’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் அரபு சீமையிலே... - 19 Posted: 12 Sep 2010 09:46 PM PDT நிகழ்ந்த மாற்றமேதும் அறியாமல், தோழர்கள் வாளேந்தி உமர் வருவதைக் கேள்வியுற்றனர்! கிலேசமுற்றனர்! சவாலிட்ட வாலிபரை எண்ணி கலக்கமுற்றனர்!! தட்டப்பட்ட கதவின் கிட்டேவந்தனர் தோழர்கள்; நோக்கம் அறிந்தபின் தாக்குவோம்; ஆக்கம் கொண்டிடின் போற்றுவோம், என்று திறக்கின்றனர் கதவை! உள்ளே விட்டனர் இப்னு கத்தாபை!! பெருமானார், கத்தாப் மைந்தரை நோக்கி வீசினார் சில கேள்விகள், இஸ்லாத்தை வளரச் செய்ய, அவையெல்லாம் வேள்விகள்; "முறை மாறும் பாதையா? இறைக் கோபம் தேவையா? கல்லுருவைக் கடவுளாகத் தொழுவதை விடமாட்டீரோ?? அல்லாஹ்வை ஏகனாகத் தொழ வரமாட்டீரோ?" கனிவுடன் விளம்ப, தெளிவுடன் சொன்னார், கருத்ததில் கண்ணியம் ஏற்றிட்ட உமரவர்; "தேனையொத்த தீனை நான் ஏற்றுக் கொண்டேன் நாயகரே! வானைப் படைத்த ஏகனவன் தூதர் நீங்கள் தூயவரே!!" அகமும் முகமும் குளிர, கட்டியணைத்தார்! அல்லாஹு அக்பர் என்றே மும்முறை முழங்கினார்!! பெருமானார், முந்திய இரவு தொழுது, இறையை நோக்கி அழுது, கேட்ட தேவை நிறைவேறியது! நபித்துவம் பெற்ற ஆறாம் ஆண்டில், இஸ்ல...