Microsoft Virtual PC -2007
Microsoft Virtual PC -2007
கணினிப் பயனர்களில் அனேகர் வெவ்வேறு இயங்கு தளங்களை (operating system) தமது கணினியில் நிறுவிப் பணியாற்ற விரும்புவர். எடுத்துக் காட்டாக விண்டோஸ் எக்ஸ்பீயில் பணியாற்றுவோர் விண்டோUஸின் பழைய பதிப்புகளான விண்டோஸ் 2000 மற்றும் விண்டோஸ் 98, விண்டோUஸின் புதிய பதிப்பான விஸ்டா போன்ற இயங்கு தளங்களையும் சேர்த்து கணினியில் நிறுவிக் கொள்ள விரும்புவர்.
அவ்வாறே விண்டோஸ் இயங்கு தளத்திற்குப் பழக்கப் பட்டவர்கள் விண்டோஸ் அல்லாத லினக்ஸ் போன்ற இயங்கு தளங்களைப் பற்றி அற்ந்து கொள்ள ஆர்வமாயிருப்பர். லினக்ஸிலும் ரெட் ஹெட், பெடோரா, மென்ரிவா, உபுண்டு எனப் பல நிறுவனங்கள் வெளியிடும் (distributions) பதிப்புகள் உள்ளன.
எனினும் ஒரு பயன்பாட்டு மென்பொருளை (application software)நிறுவுவது போன்று ஒரு இயங்கு தளத்தை நிறுவுவது என்பது எளிமையான விடயமல்ல. கணினித் துறையில் சிறிது அனுபவமும் அறிவும் அதற்கு வேண்டியிருக்கிறது. அதுவும் ஒரே நேரத்தில் ஒரு கணினியில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங் களை (duel booting) நிறுவ வேண்டுமானால் கணினி ஹட்வெயர் துறையில் சிறிது கற்றறிந்தவரா யிருத்தல் வேண்டும்.
நீங்கள் விரும்பிய இயங்கு தளத்தை விண்டோஸ¤டன் சேர்த்து நிறுவுவதற்கு உதவவென சில மென்பொருள் கருவிகள் பயன் பாட்டில் உள்ளன. இவற்றுள் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் வேர்ச்சுவல் பீசியை குறிப்பிட்டுக் கூறலாம் (Microsoft Virtual PC-2007). வேர்ச்சுவல் பீசீ மென்பொருள் மூலம் இலகுவாக ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம். இதுபோன்ற மற்றுமொரு மென்பொருள் கருவி VMware Player. இம்மென் பொருள் கருவி வேர்ச்சுவல் பீசியை விட மேலும் சில வசதிகளைக் கொண்டுள்ளது. இவற்றை இலவசமாகவே இணையத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
வேர்ச்சுவல் மெசீன் (virtual machine) என்பது டுவெல் (duel boot) பூட் அல்லது (multi boot) மல்டி பூட் இயங்குதளங்களைக் கொண்ட கணினி போன்றதல்ல. மல்டி பூட் எனப்படுவது ஒரு கணினியில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை நிறுவுதலைக் குறிக்கும். அப்படி ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவ முடிந்தாலும் ஒரே நேரத்தில் ஒரு இயங்கு தளத்திலேயெ நம்மால் பணியாற்ற முடியும். ஒவ்வொரு இயங்கு தளமும் ஒரே வன்பொருளிலேயே இயங்குகின்றன. இவை மெய்க்கணினி (real machine) எனப்படும்.
இதற்கு மாறாக வேர்சுவல் மெசீன் என்பது ஒரு மாயக் கணினி. இதன் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவி ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களில் நம்மால் பணியாற்ற முடிகிறது. அதாவது உங்கள் கணினி முதலில், பிரதான இயங்கு தளத்தை பூட் செய்யும்.. பின்னர் அதன் மீது ஏனைய இயங்கு தளங்கள் பூட் செய்யப்படும். இவை சாதாரண ஒரு பயன்பாட்டு மென்பொருள் போல் இயங்கும்.
ஆங்லகிலத்தில் வேர்ச்சுவல் எனும் வார்த்தை இல்லாத ஒன்றை இருப்பதாகக் கருவதைக் குறிக்கும். அதேபோல் இங்கு வேர்ச்சுவல் மெசீன் என்பது நிஜமான கணினியல்ல. அது நிஜம் போல் இயங்கும் ஒரு கற்பனைக் கணினியே.
வேர்ச்சுவல் கணினி என்பது ஒரு போலியன ஹாட்வெயர் சாதனங்களையும் போலியான ஹாட்டிஸ்கையும் கொண்ட நிஜமல்லாத ஒரு கற்பனைக் கணினி. வேர்ச்சுவல் கணினியில் நிறுவப்படும் இயங்கு தளங்கள் நிஜமாகவே உங்கள் ஹார்ட் வெயர் சாதனத்தில் இயங்குவதில்லை. ஒரு மென்பொருளே இங்கு ஹாட்வெயர் சாதனம் போன்று இயங்குகிறது. வேர்ச்சுவல் கணினியில் ஒரு இயங்கு தளத்தை நிறுவும் போது, அந்த இயங்கு தளம் உங்கள் கணினியின் ஹாட் வெயர் சாதனங்களோடு தொடர்பாட முயற்சிக்கும். இவ்வேளைIல் கணினியில் நிறுவியுள்ள வேர்ச்சுவல் கணினி மென்பொருள், இயங்கு தளம் கேட்கும் கேள்விக்கு நிஜமான ஹாட் வெயர் சாதனம் எவ்வாறு பதிலளிக்குமோ அதே போன்றே பதிலளிக்கும்.
உதாரணமாக வேர்சுவல் கணினி மென்பொருள் , உங்கள் கணினி Intel சிப்செட் கொண்ட மதர்போர்டை வைத்திருப்பதாக உணர்த்திவிட்டால், நிஜமாக உங்கள் கணினி மதர்போர்டில் எந்த வகையான சிப்செட் இருந்தாலும் வேர்ச்சுவல் கணினியில் உள்ள இயங்கு தளம் Intel சிப்செட் கொண்ட மதர்போர்டிலேயே தான் இயங்குவதாகக் கருதும்.
வேர்ச்சுவல் மெசீன் என்பதற்கு மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா சொல்லலியிருந்த ஒரு உதாரணத்தை இங்கு தரலாமென என நினைக்கிறேன். உங்களுக்கு ஏதோ ஒரு பொருள் தேவைப்படுBறது. அதனைக் கொண்டுவர உங்கள் வேலையாளிடம் பணிக்கிறீர்கள். வேலையாளும் அதை வீட்டிலிருந்தோ, வெளியிலிருந்தோ அல்லது கடைத்தெருவிருந்தோ வாங்கி வந்து உங்கள் முன்னே நீட்டுகிறார். அதனை எங்கிருந்து கொண்டு வரவேண்டும் என நீங்கல் அவரிடம் சொல்லவில்லை. உங்கள் தேவை நிறைவடைந்தால் போதும். இவ்வாறே வேர்ச்சுவல் கணினியும் தனக்குத் தேவையானதை கொடுத்துவிட்டால் அல்லது காட்டி விட்டால் அது எங்கிருந்து கிடைக்கப் பெற்றது எனப் பார்பதில்லை.
வேர்ச்சுவல் கணினியானது நம்முடன் தொடர்பாட உள்ளிடும் மற்றும் வெளியிடும் டேட்டாவை அல்லது தகவலை நிஜக் கணினியின் கீபோட், மவுஸ், மொனிட்டர் என்பவற்றகற்கே கடத்துகிறது. அவ்வாறே நிஜக் கணினியில் ஒரு யூஎஸ்பீ மவுஸ் பொறுத்தியுள்ளதாக வைத்துக் கொள்வோம். ஆனால் வேர்ச்சுவல் மெசீனில் ஒரு பீஎஸ் 2 மவுஸே பொறுத்தியுள்ளதாக உணர்தப்பட்டுள்ளது. எனினும் யூஎஸ்பீ மவுஸை நாம் நகர்த்த வேர்சுவல் மெசீனில் பிஎஸ் 2 மவுஸை நகர்த்தப்படு வதாகக் காட்டப்படும்.
அவ்வாறே வேர்ச்சுவல் கணினில் நிஜ ஹாட் டிஸ்கிற்குப் பதிலாக வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கே பயன் படுத்தப்படுBறது. வேர்ச்சுவல் ஹாட் டிஸ்க் என்பது உண்மை யில் நிஜக் கணினியில் சாதாரன ஒரு பைலையே குறிக்கிறது. வேர்சுவல் கணினி மென்பொருள், வேர்ச்சுவல் கணினிக்கு அதனை ஒரு நிஜ ஹாட் டிஸ்காகக் காட்டிவிடுகிறது. வேர்ச்சுவல் ஹாட் டிஸ்கை பாட்டிஸன் செய்யவும் போமட் செய்யவும் கூட முடியும். எனினும் இந்த செயற்பாடுகளை வேர்ச்சுவல் கணினியிலிருந்தே செயற்படுத்த முடியும். நிஜக் கணினியில் இந்த ஹாட் டிஸ்க் என்பது ஒரு வழமையான பைல் மாத்திரமே.
வேர்ச்சுவல் கணினியை உருவாக்குவதற்கு முதலில் வேர்ச்சுவல் பீசீ மென்பொ ருளைக் கணினியில் நிறுவ வேண்டும். பின்னர் வேர்ச்சுவல் கணினி, வேர்ச்சுவல் டிஸ்க் என்பவற்றை உருவாக்கி அவற்றில் இயங்கு தளங்களை நிறுவிக் கொள்ளலாம்.
வேர்சுவல் பீசீ 2007 என்பது மைக்ரோஸொப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள ஒரு மென்பொருள். விண்டோஸ் எக்ஸ்பீ மற்றும் விஸ்டா பதிப்புகளில் நிறுவத்தக்க வகையில் இது உருவாக்கப்பட் டுள்ளது. இம்மென்பொருளைக் கணினியில் நிறுவிக் கொண்டால் எம்.எஸ்.டொஸ் உட்பட விண்டோUஸின் எப்பதிப்பையும் வேர்ச்சுவல் கணினியில் நிறுவிக் கொள்ளலாம். மைக்ரோஸொப்ட் தயாரிப்பல்லாத லினக்ஸ் போன்ற வேறு இயங்கு தளங்களையும் கூட நிறுவலாம்.
ஒரு இயங்குதளத்தை கணினியில் நிறுவும் போது பயோஸ் விவரங்களை வாசித்தறிதல், பிரதான நினைவகம் மற்றும் வீ.ஜீ.ஏ நினைவகம் என் பவற்றின் அளவினைப் பரிசோதித்தல், ஹாட் டிஸ்கைக் கண்டறிதல், அவ்வாறே நிறுவிக் கொண்டிருக்கும்போது ஹாட் டிஸ்கை போமட் செய்தல், சிஸ்டம் பைல் பிரதி செய்தல், ரீஸ்டார்ட் செய்தல், கணினி வன்பொருள்களுக்கான ட்ரைவர் மென் பொருளை நிறுவுதல் போன்ற பல செயற்பாடுகளைக் கொண்டிருக்கும். மேற் சொன்ன அத்தனை செயற்பாடுகளும் வேர்ச்சுவல் கணினியிலும் ஒரு இயங்கு தளத்தை நிறுவும் போது நடைபெறுகிறது. இவை அத்தனையும் ஒரு விண்டோவுக் குள்ளேயே நடைபெறுவது ஒரு புதுமையான அனுபவம்.
இந்த வேர்சுவல் பீசீ மென்பொருளை மைக்ரொஸொப்ட் இணைய தளத்திலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதன் பைல் அளவு 32 MB. வேர்சுவல் கணினியை உருவாக்க உங்கள் கணினியில் குறைந்த பட்சம் 512 MB அளவாவது நினைவகம் இருத்தல் அவசியம்.
கருத்துகள்