குழந்தை
மாடி வீடு,
கோடிகளும் உண்டு.
கெஞ்சாத இடமில்லை,
குழந்தையில்லா ஒரு குறை தான்!
கோடி வீடு
குழந்தைகள் குதூகலம்.
கூரையில்லா குடிசை,
குறை அதுமட்டுந்தான்!
கையில் கணிணி
கை நிறைய காசு
கற்றான் என்னவோ?
சுற்றுகிறான் ஊரெங்கும்!
கண்பட்டு பயனென்ன?
கல்லாதது என் குறை தான்!
கால்களை நான் வருத்தி,
கடத்தியது போதுமடா,
காலமெல்லாம் தெருக்கடையில்
திகட்டியது என் வாழ்க்கை!
படித்தேன் பட்டமெல்லாம்
பறந்தேன் ஊரெல்லாம்,
உறவுகளை பார்ப்பதோ
வருடமொரு முறை தான்!
பட்டாடை பல்லாயிரம்
பல்லிளித்தாய் பகட்டைக்கண்டு!
பாலாடைக்காணா பசிவயிறு,
பார்க்க மறந்ததேன்
பக்கத்து வீட்டில்!
பழகுவதற்க்குள் பெற்ற இன்பம்,
பழங்கதையாய் ஆக்கி வைத்தாய்,
தொலை நோக்கென வாதித்து
தொலைத்தாய் தொடங்கியதை!
எண்ண ஓட்டங்கள்
ஓடுது பார் அங்குமிங்கும்,
இருக்கும் அடுத்தோரை
ஆராய்வதை நிறுத்திவிடு!
களைந்திடுவோம் காழ்ப்புணர்வை
கண்டிடுவோம் அகமகிழ்வை
வேடமிட்டது போதும்
வெறுத்திடுவோம் இவ்விழிச்செயலை!
கோடிகளும் உண்டு.
கெஞ்சாத இடமில்லை,
குழந்தையில்லா ஒரு குறை தான்!
கோடி வீடு
குழந்தைகள் குதூகலம்.
கூரையில்லா குடிசை,
குறை அதுமட்டுந்தான்!
கையில் கணிணி
கை நிறைய காசு
கற்றான் என்னவோ?
சுற்றுகிறான் ஊரெங்கும்!
கண்பட்டு பயனென்ன?
கல்லாதது என் குறை தான்!
கால்களை நான் வருத்தி,
கடத்தியது போதுமடா,
காலமெல்லாம் தெருக்கடையில்
திகட்டியது என் வாழ்க்கை!
படித்தேன் பட்டமெல்லாம்
பறந்தேன் ஊரெல்லாம்,
உறவுகளை பார்ப்பதோ
வருடமொரு முறை தான்!
பட்டாடை பல்லாயிரம்
பல்லிளித்தாய் பகட்டைக்கண்டு!
பாலாடைக்காணா பசிவயிறு,
பார்க்க மறந்ததேன்
பக்கத்து வீட்டில்!
பழகுவதற்க்குள் பெற்ற இன்பம்,
பழங்கதையாய் ஆக்கி வைத்தாய்,
தொலை நோக்கென வாதித்து
தொலைத்தாய் தொடங்கியதை!
எண்ண ஓட்டங்கள்
ஓடுது பார் அங்குமிங்கும்,
இருக்கும் அடுத்தோரை
ஆராய்வதை நிறுத்திவிடு!
களைந்திடுவோம் காழ்ப்புணர்வை
கண்டிடுவோம் அகமகிழ்வை
வேடமிட்டது போதும்
வெறுத்திடுவோம் இவ்விழிச்செயலை!
கருத்துகள்