குழந்தையை நேசித்தல்
ஒரு குழந்தையை நேசித்தல் என்பது .. !!
பிடித்த விளையாட்டு சாமான்களையோ
பிடித்த உணவுப்பொருட்களையோ
...
பிடித்த விளையாட்டு சாமான்களையோ
பிடித்த உணவுப்பொருட்களையோ
...
விலையுயர்ந்த ஆடைகளையோ
குளிர் சாதன வசதி நிறைந்த வகுப்பறையின்
நுழைவு சீட்டையோ
வாங்கித்தருவது மட்டும் அல்ல
ஒரு குழந்தையை நேசித்தல் என்பது .. !!
சுயத்தை துறந்து
தலையை குணிந்து
முதுகுத்தண்டை வளைத்து
நீங்களே ஒரு விளையாட்டு பொருளாக மாறுவது
அவர்கள் ஏறி,இறங்கி ,தொங்கி
விளையாட ஒரு மரமாக
மாறுவது
மரமாக மாறிய பின்
கிளைகளின் நிழலில்
அமரவைத்து
அவர்கள்
சொல்கிற கதைகளை
எல்லாம் முடியும் வரை
கேட்பது
அவர்கள் கடிக்கும்போது இனிப்பாகவும்
பிடிக்கும்போது கைக்குள் அடக்கமாகவும்
மாறுவது
ஒரு குழந்தையை நேசித்தல் என்பது
நீங்கள் க்ற்றறிந்ததை ,தெரிந்ததை
நல்லதை
மட்டும்
கற்றுக்கொடுப்பது அல்ல
அவர்கள் க்ற்றுக்கொள்ள விரும்பும் ஒன்றை
நீங்கள் கற்றுக்கொண்டு
கற்றுக்கொடுப்பது
ஒரு குழந்தையை நேசித்தல் என்பது .. !!
உங்களின் குழந்தையை மட்டும்
நேசித்தல் அல்ல ?? !! ..
குளிர் சாதன வசதி நிறைந்த வகுப்பறையின்
நுழைவு சீட்டையோ
வாங்கித்தருவது மட்டும் அல்ல
ஒரு குழந்தையை நேசித்தல் என்பது .. !!
சுயத்தை துறந்து
தலையை குணிந்து
முதுகுத்தண்டை வளைத்து
நீங்களே ஒரு விளையாட்டு பொருளாக மாறுவது
அவர்கள் ஏறி,இறங்கி ,தொங்கி
விளையாட ஒரு மரமாக
மாறுவது
மரமாக மாறிய பின்
கிளைகளின் நிழலில்
அமரவைத்து
அவர்கள்
சொல்கிற கதைகளை
எல்லாம் முடியும் வரை
கேட்பது
அவர்கள் கடிக்கும்போது இனிப்பாகவும்
பிடிக்கும்போது கைக்குள் அடக்கமாகவும்
மாறுவது
ஒரு குழந்தையை நேசித்தல் என்பது
நீங்கள் க்ற்றறிந்ததை ,தெரிந்ததை
நல்லதை
மட்டும்
கற்றுக்கொடுப்பது அல்ல
அவர்கள் க்ற்றுக்கொள்ள விரும்பும் ஒன்றை
நீங்கள் கற்றுக்கொண்டு
கற்றுக்கொடுப்பது
ஒரு குழந்தையை நேசித்தல் என்பது .. !!
உங்களின் குழந்தையை மட்டும்
நேசித்தல் அல்ல ?? !! ..
கருத்துகள்