இதை யோசித்தீர்களா?
இதை யோசித்தீர்களா?
தங்கை : அண்ணா, உங்க கிட்ட
ஒரு கேள்வி கேக்கலாமா?
அண்ணன்: கேளேன்...
தங்கை :
ஒரு மணி நேரத்திற்கு நீங்கள்...
எவ்வளவு சம்பாதிகிறீர்கள்?
அண்ணன் : 1000 ரூபாய் ...
தங்கை : அப்படீனா எனக்கு 50
ரூபாய்
தாங்கண்ணா!
அண்ணனுக்கு மிகவும் கோபம்
ஏற்பட்டது. ஆனாலும் மறுக்க
முடியாமல் 50
ரூபாயை கொடுத்தான்.
தங்கை சிரித்த முகத்தோடும்,
சந்தோசமாகவும் அந்த
பணத்தை வாங்கி கொண்டாள் .
அப்படியே தனது தலையணைக்கு கீழே கை போட்டு அங்கிருந்த
வேறு சில பணத்தை எடுத்தாள்.
அண்ணன்: உன்கிட்ட நிறைய பணம்
இருக்குத்தானே, பின் எதுக்காக
என்னிடம் கேட்டாய்?
தங்கை: முன்பு என்கிட்ட
போதுமான
பணமில்ல...
அதான். ஆனா இப்ப
என்கிட்ட 1000 ரூபாய் இருக்கு.
உங்க
நேரத்துல ஒரு மணி நேரத்த நான்
வாங்கி கொள்ளலாமா?
நாளைக்கு நேரத்தோட
வீட்டுக்கு வாங்கண்ணா உங்க கூட
சேர்ந்து உட்கார்ந்து ஒன்னா சாப்பிடனும்.
அண்ணனுக்கு மிகவும்
கவலையும்,
கண்ணீரும் வந்தது.
அப்படியே ஸ்தம்பித்து போனார்.
உடனே தங்கையை தனது நெஞ்சோடு அணைத்துக்
கொண்டு கண்ணீர் மல்க,
தன்னை மன்னிக்கும்படி வேண்டி
நீதி:
"தன்னை நேசிப்பவர்களுக்
கு காட்டப்படும் அன்பை விட பணம்
ஒன்றும் பெரிதல்ல".
குடும்பத்துக்கா
க உழைக்கும் நீங்கள்
குடும்பங்களின்
சந்தோசத்தையும் கவனியுங்கள்.
சில
மணி நேரத்தை உங்கள்
குடும்பத்தோடு செலவழியுங்கள்.
நாளை நாம் மரணித்தால் நாம்
பணி புரிந்த நிறுவனம்
நமக்கு பதிலாக
வேறொருவரை பணிக்கு அமர்த்திக்
கொள்ளும். ஆனால்
நமது குடும்பம்
துக்கத்தோடும், துயரத்தோடும்
நம்மை எண்ணி எண்ணி வாழுமே!
இதை யோசித்தீர்களா?
கருத்துகள்