இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆலிவ் எண்ணெய்

படம்
எந்த எண்ணெய் நல்ல எண்ணெய் என்கிற ஆராய்ச்சி இன்று வரை ஓய்ந்தபாடாக இல்லை. இத்தனைக்கும் இடையில் ஆரோக்கியத்துக்கு நான்தான் அத்தாரிட்டி என அமைதியாக ஊடுருவி வருகிறது ஆலிவ் ஆயில். இதயத்துக்கு நல்லது என்கிற உத்தரவாதத்துடன் விளம்பரப்படுத்தப்படுகிற ஆலிவ் ஆயில் உண்மையிலேயே ஆரோக்கியமானதுதானா? விளக்கம் அளிக்கிறார் இதய நோய் நிபுணர் சுபாஷ் ராவ்… ஆலிவ் எண்ணெய் உடல்நலத்துக்கு மிகவும் ஏற்றதுதான். இந்த எண்ணெயில் ஆரோக்கியத்துக்கு துணைபுரிகிற ஒலிக் ஆசிட்(Olic Acid) 55 சதவிகிதம் முதல் 83 சதவிகிதமும், லினோலிக் ஆசிட் (Linoleic Acid) 3.5 சதவிகி தத்திலிருந்து 21 சதவிகிதமும், பால்மிட்டிக் ஆசிட்(Palmitic Acid) 7.5 சதவிகிதம் முதல் 20 சதவிகிதமும், ஸ்டெரிக் ஆசிட் (Stearic Acid) 0.5 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதம் வரையும் லினோலெனிக் ஆசிட்(Linolenic Acid) 1.5 சதவிகிதமும் உள்ளன. இவை தவிர, ஸ்குவாலின் (Squalene) 0.7 சதவிகிதம், பைடோசிரால்ஸ் மற்றும் டோகோசிரால்ஸ் 0.2 சதவிகிதமும் காணப்படுகின்றன. தினமும் 2 டேபிள்ஸ்பூன் அளவு இந்த எண்ணெயை நெய்க்குப் பதிலாக அனைவரும் சாப்பிட்டு வரலாம். ஆலிவ் ஆயில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கு...

கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள்

நம் உடலில் கேன்சர் வர காரணமாக நாம் உண்ணும் தினசரி உணவுகள். கீழ்வரும் உணவுகளை உண்ணும் குடும்பம்; குடும்பத்தோடு விஷம் உண்ணுவது போல். 1. மரபணு மாற்றப்பட்ட உணவு: DNA MODIFIED FOODS/HYBRID: அணைத்து வகை ஹைப்ரிட் காய் கறிகள், சோள உணவுகள் (ஸ்வீட் சோளம்). 2. மைக்ரோவேவில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன் (ACT-II) MICROWAVED POPCORN. 3. கேன் செய்யப்பட்ட உணவு: (CANNED, PACKAGED DRINKS): REAL, TROPICANA போன்ற குளிர்பானங்கள் PACK செய்ய பயன்படும் TETRAPACKINGல் bisphenol-A (BPA) என்ற மூலக்கூறு உள்ளது. உண்ணும் பானத்துடன் இந்த மூலக்கூறு நம் மூளை செல்களை பாதிக்கும். 4.எரிக்கப்பட்ட இறைச்சி: GRILLED MEATS: அதிகமாக நேரம் அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்பட்ட இறைச்சியில் கேன்சர் செல்களை உண்டுசெய்யும் Heterocyclic Aromatic Amines உருவாகிறது. இந்த இறைச்சியை உண்ணும்பொழுது நம் உடலில் நல்ல செல்கள் Heterocyclic Aromatic Aminesவால் சிதைக்கப்பட்டு வளர்ச்சிதை மாற்றங்கள் உருவாகிறது. 5.வெள்ளை சக்கரை: REFINED SUGAR: கரும்பில் இருந்து எடுக்கும் சக்கரையை சுத்திகரிப்பு செய்து வெண்ணிறமாக்க சேர்க்கப்படும் ரசாயனங்கள் சக்கரையை ...

கற்றுக்கொள்ளுங்கள்".

கடுமையாக உழைப்பதை விட திறமையாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்". ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, "சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது....

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 நல்ல பழக்கங்கள்!

குழந்தைகள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய 12 நல்ல பழக்கங்கள்! பெற்றோரின் வளர்ப்பை குழந்தைகளின் நடவடிக்கைகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என்று சொல்வார்கள். அது உண்மை தான். ஏனெனில் குழந்தைகள் குறும்பு செய்தாலும் சரி, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடந்து கொண்டாலும் சரி, அதற்கு முதலில் சொல்வது பெற்றோரின் வளர்ப்பு என்று தான். அந்த வகையில் அனைத்து பெற்றோர்களுமே தனது குழந்தை அனைவரும் அதிசயப்படும் வகையில் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கு முதலில் அனைத்து பெற்றோர்களும் செய்ய வேண்டியது, குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே ஒருசில நல்ல பழக்கங்களை பின்பற்ற வைக்க வேண்டும். அதற்காக குழந்தைகளை வற்புறுத்தி செய்ய வைக்கக்கூடாது. ஏனெனில் அவ்வாறு செய்தால், குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மீது வெறுப்பு வந்துவிடும். எனவே பெற்றோர்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களைச் சொல்லிக் கொடுக்கும் பொழுதே, அதற்கான நன்மைகளையும் வெளிப்படையாக புரியுமாறு சொன்னால், குழந்தைகள் புரிந்து கொண்டு, அதனை விருப்பத்துடன் பின்பற்றுவார்கள். இப்போது குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே சொல்லிக் கொடுக்க வேண்டிய சில நல்ல பழக்கங்களைப் பட்டியலி...

கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்க

கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்க கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம்.  மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் தரலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் உபயோகிக்கலாம்.  மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம். தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினமும் செய்யவும்.

கேரட் ஜூஸ் குடித்தால் இளைக்கலாம்

கேரட் ஜூஸ் குடித்தால் இளைக்கலாம் weight loss with carrot juice # கைப்பிடி அளவு கல் உப்பை சிறு மூட்டையாக முடிந்து, அரிசி மூட்டைக்குப் பக்கத்தில் வைத்தால் பூச்சிகள் அண்டாது. # அரிசி, காய்கறிகளைக் கழுவிய தண்ணீரைச் செடிகளுக்கு ஊற்றினால் நன்றாகச் செழித்து வளரும். # காய்ந்த எலுமிச்சை தோலை அலமாரியில் போட்டால் பூச்சிகள் வராது. # பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளி, செய்தித்தாளில் சுற்றி ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது. # ஆடைகளில் ஸ்கெட்ச் பேனாவால் கறை ஏற்பட்டால், நெயில் பாலிஷ் ரிமூவரைத் தேய்த்தால் கறை நீங்கும். # வெள்ளிப் பாத்திரங்கள் வைத்திருக்கும் பையில் சிறிது கற்பூரத்தைப் போட்டுவைத்தால் வெள்ளி கருக்காது. - செ. தீபாராணி, மேபூதகுடி, இலுப்பூர். # முட்டைகோஸை வேகவைத்து அரைத்து, அதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்துத் தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து குளித்தால் முடி உதிர்வது குறையும். # படிகாரத்தைத் தண்ணீரில் கரைத்து, முகத்தில் தடவிவந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் குறையும். # காஸ் அடுப்பில் சமைக்கும்போது தீயைக் குறைத்து வைத்துச் சமைத்தால் எரிபொருள் செலவு குறைவதுடன், சமைத்த ...

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட் ஷார்ட் கட்

எக்ஸெல் - ஆல்ட்+ஷிப்ட் ஷார்ட் கட் EXCEL SHORTCUT CODE F1 +ALT+SHIFT : புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2 +ALT+SHIFT :அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். F3 +ALT+SHIFT :நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். F6 +ALT+SHIFT :ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும். F9 +ALT+SHIFT: திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும். F10 +ALT+SHIFT: ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். F11 +ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும். F12 +ALT+SHIFT : பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

இளைச்சவனுக்கு எள்ளு’

இளைச்சவனுக்கு எள்ளு’ எனக் கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துக் குறைபாடுள்ளவர்களுக்கு எள்ளு தேவை என்பதே இதன் அர்த்தம். எள்ளின் பயன்களைப் பற்றி நம்மவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்க, அயல் நாடுகளில் எள்ளுக்கு செம கிராக்கி. எள்ளில் உள்ள சத்துக்கள் வெள்ளை எள்ளைக் காட்டிலும் நமது நாட்டில் விளையும் கறுப்பு எள்ளில்தான் அதிக சத்துக்கள் உள்ளன. மக்னீசியம் அதிக அளவில் இருப்பதால், சர்க்கரை நோயைத் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். ஆஸ்துமா மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை அண்டவிடாமல் தடுக்கும். பைட்டோஸ்டீரால் (Phytosterols) எனப்படும் அரிய வகைச் சத்து இதில் இருக்கிறது. இது, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும். செஸமைன் (Sesamine), செஸமொலின் (Sesamolin) ஆகிய லிக்னன் வகை சத்துக்கள் எள்ளில் இருந்து பிரிக்கப்பட்டு உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு மாத்திரை வடிவத்தில் அயல்நாடுகளில் கொடுக்கப்படுகிறது. எள்ளில் இருக்கும் பைட்டிக் அமிலம் இதயநோய்களைத் தடுக்க உதவுகிறது. தாமிரம் மிக அதிக அளவில் உள்ளது. 100 கிராம் எள்ளில், ஒரு நாளின் தேவையைக் காட்டிலும் நான்கு மடங்கு...