காய்கறிகளை வாங்கும் போது அவசியம் இத கவனியுங்க
காய்கறிகளை வாங்கும் போது அவசியம் இத கவனியுங்க! இல்லைனா அவ்வளவு தான்! பொதுவாக வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் போது பெரும்பாலும் மொத்தமாக வாங்கி விடுவோம். இவற்றில் பல விஷயங்களை நாம் கவனிக்க தவறி விடுகிறோம் என்பதே உண்மை. நமது வீடுகளில் உள்ள பல விஷயங்களிலும் அப்படி தான். வீட்டிற்கு வாங்கும் பொருட்களை நாம் பார்த்து பார்த்து வாங்க வேண்டியது மிக அவசியம். அவ்வாறு வாங்க விடில் அவை நமது ஆரோக்கியத்தை தான் நேரடியாக பாதித்து விடும். குறிப்பாக பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்கும் போது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் நமது ஆரோக்கியம் தான் முற்றிலுமாக பாதிக்கப்படும். கடையில் காய்கறிகளை வாங்கும் போது அவசியம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். கத்தரிக்காய் பொதுவாக கத்தரிக்காயை வாங்கும் போது அவற்றின் அளவை பார்த்து தான் வாங்க வேண்டும். மேலும், அவை மிகவும் முத்தி இருக்க கூடாது. அப்போது தான் அதன் சுவை கூடுதலாக இருக்கும் மாங்காய் பலர் மாங்காயை வாங்குவதற்கு பதிலாக மாம்பழத்தை வாங்கி விடுவோம். எப்போதும்...