பெண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழம் !

பெண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழம் !


இரும்புச்சத்து நிறைந்த பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. கருவுற்ற பெண்ணுக்கு பேரீச்சம் பழம் கொடுக்க வேண்டும். நாள்தோறும் ஐந்து பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.
ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை பேரீச்சம் பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக நீக்கி விடலாம். பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை. மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.
இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.

மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும். நல்ல தரமான கொட்டையில்லாத பேரிச்சம் பழங்களை கண்ணாடி பாட்டிலில் போட்டு அப்பழங்கள் மூழ்கும்படி, சுத்தமான தேனை ஊற்ற வேண்டும்.மூன்று நாட்கள் வரை நன்கு ஊறியதும், தினந்தோறும் காலையில் மூன்று பழங்களும், இரவில் மூன்று பழங்களும் தொடர்ந்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாய் அடைப்புகள் கட்டாயம் நீங்கி விடும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் வரை சாப்பிட்டு வரலாம்.

இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். மேலும் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலுடையது. வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். பேரீச்சம் பழத்தைப் பாலில் போட்டுக் காய்ச்சி ஆறிய பின் பழத்தைச் சாப்பிட்டுப் பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.

முதியோருக்குப் பேரீச்சம் பழம் மிகச் சிறந்தது. பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்துப் பாலில் கலந்து கொதிக்க வைத்துச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கை, கால் தளர்ச்சி குணமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!