இதுல ஏதாவது ஒன்ன தினமும் சாப்பிடுங்க... உங்க பிபி டக்குனு குறைஞ்சிடும்... உடனே சாப்பிடுங்க

இதுல ஏதாவது ஒன்ன தினமும் சாப்பிடுங்க... உங்க பிபி டக்குனு குறைஞ்சிடும்... உடனே சாப்பிடுங்க
நாள் முழுக்க அலுவலக வேலை, நம்முடைய தினசரி வாழ்க்கை முறை, உணவு, ஆரோக்கியம் என அத்தனை விஷயங்களும் நமக்கு மன உளைச்சலையும் அழுத்தங்களையும் மிக அதிகமாகவே தருகின்றன. இது சாதாரணமாக முடியக்கூடிய விஷயமெல்லாம் கிடையாது. சின்ன சின்ன மன அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். நம்முடைய வாழ்க்கையை அவை காவு வாங்கிக் கொண்டே தான் இருக்கும்.

இந்த மன அழுத்தத்தால் ஏற்படுகிற ரத்த அழுத்தத்தை நம்முடைய உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை மூலம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். அப்படி என்னென்ன உணவுகளின் மூலம் உங்களுடைய உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம்.

மாம்பழம்

உங்களுக்கு பிடித்த சிலவற்றை உங்களுடைய மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு சாப்பிடாமல் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் மனதை உங்களை மீறி கட்டுப்படுத்துகிற பொழுது தான் அது மனதை இறுகச் செய்து ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. அதில் முக்கியமான ஒரு பழ வகை தான் மாம்பழம். மாம்பழத்தில் இருக்கின்ற பீட்டா கரோட்டின் உங்களுடைய ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இந்த கோடை காலத்தில் நிறைய கிடைக்கும்.
மீன்

மீன்கள் உடலுக்கு மிகவும் நல்லது என்பது நமக்கு நன்றாகத் தெரியும். அதிலும் குறிப்பாக சால்மன் மீனில் இருக்கின்ற ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் மிக வேகமாக உங்களுடைய ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. இது நோய் தடுப்பு ஆற்றலைக் கொடுப்பதோடு இதயப் பிரச்சினைகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது.
குடைமிளகாய்

தினமும் இரவு உணவில் குடைமிளகாயைச் சாப்பிட்டு வந்தீர்கள் என்றால் அது உங்களுடைய இதயம் மற்றும் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இந்த குடை மிளகாயில் அதிக அளவிலான வைட்டமின் சி உள்ளது. இதில் மற்ற சிட்ரஸ் பழங்களை விட இதில் ஆன்டி ஆக்சிடண்ட் அதிகமாக இருக்கும். இது நம்முடைய இதய குழாய்கள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

ஆப்பிள்

தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் டாக்டரிடமே போக வேண்டிய தேவை இருக்காது என்று சொல்வார்கள். குறிப்பாக ஆப்பிள் நம்முடைய உயர் ரத்த அழுத்தததோடு போராடி உடலுக்குத் தேவையான நார்ச்சத்தையும் உடலுக்குக் கொண்டு செல்லும்.

கேரட்

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மிகச் சிறந்த மருந்தாக இருப்பது கேரட். கேரட்டிலும் அதிக அளவில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி ஆகியவை சேர்ந்து ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

முட்டை

ரத்த அழுத்தம் உளள்வர்களில் நிறைய பேர் முட்டையை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஏனென்றால் முட்டையில் கொழுப்புச் சத்து இருக்கிறது என்பதால் தான். ஆனால் முட்டை நம்முடைய உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பை தான் தருகிறது. இதனால் கவலைப்படாமல் தினமும் இரண்டு முட்டை வரை சாப்பிடலாம். இதில் புரோட்டீன் அதிக அளவில் இருப்பதால் இது உடலுக்கு வேலை செய்யத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது.


வாட்டர்மெலன்

 இந்த கொழுத்தும் வெயிலில் நம்மை குளுகுளுவென வைத்திருக்க உதவுவது தான் இந்த வாட்டர்மெலன். நம்முடைய உடலில் சூட்டைத் தணிக்கின்ற அருமையான விஷயமாக நம்முடைய உணவில் சேர்க்க வேண்டியது இந்த வாட்டர்மெலன்.

பச்சை வெங்காயம்

 வெங்காயம் இல்லாமல் சமையலே கிடையாது தான். ஆனாலும் நமக்கு எந்த பிரச்நினையும் இல்லாமலா இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். என்ன உணவு சாப்பிட்டாலும் அதனுடன் சிறிதளவு பச்சையாக வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிடுங்கள். உங்களுடைய ரத்த அழுத்தம் வெகுவாக கட்டுக்குள் இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!