பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
பல உடல்நல பயன்களை கொண்டுள்ள எளிய மூலப்பொருளான பூண்டு இல்லாமல், இந்தியா உணவுகள் முழுமை அடையாது. மிகவும் திடமானதாகவும், கசுப்புத்தன்மையுடனும் இருந்தாலும் கூட, அது சேர்க்கப்படும் உணவில் அதீத சுவை மணம் கூடும். அதேப்போல் அதன் மருத்துவ குணங்களைப் பற்றி குறிப்பிடாமல், பூண்டை பற்றிய விளக்கம் நிறைவு பெறாது. நினைவிற்கு எட்டாத காலம் முதல், பல வித நோய்கள் மற்றும் மருத்துவ நிலைகளை தடுக்கவும், அதற்கு சிகிச்சை அளிக்கவும், இந்த அதிசய மூலிகை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!பூண்டில் ஆற்றல் மிக்க பல வகையான சல்பர் கலவைகள் உள்ளது. பூண்டில் இருந்து வரும் காரமான நாற்றத்திற்கு இதுவே காரணமாக விளங்குகிறது. அதில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் அல்லிசினில் பாக்டீரியா எதிர்ப்பி, நுண்ணுயிர் எதிர்ப்பி, பூஞ்சை எதிர்ப்பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் வளமையாக உள்ளது.பச்சை மிளகாயை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்!!!பூண்டை நன்றாக நறுக்கினாலோ அல்லது துண்டு துண்டாக வெட்டினாலோ அல்லது மசித்தாலோ அல்லிசினால் கிடைக்கும் உடல்நல பயன்களை திரட்டிடலாம். பூண்டில் செலினியமும் அதிகமாக உள்ளது. அஜோன், அல்லின், அல்லிசின் போன்ற மூலப்பொருட்களுடன் கூடிய பூண்டினால் நம் உடலின் சுற்றோட்ட, செரிமான மற்றும் நோய் எதிர்ப்புத் திறன் அமைப்புகளின் மீது சிறந்த தாக்கம் இருக்கும். மேலும் இரத்தக் கொதிப்பை குறைக்கவும், நச்சுத்தன்மையை நீக்கவும், உட்காயங்களை குணப்படுத்தவும் கூட பூண்டு பயன்படுகிறது.இதோ, பூண்டினால் ஏற்படும் 15 உடல்நல பயன்கள், உங்களுக்காக!
பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி பாக்டீரியா எதிர்ப்பி மற்றும் நச்சுயிர் எதிர்ப்பி குணங்களுக்காக நன்கு அறியப்படுவது தான் பூண்டு. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை, ஈஸ்ட் மற்றும் புழு தொற்றுக்களைக் கட்டுப்படுத்த இது உதவிடும். ஈ.கோலி, சால்மோனெல்லா எண்டெரிடிடிஸ் போன்ற பாக்டீரியாக்களை கொல்வதன் மூலமாக உணவு நச்சுகளை தடுப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது நற்பதமான பூண்டு.
கருத்துகள்