காதல்
அவள் விழிகள்.....
பேசாமல் பேசும் பல மொழிகள்
ஆனந்தித்தின் பிரதிபலிப்பு
அகலமாய் சிரிக்கும் அழகு விழிகள்
காதலுடன் கலந்து விட்டால்
மின்மினியாய் சிமிட்டும் அந்த கயல் விழிகள்தேடி தேடி ஒய்ந்து, தேய்பிறையாய் அவ்விழிகள்
தேடியது கிடைத்தது கனமழையாய் அவள் விழிகள்உற்சாகத்தின் உச்சி,
எவ்ரெஸ்ட்டாய் குளிரும் குமுதவிழிகள்
வெறுத்து வெகுன்டெழுந்தாள் அக்னியாய் அவ்விழிகள்
அவள் விழிகள் பேசாமல் பேசும் பல மொழிகள்
கருத்துகள்