உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்!

உடல் எடையைக் குறைக்க உதவும் பழங்கள்!


ரு காலத்தில் போதுமான, சத்தான உணவின்றி மக்கள் அவதிப்பட்டு வந்தார்கள் என்றால், தற்போது அதிகப்படியான உணவால் அல்லது உடல் உழைப்பின்மையால் உடம்பு பெருத்து அவதிப்படும் நிலை அதிகரித்திருக்கிறது.

'எனக்கு எடை கூடிடுச்சு... எப்படிக் குறைக் கிறதுன்னு தெரியலை' என்று பலரும் கவலையோடு பேசுவதைக் கேட்க முடிகிறது.

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சில நாட்கள் தீவிர உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள், பின்னர் அதற்கும் சேர்த்து கூடுதலாக சாப்பிடுவதுதான் நடக்கிறது.
'ஜிம்'மில் பணம் கட்டி சில நாட்கள் ஆர்வமாக உடற்பயிற்சி அல்லது ஜாகிங் என்று இருப்பவர்கள் அடுத்து அதை மறந்தே விடுகிறார்கள்.

சிலரோ விளம்பரங்களை நம்பி, 'கஷ்டமில்லாமல்' உடலைக் குறைக்க எண்ணி, மருந்து, மாத்திரைகள் என்று நாடுகிறார்கள். ஆனால், செயற்கை மருந்துப் பொருட்களின்றி, இயற்கையான, ஆரோக்கியமான உணவுகளின் மூலமே உடல் எடையை குறைக்க முடியும்.

அந்த வகையில், உடல் எடையைக் குறைக்க உதவும் சில பழங்களைப் பற்றிய விவரங்கள் இவை...

தர்பூசணி

தர்பூசணி பலருக்கும் பிடித்த பழம். குறிப்பாக, பயண வேளைகளின்போது தாகம் தணிக்க இது மிகவும் உதவுகிறது. தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் இருப்பதால் இதனை உட்கொண்டால் உடல் வறட்சி அடையாமல் இருப்பதுடன், அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுக்கும். இதனால் உடல் எடையை அதிகரிக்காது.

பப்பாளி

இதில் கொழுப்பு, கலோரிகள் மிகவும் குறைவாக இருப்பதால், உணவுக் கட்டுப்பாட்டின்போது பப்பாளியைச் சேர்த்துக்கொண்டால், உடல் எடை குறைவதுடன், வயிற்றுப் பிரச்சினைகளும் தீரும்.

லிச்சி

நார்ச்சத்து அதிகம் கொண்ட லிச்சி, மிகவும் இன்சுவையான பழம். இந்தப் பழமும் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும்.

பிளம்ஸ்

பிளம்சில் உள்ள சிட்ரிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்துவிடுகிறது. மேலும் உடலில் தங்கியுள்ள நச்சுப்பொருட்களையும் வெளியேற்றிவிடும்.

மாம்பழம்

பலரும் விரும்பிச் சாப்பிடும் மாம்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. உடல் எடையைக் குறைக்க விரும்பும் நபர்களுக்கு உகந்த பழம் இது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவாக‌ வெளியேறுவதைக் கட்டுப்படுத்த இயற்கையான‌ வழிமுறைகள்!

காம சூத்திரம் சொல்லும் முத்தம்

ஆண்மை அதிகரிக்குமா ? ஓர் அலசல் !!