இருமல், தொண்டைப்புண்களை சீர் செய்யும் கொய்யா

இருமல், தொண்டைப்புண்களை சீர் செய்யும் கொய்யா

Guava is one of the fruits available at the cheapest price. This fruit is not cheap. Has several benefits. Get 4 apple a good one



மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல. பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாபழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொய்யாபழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும். இதில், முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவையாகும். கொய்யாபழத்தில் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன.

கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். பல்வேறு மருத்துவ குணம் உள்ள கொய்யாபழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், வயிற்றுவலி உண்டாக்கும்.   மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.  கொய்யாபழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கலாம்.

ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி சிறிது நேரம் கழித்து வாயை கொப்பளித்தால், வலி மற்றும் ஈறு வீக்கம் குறையும்.  மழைக்காலத்தில் பெரும்பாலானோருக்கு இருமல் மற்றும் தொண்டைப்புண் வரக்கூடும். இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வாயை கொப்பளித்தால் விரைவில் குணமாகும்.

மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும். இதன்மூலம் மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.  வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை சாப்பிடக்கூடாது. வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கொய்யாபழத்தை சாப்பிடக்கூடாது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!