கிறதே என்ற சந்தோஷம் ஒரு புறம். அவன் ஒரு போதும் மனப்பாடம் செய்வதில்லை, புரிந்து படிக்கிறான் என்று புரிந்தது. மேலும் அவன் ஆசிரியை சொன்னது என்னவென்றால், 'உங்கள் பிள்ளைக்கு கணக்கு மிக நன்றாக வருகிறது, நேரடியான கணக்கை எல்லாரும் போட்டுவிடுவார்கள், ஆனால் சுற்றி வளைத்துக் கேட்டால், இவன் ஒருவன் மட்டும் தான் வகுப்பில் போடுகிறான். நிறைய puzzlesம் மேல் வகுப்பு கணக்குகளையும் நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொடுங்கள்... மிகவும் திறமையாக வருவான்' என்றார். கணக்கென்றால் நான் காததூரம் ஓடுவேன், நான் எங்கே இந்த ஆராய்ச்சியெல்லாம் செய்யப் போகிறேன் என்று விட்டுவிட்டேன். +2 படிக்கும் மகள் சில நேரம் அவள் பாடத்தில் வரும் கணக்குகளை அவனுக்கு சொல்லிக் கொடுப்பாள், அதையும் கூட புரிந்து கொள்கிறான். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், ஒரு பிள்ளை படிப்பதற்கும் படிக்காததற்கும், Education System ல் இருக்கும் குறைபாடும் ஒரு காரணம். பிள்ளைகளின் திறமைகளை சரியாக எடை போடத் தெரிந்த ஆசிரியர்கள் வாய்த்தால் எல்லாப் பிள்ளைகளும் அறிவாளிகளே! தமிழ் நாடு எஜுகேஷன் சிஸ்டத்தைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழிலோ ஆங்கிலத்திலோ இங்கே பதியுங்கள்:Education in Tamil Nadu கமெண்ட்ஸில் சொல்லப்படும் கருத்துக்கள் சில நாட்களில் மற்றவர் பார்வையில் இருந்து மறைந்து விடும். ஆனால், நம் கருத்துக்களை பலரும் அறியச் செய்வதற்கென்றே புது முறையில் ஒருவாக்கப்பட்டிருக்கும் புதுமையான தளம் இது! |
You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
கருத்துகள்