இது மனைவியை மயக்க மட்டும்தான்....
கல்யாணம் ஆகாதவர்கள் வேண்டுமானால் இதை யூஸ் பண்ணி பெண்களை மயக்க டிரைப் பண்ணலாம். மயக்குங்க ஆனா நீங்க மயங்கிடாதீங்க. பெண்களின் அன்பை பெறுவது எளிதுதான். இதோ அதற்கான வழிகள்…..
1. மதித்தல் வீட்டு வேலையைத் தவிர மற்ற துறைகளிலும் நிறைய சாதிக்க முடியும் என்று நிருபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே மனைவியின் திறமையை மதியுங்கள் & ஊக்குவியுங்கள் வேற வழியில்லை வீட்டு வேலைகளை நீங்க தான் நண்பர்களே செய்ய வேண்டும்.. என்னை அடிக்க வர வேண்டாம் ஒகேவா? பெண்களை மயக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல. முதல் ஐடியாவிற்க்கே சோர்ந்து போனா எப்படி?
2.கனவுகள் பெண்களுக்கென சில கனவுகளும் இலட்சியங்களும் உள்ளன.அந்த கனவுகளை சிதைத்து உங்கள் பின் வர வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். முடிந்தால் உதவுங்கள். இல்லையென்றால் அமைதியாக வழிவிடுங்கள்.(நண்பரே நீங்கள் என்ன கேட்க வருகிறீர்கள் என்பது எனக்கு புரிகிறது.. அவர்களின் கனவில் புடைவைகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் என்பதுதானே உங்கள் கேள்வி? இதல்லெல்லாம் ஒரு கேள்வியா என்ன? பேசாமல் புடைவைகளை வாங்கி கொடுங்கள்.)இது என்ன என் காசா பணமா?
3.வித்தியாசமான முறையில் சிந்தியுங்கள். மனைவியை சமாதானபடுத்தம் பழைய வழிமுறைகளெள்லாம் (மல்லிகை பூ, அல்வா) இந்த காலத்திற்கு உதவாது. புதிய புதிய முயற்சியில் ஈடுபடுங்கள் .மனைவிக்கு திடீர் ஆச்சிரியம் கொடுக்கும் முயற்சியை கைவிடாதிர்கள் (அதற்க்காக இன்னொரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து இது உனக்கொரு புதிய தங்கை என்று அதிர்ச்சி கொடுக்காதிர்கள்… பெண்பாவம் பொல்லாதது)
4. உணர்வுகளை வெளிபடுத்துங்கள். ஆண்கள் அழக்கூடாது என்பது சரிதான். ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண்களைத்தான் பெண்கள் விரும்புவார்கள் என்பது ரொம்ப உண்மை. அதற்க்காக எப்போதும் அழுமுஞ்சியாக இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது( நண்பரே மனைவி அடிக்கும் போதல்லாம் அழுகாதிர்கள் சில சமயங்களில் சிரியுங்கள். நம்மாளுக்கு மண்டை கழண்டு போய்யிடுச்சுன்னு சில அடிகளோட தப்பிக்கலாம்)
5.ஆலோசனைக் கேளுங்கள். நீங்கள் எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் மனைவியிடம் கலந்து ஆலோசியுங்கள் .அது எதைப்பற்றியது வேண்டுமானலும் இருக்கலாம். மனைவியின் கருத்தைக் கேளுங்கள் அதற்கு மதிப்பு கொடுங்ககள். (நண்பர்களே கருத்தை கேளுங்கள்& மதிப்பு கொடுங்கள் ஆனால் உங்கள் முடிவின் படி நடங்கள்)
6. சமைக்க கற்று கொள்ளுங்கள். பாசத்தில் மட்டும் அல்ல சமையலிலும் கெட்டிக்காரரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். (நண்பர்களே மனைவியிடம் சண்டைப்போட்டு சாப்பாடு கிடைக்காத நாள்களில் இது நமக்கு மிகவும் கை கொடுக்கும்.. மாதத்தில் பாதி நாள் சண்டைதானே?)
7. பேசுங்கள் பெண்களுக்கு பேசுவது என்றால் பிடிக்கும். எனவே எல்லாவிஷயங்களைப் பற்றி பேசுங்கள். அரசியல் , பொருளாதாரம் , ஊழல், உங்கள் லட்சியம் கனவுகள். உங்கள் நண்பர்கள் அடிக்கும் சைட்டுக்கள் எல்லாவற்றையும் பற்றி பேசுங்கள். (நண்பர்களே உண்மை வாழ்வில் பெண்கள் பேசமட்டும்தான் செய்வார்கள். கேட்கமாட்டார்கள் அப்படியே கேட்டாலும் ஏதோ பேசும் சந்தோஷத்தில் உங்களின் புதிய கேர்ல் ப்ரெண்டைப் பற்றி உளறி மாட்டிக்கொள்ளாதிர்கள்)
8.மனைவியின் குடும்பத்தில் பங்கு கொள்ளுங்கள் உங்கள் மனைவி உங்கள் குடும்பத்தோட மட்டும் ஒட்டி போகிவிட வேண்டுமென்று நினைக்காதிர்கள். நீங்களும் மனைவியின் குடும்பத்தாரோடு ஒத்து போங்கள். நண்பரே நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்ததா? நீங்கள் உங்கள் மாமியார் மாமனாரோடுமட்டும் ஒத்துபோகாதீர்கள். மனைவியின் மாமியார் மாமனார் அண்ணண், தங்கைகளை ரொம்பபப நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்
கருத்துகள்