காதல் மழை...

சங்கீதமாய்,

ரம்யமாய்,

பெண்மையாய்,

யாழிசையாய் இருக்கிறதுஉன் பெயர்..

அடைக்கலம் தருபவள் என்றுஅர்த்தமாம் உன் பெயருக்கு..

அதை உண்மையாக்குஎன் காதலுக்கு அடைக்கலம் கொடுத்து..

என் பெயரையாராவது கேட்டால் கூடஉன் பெயரை சொல்லிஅசடு வழிகிறேன்..

எந்த மொழியில் எழுதினாலும்அழகாய்த்தான் இருக்கிறதுஉன் பெயர்..

உன் பெயரை சொல்லியாராவது அழைத்தால்உனக்கு முன்னால் திரும்புகிறேன்அனிச்சையாய் நான்..

அழகு குழந்தைகளைபார்க்கும் பொழுதெல்லாம்உன் பேர் சொல்லியே கொஞ்சுகிறேன்..

என்னையுமறியாமல்..

உன் பெயர் தாங்கியசாலையோர பெயர் பலகைகள் மட்டும்அதிகமாய் மிளிர்கின்றன..காத்திருக்கிறேன்..

எப்போது வெளிவரும்?உன்பெயரில் தொடங்கும் திரைப்பாடல்!

கவிதை ஒன்று எழுத நினைத்துகாகிதம் பல கசக்கி,

கடைசியில்உன் பெயர் மட்டும் எழுதி முடிக்கிறேன்,

காவியம் எழுதிய திருப்தியில்..
காதல் மழை...
காதலிப்பவர்கள்சொர்க்கத்தை அடைவார்கள்..

காதலிக்கப்படுபவர்கள்சொர்க்கத்தை உணர்வார்கள்..

**************

கலைந்து போன ஒரு மேகத்தின் கண்ணீர் துளி இந்த காதல் மழை..

நனைவோம் வாருங்கள்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!