கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்க
கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் நீங்க
கண்களைச் சுற்றியுள்ள சருமம் மிக மிக மென்மையானது. தவிர சீக்கிரமே வறண்டு போகக் கூடியது. 25 வயதிலிருந்தே கண்களைச் சுற்றி வரும் சுருக்கங்களை விரட்டும் முயற்சிகளைத் தொடங்கலாம். கண்களைச் சுற்றி கொஞ்சமாக ஐ கிரீம் அல்லது கண்களுக்கான எண்ணெய் தடவி வரலாம். மோதிர விரலால் அழுத்தம் தராமல் மெதுவாக மசாஜ் தரலாம். கண்களில் அரிப்போ, எரிச்சலோ இருந்தால் கைகளால் கண்களைக் கசக்கக் கூடாது. அது சுருக்கங்கள் உண்டாக சுலபமான காரணமாகி விடும். சுருக்கம் மிக அதிகமாக இருந்தால் தரமான ஆன்ட்டி ரிங்கிள் கிரீம் அல்லது பாதாம் ஆயில் உபயோகிக்கலாம். மோதிர விரலால் மிகமிக மென்மையாக மசாஜ் செய்து துடைக்கலாம். தேயிலையைக் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டிக் கொள்ளவும். அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் ஒத்தடம் கொடுப்பது போல தினமும் செய்யவும்.
கருத்துகள்