அரசு தரும் டிஜிட்டல் லாக்கர்

அரசு தரும் டிஜிட்டல் லாக்கர்


மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை, பொதுமக்களுக்கு தங்கள் ஆவணங்களைப் பாதுகாப்பாக வைத்திட, டிஜிட்டல் லாக்கர் வசதியை வழங்குகிறது.

அது எப்படி ஆவணங்களைக் கொண்டு போய், க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில் இயங்கும் ஒரு லாக்கரில் வைக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறதா? மேலே படியுங்கள்.





இந்த டிஜிட்டல் லாக்கர் வசதியைப் பெற உங்களுக்கென ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன் எண் இருக்க வேண்டும். ஆதார் அட்டை எண்ணுடன் இந்த லாக்கர் வசதி இணைக்கப்படும். இந்த லாக்கரில்,

உங்கள் ஆவணங்களின் மின்னணு நகல்களைப் பாதுகாப்பாக வைக்கலாம். அரசின் பல்வேறு துறைகள் உங்களுக்கு வழங்கும் டிஜிட்டல் ஆவணங்களையும் இதில் சேவ் செய்து வைக்கலாம். இதில் உள்ள ஆவணங்களில், நீங்கள் உங்கள் மின்னணு கையெழுத்தினையும் (e-signature) போடலாம்.
இதனைப் பெற https://www.digilocker.gov.in/ என்ற தளத்திற்குச் செல்லுங்கள். உங்கள் பிரவுசர் இந்த தளத்தின் பாதுகாப்பு குறித்து சந்தேகச் செய்தி தரும். அதனைப் புறக்கணித்து தொடரவும். ஏனென்றால், அரசு இந்த தளத்திற்கான பாதுகாப்பு சான்றிதழைப் பெறவில்லை என்று தெரிகிறது.

முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், ஆதார் எண், மொபைல் போன் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி போன்ற தகவல்களைத் தரவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும் பணியில் ஒன்றாக, உங்கள் மொபைல் போனுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாஸ்வேர்ட் ஒன்று வழங்கப்படும். இந்த பாஸ்வேர்ட் உங்கள் மின் அஞ்சல் முகவரிக்கும் வழங்கப்படும். இதனை தளத்தில் அதற்கெனத் தரப்பட்டுள்ள இடத்தில் அமைத்து on “Validate OTP” என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். உங்களுக்கான டிஜிட்டல் லாக்கர் தரப்படும். பின்னர், உங்கள் யூசர் நேம், பாஸ்வேர்ட் கொடுத்து, டிஜிட்டல் லாக்கரை இயக்கலாம்.

உங்கள் ஆவணங்களை மின்னணு நகலாக, XML பார்மட் பைலாக இதில் சேமித்து வைக்கலாம். சான்றிதழ் நகல்களை எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் பெயர், பெற்ற நாள் கொண்டு பைலின் பெயரை அமைக்கவும். இதன் மூலம், நாம் நம் விண்ணப்பங்களுடன், சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டவர்களுக்கு, இந்த டிஜிட்டல் லாக்கர் எண்ணைத் தந்துவிட்டால், அவர்கள் இந்த ஆவணங்களைப் பெற்று சரி பார்த்துக் கொள்ளலாம். இதனால், தேவையற்ற வகையில் டாகுமெண்ட் நகல்களை இணைத்து எதற்கும் விண்ணப்பிக்க தேவை இல்லை.
இதில் பதிந்தவுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு Issuer ID வழங்கப்படும். இது வழங்கப்பட்ட பின்னர், அவர் தன் ஆவணங்களை XML பார்மட்டில் பதியலாம்.

பதியப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ஒரு uniform resource identifier (URI) தரப்படும். அது நம் ஆதார் எண்ணுடனும் இணைக்கப்பட்டிருக்கும். நம் ஆவணங்களைக் காட்ட விரும்புபவருக்கு இந்த முகவரியைத் தரலாம். அவர் இதே போல, பயனாளராக ஓர் அக்கவுண்ட் திறந்து ஆவணங்களைப் பார்வையிடலாம். ஒவ்வொருவருக்கும் 10 எம்.பி. இடம் கொண்ட டிஜிட்டல் லாக்கர் தரப்படுகிறது.

அரசு அண்மையில் தான் இந்த திட்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. இதனைச் சோதனை முறையில் மட்டுமே பயன்படுத்திப் பார்க்கலாம். இது முழுமையான பின்னர், இது குறித்த மத்திய அரசின் ஆணை வெளியிடப்படும். இதன் வெற்றி, நம் அரசு துறைகள் மற்றும் நம்மிடம் உள்ளது.கூடுதல் தகவல்களை அறிய http://cdn.mygov.nic.in/bundles/frontendgeneral/images/beta-release-of-digital-locker-system.pdf என்னும் இணைய தளம் செல்லவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!