இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் நான் எழுத்தாளராகி சம்பாதிக்க முடியுமா? Posted: 30 Jul 2012 01:41 AM PDT நான் எழுத்தாளராக முடியுமா? அப்படி ஆனால் சம்பாதிக்க முடியுமா? என் எழுத்துக்களை மக்கள் ரசிப்பார்களா? இவை உங்கள் கேள்விகள் என்றால் முடியும், ஆம் என்று தான் சொல்வேன். ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானாலும் எழுதலாம். எப்படி ஆரம்பம் செய்வது என்று தெரியவில்லையா? நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றி எழுதினாலே போதும். உதாரணமாக, தலையை உயர்த்திப் பாருங்கள். கடிகாரம் தெரிகிறதா? இப்போது அதைப் பற்றி எழுதுங்கள். அதாவது, குறைந்த நேரத்தில் அதிக வேலையை முடிப்பது பற்றி எழுதுங்கள். உங்கள் தலைப்பை வைத்து, ஏன், எப்படி, எதற்கு, யாருக்கு, எவ்வாறு போன்ற கேள்விகளை உருவாக்கினால் அதற்குக் கிடைக்கும் பதில்கள் ஒரு நல்ல கட்டுரையைத் தந்து விடும். சரி எழுதிவிட்டீர்கள். அதை எப்படி பிரபலப்படுத்துவது? அதனால் என்ன பயன்? அதில் எப்படி சம்பாதிப்பது? அதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வீதி.காமில் உங்கள் எழுத்துக்கு பணம் தந்து உற்சாகப்படுத்துகிறார்கள். சுலபமாக அதே சமயம் நன்றாக எழுதுவது எப்பட...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் ஆத்தோரம் மணலெடுத்து அழகழகா வீடு கட்டி...... Posted: 25 Jul 2012 09:43 AM PDT சின்ன வயசுல மணலில வீடு கட்டி விளையாடாதவங்க யாரு இருக்க முடியும். இப்பவும் நான் மணலைப் பார்த்தா விளையாட ஆரம்பித்து விடுவேன். இப்படித்தான் கொச்சி போயிருந்தப்ப ஃபோர்ட் கொச்சியில் ஈர மணலைப் பார்த்ததும் உட்கார்ந்துவிட்டேன். என் மகள் மற்றும் மகனுடன் போட்டி போட்டுக் கொண்டு யார் அழகாக மணலில் சிற்பம் செய்றாங்கன்னு பார்க்கலாம் என்றேன். என்னவர் சரி நான் தீர்ப்பு சொல்கிறேன் என்றார். மூவரும் அவரவர் வயதுக்கு தக்கபடி உருவாக்கினோம். பள்ளி நாட்களின் ஞாபகம் என் கண் முன்னால் தோன்றியதால் பள்ளிச் சீருடையை நான் மணலில் உருவாக்கினேன். குழந்தைகளோடு குழந்தையாகிப் போனேன். இதோ அந்த மணல் சிற்பம். என் மகள் மிக்கி மவுஸும் என் மகன் மலையும் உருவாக்கினார்கள். மகனுக்கே ஜெயம் ஏனென்றால், நாங்கள் ஒரு முறை சிற்பம் செய்வதற்குள் அவன் அழித்து அழித்து ஐந்தாறு முறை கட்டிவிட்டான். ஆக அவனுடைய முயற்சிக்கு அங்கீகாரம் தர வேண்டுமல்லவா? மேலும் விவரங்களும் புகைப்படங்களும் இங்கே: Art of Growing Hill...

’என்’ எழுத்து இகழேல்

படம்
’என்’ எழுத்து இகழேல் வீட்டில் பாம்பு Posted: 23 Jul 2012 12:40 PM PDT நேற்று இரவு சுமார் ஒரு மணி இருக்கும் ஐந்து அடி நீள நாகப்பாம்பு எங்க வீட்டு கிட்சனுக்குள். எதேச்சையாக தண்ணீர் குடிக்கப் போன என்னவர் அதைப் பார்த்து விட்டு அலற, கம்பு, தடி சகிதம் பயந்து நடுங்கியபடி மெதுவாக அடி மேல் அடி வைத்து அதை நெருங்கினோம். வெங்காயக் கூடையின் நடுவே ஒளிந்திருந்தது. நாகத்தை துரத்திவிட நாங்கள் செய்த முயற்சி எல்லாம் தோற்றுவிட கடைசியாக ஒன்னரை மணி நேர போராட்டத்துக்குப் பின் அதை அடித்துவிட்டோம். படம் எடுத்து ஆடும் பாம்பை முதன் முறையாக மிக அருகில் பார்த்தும் அதன் சீறும் சப்தத்தைக் கேட்டும் வெலவெலத்துப் போனேன். சொட்டும் வேர்வையோடு அதை வேட்டையாடிய பெருமித உணர்வுடன் மச்சான் செத்த பாம்பை தடியில் ஏந்திக் கொண்டிருக்கிறார். மேலும் விவரங்கள் மற்றும் படங்கள்: Snake In My House - சுமஜ்லா ரீடரில் என் பதிவுகளைப் படிக்கும் அனைவருக்கும் என் நன்றி! You are subscribed to email updates from ‘என்’ எழுத்து இகழேல் To stop receiving these emails, you may ...