’என்’ எழுத்து இகழேல்
’என்’ எழுத்து இகழேல் படிக்காமலே மதிப்பெண் பெற உதவும் கல்விமுறை Posted: 02 Feb 2013 11:23 AM PST மகன் லாமின் முன்பு மெட்ரிக் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பக்கம் பக்கமாக fair noteல் எழுத வேண்டும். பொதுவாகவே எழுதுவதென்றால் அவனுக்கு அவ்வளவு கஷ்டம். எழுதி முடிக்கவில்லை என்ற காரணத்துக்காக பள்ளி நேரம் முடிந்த பிறகும் பள்ளியில் இருத் திக் கொள்வார்கள். பல நேரங்களில் பசியோடு வாடிப் போய் கிடக்கும் பிள்ளையை நாங்கள் 7 மணிக்கு போய் அழைத்து வருவோம். அவனுடைய ஃபேர் நோட்டில் நானும் சில நேரம் எழுதிக் கொடுத்திருக்கிறேன். மார்க்கும் சுமாராகத் தான் வாங்குவான். முடிவில் இது ஒத்துவராது என்று வேறு பள்ளிக்கு மாற்றி விட்டோம். இப்போது படிக்கும் பள்ளியில் சிபிஎஸ்இ சிலபஸ் ஃபாலோ பண்ணுகிறார்கள். இந்த சிலபஸ் கஷ்டம், புரிந்து படித்தால் தான் முடியும் என்று எல்லாரும் பயமுறுத்தினார்கள். இருந்தாலும் பார்க்கலாமே என்று கட்டணத்தையும் பொருட்படுத்தாமல் சேர்த்தோம். இப்போது லாமின் 4த் படிக்கிறான். வகுப்பில் முதல் இரண்டு இடத்துக்குள் வருகிறான். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால...